
Kallakurichi school student death report submit at Court
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் திடீர் திருப்பம் 3 மணிநேரம் வாக்குமூலம் அளித்த பள்ளி தோழிகள் நடந்தது என்ன..!
தனியார் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில்.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடன் பயின்ற இரு தோழிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தலைமை நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்து தொடர்பாக.
அங்கு பெரிய வன்முறை வெடித்தது, பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பள்ளியை சூறையாடினர்.
மேலும் பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினரையும் கல்வீச்சு தாக்கியதோடு, காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைத்தார்கள்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
பள்ளி மாணவி மர்மமான மரணம்
இந்த நிலையில் சின்னசேலம் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில்.
3 அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற தடவியல் நிபுணர் இரண்டு முறை உடற்கூறு ஆய்வு நடத்தவும் நியாயமான முறையில் விசாரணை நடத்தி.
உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அதிகாரி செயல்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டது.
விசாரணைக் குழு அறிக்கை என்ன
இதையடுத்து பள்ளி மாணவி மரணம் தொடர்பாக தமிழக காவல் துறையிடமிருந்து வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிம்பர் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
இதையடுத்து மாணவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை ஜிம்பர் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
2 மணி நேரத்திற்கு மேலாக வாக்குமூலம்
இந்த நிலையில் உயிரிழந்த மாணவியுடன் பயின்ற சக பள்ளித் தோழிகள் இந்த வழக்கில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் உடன் பயின்ற இரு தோழிகள் சுமார் 2 மணிநேரம் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த வாக்கு மூலத்தின்படி வழக்கில் பல திருப்பங்கள் ஏற்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
மேலும் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிம்பர் மருத்துவ குழுவினர்.
தனது முழு ஆய்வறிக்கையும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
கலவர வழக்கில் மேலும் 3 நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள்.
ஒரு மில்லியன் என்பது எத்தனை லட்சம் என்று தெரிந்து கொள்ளுங்கள்..!
இதுவரை 30க்கும் மேற்பட்ட நபர்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்படும் நபர்கள்
இந்த கலவரத்தால் பள்ளி முழுவதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது அது மட்டுமில்லாமல் பள்ளியின் உட்கட்டமைப்பு முழுவதும் சிதைக்கப்பட்டது.
பள்ளியில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் தீவைத்து எரிக்கப்பட்டது.
What is protein powder and how to use protein powder
இப்பொழுது பள்ளி முழுவதும் செயல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், கோடிக்கணக்கான ரூபாய் பள்ளிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பான முழு அறிக்கையும் விரைவில் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.