
June Matha Rasi Palangal in tamil 2023
ஜூன் மாத ராசிபலன் எந்த ராசிக்கு பணமழை மற்றும் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்..!
ஜூன் மாதம் தொடங்கி உள்ள நிலையில் உங்களுக்கு ராசிக்கு கிரகங்களின் பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
உங்களுடைய லக்னத்திற்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் போன்றவற்றை தெரிந்து கொண்டால்.
அதற்கேற்றார் போல் உங்களுடைய நடைமுறை பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதன் மூலம் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்குதல் அல்லது தற்செயலான நிகழ்வு ஏற்படுவதை தடுக்கலாம்.
இந்து மத புராணத்தின் படி ஜோதிட சாஸ்திரம் என்பது ஒரு நபருக்கு என்ன மாதிரியான பலன்கள் வாழ்க்கை முறை அமைப்பு போன்றவை அமையும் என்பதை.
கிரகங்களின் பெயர்ச்சி மூலம் அறிய முடியும் என்பதை பல ஆண்டுகளாகவே இந்து மதத்தில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையாக இருக்கிறது.
இந்த கட்டுரை ஜூன் மாதத்திற்கு ஜூன் மாதத்தில் 12 ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கிறது என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
மேஷம் ராசி
உங்கள் ராசிகளுக்கு வேலையில் சம்பந்தமான திடீர் மன அழுத்தம் அதிகரிக்கும் ஏனெனில் அவர்களின் கவனம் பலவீனமாக இருக்கும்.
வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள் நீங்கள் ஒரு புதிய அலுவலகத்தை தொடங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ரிஷபம் ராசி
வேலையில் இருப்பவர்கள் ஜூன் மாதம் கடினமாக உழைத்தால் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும்.
தொழில் செய்யக்கூடிய நபர்களுக்கு வெற்றி கிட்டும் பயணங்களின் மூலம் உங்களுடைய வாழ்க்கை முன்னேற்றம் ஏற்படும்
ஆடை மற்றும் மின்னணுவியல் தொடர்பான வணிகம் செய்தால் நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
மிதுனம் ராசி
தொழில் செய்யும் நபர்களுக்கு ஜூன் மாதம் மிக அற்புதமான மாதமாக இருக்கும்.
உங்கள் வருமானம் திடீரென்று பல மடங்கு அதிகரிக்கும் லாபமும் அதிகரிக்கும்.
வேலையில் இருப்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், முதலாளியுடன் உங்களுடைய உறவு கெடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
கடகம் ராசி
தொழில் பங்குதாரர்களுடன் நல்லுறவை பேண வேண்டும் விவாதத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
நீங்கள் உங்களுடைய பணியில் சற்று கடினமாக உழைத்தால் மட்டுமே நற்பெயர் பெற முடியும்.
வேலை அழுத்தம் திடீரென்று அதிகரிக்கும் வியாபாரத்திலும் மற்றும் வாழ்க்கையிலும் இந்த மாதம் நீங்கள் நிதானத்துடன் கட்டாயம் இருக்க வேண்டும்.
சிம்மம் ராசி
ஜூன் மாதத்தில் உங்கள் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும் அரசாங்கத்தால் சில பெரிய அனுகூலங்கள் ஏற்படும்.
உத்தியோகத்தில் பதிவு உயர்வு பெற முடியும் சம்பள உயர்வு அதிகரிக்கும் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகச் சிறப்பான மாதமாக இருக்கும்.
கன்னி ராசி
உங்கள் ராசிக்கு ஜூன் மாதம் பெரும் பணம் கிடைக்கும் உங்கள் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும்.
பணம் உங்கள் கைக்கு வருவதை நீங்கள் உணர்வீர்கள் வேலை செய்பவர்களுக்கே இந்த மாதம் மிகப்பெரிய நற்பலன்கள் கிடைக்கும் உங்கள் முதலாளியின் முழு ஆதரவை பெறுவீர்கள்.
துலாம் ராசி
ஜூன் மாதம் உங்கள் தொழிலுக்கு நல்லது பெரிய பதிவு கிடைத்தால் நல்ல சூழ்நிலை இருக்கும்
வியாபாரிகளுக்கு ஜூன் மாதம் சாதகமாக இருக்கும் வியாபாரத்தில் முகம் தெரியாத நபரின் அதிகமான உதவிகள் கிடைக்கும் இது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும்.
விருச்சிகம் ராசி
ஜூன் மாதம் உங்கள் தொழில் நன்றாக இருக்கும் அரசாங்கத்திடம் இருந்து சில உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதிவு கிடைக்கும் இது வீட்டில் செலிப்பை ஏற்படுத்தும், இருப்பினும் இந்த மாதம் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.
தனுசு ராசி
உங்கள் ராசிக்கு இந்த மாதம் வேலையில் கவனமுடன் இருப்பதில் நல்லது,மேலதிகாரியின் ஒத்துழைப்பு ஆலோசனை கிடைக்கும், தொழில் அதிபர்களின் பழைய திட்டங்கள் வெற்றி பெறும்.
மகரம் ராசி
பணிபுரியும் இடத்தில் பதற்றமான சூழ்நிலை திடீரென்று ஏற்படும், இருப்பினும் நீங்கள் அந்த அழுத்தத்தில் இருந்து விடுபடலாம், நீங்கள் வேலையில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
இந்தியா கடற்படையில் அக்னி வீரர்களுக்கான 1365 வேலை வாய்ப்பு
பொருளாதார ரீதியாக நிதி இழப்பை சந்திக்க நேரிடும் தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல காலம்.
கும்பம் ராசி
ஜூன் மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் கவனம் செலுத்துவது மிக நல்லது,யாரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம் இது உங்கள் நிலையை பலவீனப்படுத்தும், இதை தவிர்க்கவும் தொழில் செய்பவர்களுக்கு சற்று ஆறுதலாக இந்த மாதம் இருக்கும்.
மீனம் ராசி
பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் ஒத்துழைப்பை பெறுவார்கள் இதனால் வேலை எளிதாக விரைவாக முடியும் நேரம் உங்களுக்கு சரியாக இருக்கும்.
வியாபாரம் செய்பவர்கள் மாதத் தொடக்கத்தில் புதிய பெரிய வேலைகள் எதையும் செய்ய வேண்டாம்.
பின்னால் சில வாய்ப்புகள் தேடி வரும் இருப்பினும் வேலை எடுப்பதற்கு முன் நிலைமைகளுக்கு புரிந்து கொண்டு நான்கு ஆலோசனை எடுங்கள்.