
Jio laptop specifications price launching date 2023
தொலைத்தொடர்பு சேவையில் அதிரடியான பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வந்த ஜியோ நிறுவனம்.
இப்பொழுது தொலைபேசி போன்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக எடை குறைவான புதிய வண்ணங்களில் புதிய டிசைன்களில் புதிய வகை மடிக்கணினியை அறிமுகம் படுத்தியுள்ளது.
செல்போன் சேவையில் ஜியோ நிறுவனம் ஏற்படுத்திய மாற்றம் குறித்து பரவலாக இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னாடி இணையதளம் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும் அப்படி செய்தாலும் ஒரு ஜிபி 250 ரூபாய் என்று அளவில் இருந்தது.
இப்படி இருக்கையில் தான் அன் லிமிடெட் டேட்டாவை குறைந்த விலைக்கு கொடுத்தது.
அவ்வளவுதான் திடீரென்று தொலைபேசி சேவை உலகத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டு விட்டது.
இந்தியாவில் இதன் காரணமாக மற்ற நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டாலும் மக்கள் அதிக அளவில் இணையதள சேவையை ஜியோ நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்ட பிறகு பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில் தற்போது லேப்டாப் தயாரிப்பில் ஜியோ நிறுவனம் முழு கவனத்தை செலுத்தி உள்ளது.
ஜியோ லேப்டாப் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது,இதனுடைய விலையும் இந்தியர்கள் எளிதில் வாங்கும் அளவில் இருக்கிறது.
ஜியோ லேப்டாப் விவரக்குறிப்புகள்
ஏழை எளிய கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் கணினி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதனை ஜியோ நிறுவனம் வெளியிடுகிறது என்று அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
இவ்வளவு குறைவான விலையில் லேப்டாப்பை Jio Company அறிமுகம் செய்துள்ளது,இதன் சிறப்பம்சம் எடை குறைவு என்பதுதான்.
அதாவது இது ஒரு கிலோவுக்கு குறைவாக இருக்கும் வெறும் 900 கிராம் தான் எனவே இதன் பயன்படுத்துவது எளிமையாக இருக்கும் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ள Jio Company.
இதனுடைய சிறப்பம்சம் குறித்தும் வெளியிட்டுள்ளது இது 11 LED display,infinity keyboard மற்றும் large track board.
வீடியோ காலில் பேசுவதற்கு ஏற்றார் போல் முன்பக்கம் 2 MP front facing camera கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மினி HDMI port என மூன்று போர்டுகள் இருக்கிறது இது தவிர 3.5 mm headphone,microphone,combo jack மற்றும் 4G,SIM card போட்டு இன்டர்நெட்டை பயன்படுத்தும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வைபை (Wi-Fi) மூலம் இதில் இன்டர்நெட் பயன்படுத்த முடியும் இந்த லேப்டாப் 4GB LPDDR4 RAM உடன் Octo core 2.4GHZ செயலி மூலம் இயக்கப்படுகிறது,இதனை ஒரு முறை charging செய்தால் 8 மணி நேரம் வரை இதனைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட இந்த லேப்டாப்பின் விலை வெறும் 16,999/- ரூபாய் மட்டுமே.
இந்த லேப்டாப்பின் விற்பனை ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் தொடங்குகிறது.
இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது அமேசான் வெப்சைட்டில் இருந்து இதனை நீங்கள் முன்பதிவு பெற்றுக் கொள்ளலாம்.
இத்துடன் அறிமுகம் சலுகை பிரிமியம் லேப்டாப் கேரி கேஸ் 12 மாதங்களுக்கு 100 gb கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் 12 மாதங்களுக்கு விரைவு ஹில் செக்யூரிட்டி ஆகிய வழங்கப்படுகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to secure your pan card..!
Pathira Pathivu some important details..!
What is mutual fund and how to investment..!