
Kerpotta nivarthi meaning in tamil 2022
கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன இதற்கும் பருவமழைக்கும் என்ன தொடர்பு முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் பொதுவாக தினசரி காலண்டரில் கெர்போட்ட நிவர்த்தி என்று இருக்கும் அதை நீங்கள் கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள்.
அது ஏன் எதற்கு காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரியுமா.
பலர் இதனை ஏதும் விசேஷ தினமாக அல்லது மார்கழி மாத கோவில் திருநாள் என்று கூட நினைக்கலாம்.
உண்மையில் இது தமிழர்களின் அடுத்த வருட மழை கணிப்பு முறை என்று சொல்லப்படுகிறது, சரி இந்த கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.
நம்மளுடைய முன்னோர்கள் நட்சத்திரத்தை பார்த்து காலத்தை கணித்தார்கள் அதற்கேற்றார்போல் விவசாயத்தையும் விவசாயம் செய்யும் முறையும் பயிர்கள் நடும் முறையும் பின்பற்றினார்கள்.
பொதுவாக நம்முடைய கலாச்சாரத்திற்கும் வானத்தில் இருக்கும் நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
திருமணம் முதல் இறப்புவரை, பயிர் செய்வது முதல், அறுவடை வரை, மழைப்பொழிவு, குளிர்காலம், கோடைகாலம், என எல்லாவற்றிற்கும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நேரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன
கெர்போட்ட நிவர்த்தி என்பது தமிழர்கள் அடுத்த வருடம் மழை கணிப்பு முறை அதாவது ஒரு கரு ஓட்டம் என்பதே கார்ப்ப ஓட்டம் என்று மாறி பின்னர் கார்ப்போட்டம் என்றாகி.
இன்று காலண்டர்களில் கெர்போட்டம் என்று குறிப்பிடப்படுகிறது நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக வைத்து சூரிய ஒளி மாதங்கள் பின்பற்றப்படுகிறது.
இதுதவிர வானியல் நட்சத்திரங்களை 27 மண்டலமாகவும் 12ராசி மண்டலங்களாகப் பிரித்துள்ளனர் அந்தவகையில் தனுர் மாதம் என அழைக்கப்படும்.
மார்கழியில் சூரியன் தனுர் ராசி மண்டலத்தை கடக்கும்போது பூராட நட்சத்திர கடக்க 14 நாட்களை எடுத்துக்கொள்கிறது.
இந்த நாட்களில் கரும் மேகங்கள் தெற்கு நோக்கி நகர்வதை கண்டுகொள்ளலாம் இந்த 14 நாட்களும் கார்போட்டம் நாட்கள் என்று அழைக்கப்படுகிறது.
அதாவது இதனை மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள் என்று அழைக்கப்படுகிறது.
மேகக்கூட்டம் உருவாகும் காலம்
பெண்ணின் 10 மாத கர்ப்ப காலத்தில் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள் 9 மாதம் கழித்து புரட்டாசி பின் பிள்ளை பெறுவாள்.
அவ்வகையில் இந்த கார்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால் 9 மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி, கார்த்திகையில், மழைபொழிவு அளவு சரியாகவும் அதிகமாகவும் இருக்கும்.
இந்த கார்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஜனவரி 11ஆம் தேதி வரை இருக்கும் என்று கலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாறாக கார்போட்டா நாட்களில் கன மழை பெய்து சூறைக்காற்று ஒருவேளை வீசினால் அல்லது கடும் வெயில் இருந்தால் மேகத்தின் கரு கலைந்து விட்டது என்று பொருள்.
எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம் நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் இருக்கிறது.
இன்றைய நவீன உலகத்தில் தொழிற்சாலையில் இருந்து வரும் புகை, மாசு, வாகனங்களிலிருந்து வரும் புகை, போன்றவை வாழ்க்கையின் மாறுபட்ட சுழற்சியால்.
கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கரு கலைக்கும் வில்லன்களாக இருப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையின் அளவு மாறுபடுகிறது.
How to apply National Health Id card online
சரி தினசரி காலண்டரில் கெர்போட்ட நிவர்த்தி என் குறிப்பிடுகிறது என்று இப்பொழுது உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.