செய்திகள்

பெண்களுக்கு 1000/- ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்க இன்னும் சிறிது நாட்கள் உள்ள நிலையில்..!Kalaignar magalir urimai thogai scheme new update

Kalaignar magalir urimai thogai scheme new update

Kalaignar magalir urimai thogai scheme new update

தமிழ்நாட்டில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் பெண்களுக்கு 1000/- ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்க இன்னும் சிறிது நாட்கள் உள்ள நிலையில்.

பெண்களுக்கு மாதம் 1000/- உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்து இருந்தார்.

இதன்பிறகு கலைஞர் மகளிர் உரிமைத்தாக திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் அதிரடியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்தது.

முதற்கட்டமாக ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது,இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் நடைபெற்றது.

இதுவரை ஒரு கோடியை 75 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகைக்குரிய இயலாத நபர்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விண்ணப்ப பதிவு முன்னேற்றம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

ரூபாய் 1000/- கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் முதல் மாத பணம் எப்போது வங்கி கணக்கில் வரும் என்ற அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பெண்களுக்கு மாதம் 1000/- உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தெரிவித்து இருந்தார்.

திட்டம் தொடங்கப்பட்ட அதிகபட்சம் 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி முதல் மாததொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

நேரடியாக வங்கி கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் இதுவரை விண்ணப்பம் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு பிரதி செய்து 1 கோடி பணியாளர்களை தேர்வு செய்ய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்து இருந்தது.

எப்போது முதல் மாத தொகை செலுத்தப்படும்

அதன்படி செப்டம்பர் 5ஆம் தேதிக்கு இந்த திட்டத்திற்கு தேர்வானவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டுவிட்டது.

மெசேஜ் மூலம் இவர்களுக்கு தகவல் தெரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து ஒவ்வொருவராக பணம் பெற தொடங்குவார்கள்.

ஒரு 1.70 கோடி விண்ணப்பம் செய்த நிலையில் 1.30 கோடி பேருக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பணம் இன்னும் 6 நாட்களில் கொடுக்கப்படும் இதற்காக விழா எடுத்து பணம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் நீங்கள் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1000/- ரூபாய் பெறுவதற்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால்.

அதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும் இல்லையென்றால் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று மெசேஜ் அனுப்பப்படும்.

முகாம்களில் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு பணிகள் முடிந்து வருகிறது, தேர்வாணவர்கள் பெயர்கள் தற்போது பட்டியலில் கணினி மூலம் பதிவேற்றப்பட்டு வருகிறது.

இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதனை மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது நீங்கள் விண்ணப்பம் கொடுக்கிறீர்கள் அது நிராகரிக்கப்படுகிறது என்றால் அதனை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு செய்ய முடியும்.

உங்களிடம் ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தும் உங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் இந்த விழாவுக்கு பிறகு நடைபெறும் சிறப்பு முகாம்களில் நீங்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் வழங்கலாம்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Top 5 Best Mileage 125cc scooter list in india..!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர்கள் வரை செல்லும்..!

How to get back money UPI Payment Money Failed..!

What is your reaction?

Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0