
Kisan Vikas Patra scheme details 2023
ரூ 5 லட்சம் முதலீடு செய்யுங்கள் ரூபாய் 10 லட்சம் தொகை பெறுங்கள்,டபுள் டமாக்கா உடனே போஸ்ட் ஆபீஸ் செல்லுங்கள்..!
போஸ்ட் ஆபீஸ் ரூ 5 லட்சம் முதலீடு செய்தால் ரூபாய் 10 லட்சம் திரும்ப பெறுவது எப்படி என்ற இரட்டிப்பு வருமானம் திட்டம் குறித்து என்ன என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
10 ரூபாய் சம்பாதித்தாலும் அதில் 2 ரூபாய்யாவது சேமிக்க வைக்க வேண்டும் என்பது நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த வார்த்தை இந்த சேமிப்பு நமக்கு எத்தனையோ ஆபத்து காலங்களில் உதவுகிறது.
குழந்தைகளின் கல்வி,திருமண செலவு, மருத்துவ செலவு, வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வாகனம் வாங்குவது, போன்ற அடிப்படையாக அமைவது சேமிப்பு தான்.
நாம் வாங்கும் சம்பளத்தில் முதல் ஒற்றை ரூபாய் சேமிப்பாக தான் இருக்க வேண்டும்.
அதிலும் பலர் இரட்டிப்பு வருமானம் என ஆசை வார்த்தை காட்டி மோசம் செய்யும் கும்பலிடம் சிக்கிக் கொண்டு பெரும் தொகையை இழந்து விடுகிறார்கள்.
அன்றாடம் ஒரு செய்தியாவது நிதி நிறுவன மோசடி குறித்து வருகிறது ஆனாலும்.
மக்களுக்கு இரட்டிப்பு வருமானம் குறைந்த முதலீடு அதிக லாபம் குறைந்த முதலீடு அதிக வட்டி போன்ற வார்த்தைகள் மீது அளவு கடந்த பற்றுகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
மக்களின் சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் சில திட்டங்களை கொண்டு வருகிறது.
வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், Lic, போன்றவற்றில் மக்களின் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய அரசாங்கம் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது.
அந்த வகையில் இரட்டிப்பு லாபத்திற்கு தபால் துறையில் உள்ள கிசான் விகாஸ் பத்திரம் என்ற திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பு தொகை பெறலாம்.
இந்த நிதி ஆண்டில் அஞ்சலகத்தில் சிறுசேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன,இதன் கீழ் கிசான் விகாஸ் பத்திரம் மீதான வட்டி 7.2 சதவீதம் முதல் 7.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு முதிர்ச்சியில் ரூபாய் 10 லட்சம் கிடைக்கும் கிசான் விகாஸ் பத்திரம் திட்டம் விவசாயிகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் விவசாயிகள் தங்கள் பணத்தை நீண்ட கால அடிப்படையில் சேமிக்க உதவுகிறது.
குறைந்தபட்சம் ரூபாய் 1,000/- முதலீடு செய்யலாம் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் வரம்பு விதிக்கப்படவில்லை.
இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம் தனியாக கணக்கு இருந்தால் 3 பெரியவர்கள் சேர்ந்து கூட்டு கணக்கு தொடங்கலாம்.
நாமினி வசதியும் இந்த திட்டத்தில் செய்யப்பட்டுள்ளது,10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெயரில் கிசான் விகாஸ் பத்திரை கணக்கை தொடங்கலாம்.
மத்திய அரசு மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை குறிப்பாக பொதுத்துறை நிறுவனம் மூலம் செய்கிறது.
எல்ஐசி,தபால் துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் சிறந்த திட்டங்களை நடைமுறை செய்கிறது ஆனால் இந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
What is really happening in Manipur
How to message on WhatsApp without saving number