
It department raided 40 places in Tamil Nadu
தமிழகத்தில் 40க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள்.
சென்னை துறைப்பாக்கத்திலும் சோதனை,தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் நிலக்கரி இறக்குமதி இடத்திலும் சோதனை.
தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் 40க்கும் மேற்பட்ட இடங்களில் திடீரென்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள்.
சென்னை,படூர்,சென்னை புறநகர் பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது,செங்கல்பட்டு மாவட்டம் படூர், சென்னை துரைப்பாக்கத்தில்,சோதனை நடத்தப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகரங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது.
30க்கு மேற்பட்ட இடங்களில் சென்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது,விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
செந்தில் பாலாஜி கைது செய்த பிறகு தமிழகம் முழுவதிலும் வருமானவரித்துறை அமலாக்கத்துறை அவ்வப்போது திடீர் திடீர் என்று திமுக அரசை நோக்கி சோதனைகளில் ஈடுபடுவது கேள்விக்குறியாக உள்ளது.
செந்தில் பாலாஜி மூலம் பல்வேறு தகவல்களை திரட்டப்பட்டுள்ளதால்.
இந்த சோதனை மேலும் நீடிக்கும் இதனால் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் இதில் சிக்குகிறார்கள் என பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதில் மிகப்பெரிய குளறுபடிகள், ஊழல்கள் நடைபெறுவதாக திரு சவுக்கு சங்கர் அவர்கள் தெரிவித்தார்.
குறிப்பாக நிலக்கரி இறக்குமதி செய்வதில் நிலக்கரியின் தரம் மிக மோசமாக இருக்கிறது,இதனால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்ட ஈடு என்று தெரிவித்தார்.
நிலக்கரி சுரங்கத்தில் சோதனை செய்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று அவர் தனது சமூக ஊடக தளங்களில் பேட்டி கொடுத்து ஒரு வாரம் சென்ற நிலையில்.
தற்போது இன்று காலை திடீரென்று தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் குறிப்பாக நிலக்கரி இறக்குமதி செய்யும் இடத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளது மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சவுக்கு சங்கரை சமாளிக்க முடியாமல் திணறும் திமுக
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரு சவுக்கு சங்கர் அவர்கள் மீது நான்கு வழக்குகள் திமுக அரசால் பதிவு செய்யப்பட்டது இதிலிருந்து அவர் வெளிவந்த பிறகு.
இதன் பக்க விளைவை திமுக அரசு நிச்சயம் சந்திக்கும் என்று அவர் வெளிப்படையாகவே பேட்டி தெரிவித்தார்.
அதன்பிறகு படிப்படியாகவே திமுக அரசருக்கு மிகப்பெரிய தலைவலியாக ஒற்றை இராணுவமாக திரு சவுக்கு சங்கர் அவர்கள் அமைந்து விட்டார் என்று குறிப்பிடலாம்.
செந்தில் பாலாஜி மிகப்பெரிய அளவில் 150 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த பிரம்மாண்டமான வீடு திரு சவுக்கு சங்கர் அவர்களால்.
வீட்டின் கட்டுமான பணிகள் முழுவதும் நிறுத்தப்பட்டு அந்த வீடு அமலாக்க துறையால் சீல் வைக்கப்பட்டு கையாகபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது திரு சவுக்கு சங்கர் என்பது அனைவரும் அறிந்தது,சவுக்கு சங்கர் அவர்கள் செந்தில் பாலாஜி வீடு கட்டும் இடத்திற்கு நேரடியாகவே சென்று புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
இதன் பிறகு தான் பிரச்சனை என்பது செந்தில் பாலாஜிக்கும்,திமுக அரசிற்கும் தொடங்கியது,புதிய வீடு கட்டுமான இடத்தில் திடீரென்று நுழைந்த அமலாக்கத்துறை அந்த வீடு கட்டும் நிலம் எப்படி வாங்கப்பட்டது.
இது குறித்த தகவல்கள் திருத்தப்பட்டதால் அந்த வீடும் கட்டும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டது.
இதன் பிறகு செந்தில் பாலாஜியும் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளிவர முடியாமல் தவித்து வருகிறார்.
திரு சவுக்கு சங்கர் அவர்கள் ஊடகங்களில் எந்தெந்த துறைகளில் எங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது என்று தெரிவித்து சில நாட்களுக்குள்.
அந்த இடத்தில் அமலாக்கத்துறை வருமானத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவது திமுக அரசுக்கு மிகப்பெரிய ஒரு தலைவலியாக அமைந்துவிட்டது.
குறிப்பாக மணல் அள்ளுவதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெறுவதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார் அதன் பிறகு சில நாட்கள் கழித்து அமலாக்கத்துறை தமிழக முழுவதும் மணல் குவாரிகளில் சோதனை ஈடுபட்டது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திரு சவுக்கு சங்கர் அவர்கள் நிலக்கரி இறக்குமதி செய்வதில் மிகப்பெரிய ஊழல் தரமான நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதில்லை என்று பேட்டி தெரிவித்தார்.
குறிப்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனை செய்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று தெரிவித்தார் அவர் தெரிவித்த சில நாட்களுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
தற்போது நிலக்கமறி இறக்குமதி செய்யும் இடத்தில் சோதனை செய்யப்படுவது என்பது திமுக அரசுக்கு மிகப்பெரிய ஒரு தலைவலியாக இருக்கிறது.
சவுக்கு சங்கர் பேட்டியில் கொடுக்கும் அனைத்து தகவல்களும் அமலாக்கத்துறை,வருமானத் துறை அதிகாரிகள் பயன்படுத்தி சோதனையில் ஈடுபடுவது.
திமுக அமைச்சர்களுக்கு தலைவலியாக இருக்கிறது,இந்த சவுக்கு சங்கரை சமாளிக்க முடியாமல் திமுக அரசு தற்போது திணறி வருகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்