TECH

JIO தொலைபேசி எண்களுக்கு வரும் புதிய மாற்றம் ரூபாய் 499 கட்டணம் செலுத்த வேண்டும் ஏன்..! Jio customers choose favorite number phone numbers

Jio customers choose favorite number phone numbers

Jio customers choose favorite number phone numbers

JIO தொலைபேசி எண்களுக்கு வரும் புதிய மாற்றம் ரூபாய் 499 கட்டணம் செலுத்த வேண்டும் ஏன்..!

ஜியோ ரிலையன்ஸ் நிறுவனம் ஆனது ஜியோ தொலைபேசி நம்பர்கள் தொடர்பாக ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதனால் ஜியோ பயனர்கள் என்ன மாதிரியாக பயன்பெறப் போகிறார்கள் என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

ஜியோ நிறுவனம் ஆனது ஜியோ சாய்ஸ் (Jio Choice) என்கின்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதன் பெயர் குறிப்பிடுவது போலவே இது அனைத்து ஜியோ பயனிலாளர்களுக்குமான ஒரு வசதி இல்லை இது யாருக்கெல்லாம் தேவையோ அவர்கள் மட்டும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜியோ விருப்பமான தேர்வு வசதியின் கீழ் உங்கள் தொலைபேசி நம்பரை நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.

அதாவது உங்களுடைய புதிய ஜியோ தொலைபேசி நம்பரில் உங்களுடைய கடைசி 4 முதல் 6 இலக்க எண்களை உங்கள் விருப்பப்படி நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.

பிடித்தமான எண்களை எவ்வாறு தேர்வு செய்வது

குறிப்பாக உங்களுடைய பிறந்த நாள் தேதியை நீங்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணின் கடைசி 4 அல்லது 6 எண்களாக வைத்துக் கொள்ளலாம்.

ஜியோ நிறுவனம் இனிவரும் காலங்களில் இந்த வசதியை அனைத்து புதிய கஸ்டமருக்கு தேர்வு செய்ய இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.

உங்களுடைய பிறந்தநாள், உங்களுடைய திருமண நாள், உங்களுக்கு பிடித்தமான எண்கள், என உங்களுக்கு பிடித்தமான எண்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

உங்களுடைய அதிர்ஷ்ட எண்னாக (Your Lucky Numbers) நீங்கள் கருதும் எண்களை கூட நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த வசதியை எப்படி தேர்வு செய்து கொள்வது

இதை செய்ய ஜியோ வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Jio.com தேர்வு செய்யவும் (Self Care Section) இப்போது ஜியோ இணையதளத்தில் கிடைக்கும் (Choice Number) பிரிவிற்குள் செல்ல வேண்டும்.

மேலே சொன்ன வழிமுறைகள் குழப்பமாக இருந்தால் நேரடியாக இந்த https://www.jio.com/selfcare/choice-number/இணையதளத்திற்கு செல்லவும்.

பிறகு உங்கள் ப்ரீபெய்டு எண் (Prepaid Number) அல்லது போஸ்ட் பெய்டு ஜியோ தொலைபேசி (Postpaid Jio phone number) எண்ணில் நீங்கள் விரும்பும் கடைசி 4 முதல் 6 இலக்க எண்களை உள்ளிடவும்.

எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய அல்லது உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எண்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இப்போது நீங்கள் கட்டணம் செலுத்தும் பிரிவுக்கு சென்று ரூபாய் 499 செலுத்த வேண்டும் பணம் செலுத்திய பிறகு உங்கள் புதிய ஜியோ எண் 24 மணி நேரத்திற்குள் செயல்பட தொடங்கிவிடும்.

இதை செயல்முறைகளை உங்கள் தொலைபேசியில் உள்ள ஜியோ செயலி வழியாகும் கூட செய்யலாம் (Jio app on your phone) என்று நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.

இது போன்ற வசதி இப்பொழுது ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது இனிவரும் காலங்களில் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இந்த வசதியை அறிமுகம் செய்யலாம்.

இதனால் உங்களுக்கு பிடித்தமான எண்களை நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது உங்களுக்கு பிடித்த காதலி அல்லது காதலன் பிறந்தநாள் தேதியைக் கூட உங்களுடைய தொலைபேசி எண்களாக நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

High mileage two wheelers in india 2023

What is POCSO Act in full details in tamil..!

Best cooking oil for heart health in tamil..!

What is your reaction?

Excited
0
Happy
3
In Love
1
Not Sure
1
Silly
0