
Kalaignar magalir urimai thogai scheme new update
மகளிர் உரிமைப்பொகை 1,000/- புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குடும்ப அட்டை கிடைக்குமா வெளியான பரபரப்பு தகவல்கள் என்ன..!
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் புதிய குடும்ப அட்டை கேட்டு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் திடீரென்று அதிகரித்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது மகளிர்க்கு மாதம் ஒரு 1,000/- வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திட்டம்.
இன்னும் செயல்படுத்தப்படவில்லை திமுக ஆட்சி இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.
இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர்க்கு மாதம் 1,000/- ரூபாய் வழங்கும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அரசாணையை அறிவித்தது இதற்கான விண்ணப்பங்களும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண் ரூபாய் 2.5 லட்சத்திற்கு குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
5 ஏக்கருக்கு குறைவான நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கர் குறைவான புஞ்சை நிலம் வைத்துள்ள குடும்பங்களின் பெண்கள் இதற்கு தகுதியானவர்கள்.
குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமை தொகை வழங்கப்படும்.
திருமணம் ஆகாத பெண்கள்,கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களுக்கு குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
குடும்பத்தில் ஆண்டு வருமான ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்.
இந்த உரிமை தொகை பெற முடியாத உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் 20ம் தேதி முதல் வீடு தோறும் வழங்கப்படுகிறது இதற்கிடையே மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில்.
கூட்டுக் குடும்பமாக ஒரே குடும்பம் அட்டையின் கீழ் இருக்கும் பலர் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்து தனித்தனி குடும்ப அட்டைகள் பெற்று ரூபாய் 1000/- உதவித்தொகை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கருதப்படுகிறது.
எனவே இதனை தடுக்கும் வகையில் மகளிர் உரிமை தொகையான விண்ணப்பம் பெறும் பணி முடிவடையும் வரை குடும்ப அட்டை பெயர் நீக்கம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் தராமல்.
உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இதுவரையில் குடும்ப அட்டை பெறாதவர்கள் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க ஆர்வம் கட்ட தொடங்கி இருக்கிறார்கள்.
புதிய ரேஷன் கார்டு கேட்டு அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது,அவர்கள் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை எனினும் கள ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரையில் குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகளிர் கிடைக்கும்,புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கும் உடனடியாக உதவித்தொகை கிடைக்காது என்கிறார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to download e PAN card in tamil 2023