
Kodanadu murder and robbery case investigation
கொடநாடு எஸ்டேட்டில் நடந்தது என்ன சசிகலாவிடம் தீவிர விசாரணையை தொடங்கியது தமிழக போலீஸ்..!
கொடநாடு கொலை,கொள்ளை, வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் போலீஸ் தீவிர விசாரணை இப்பொழுது தொடங்கியுள்ளது.
சென்னை தி நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் விசாரணை நடைபெறுகிறது, வீட்டிற்கு முன்பு ஏராளமான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்துள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 5 வருடமாக வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும்.
அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது, இப்போது தான் பல திருப்பங்கள் ஏற்பட்டு வழக்கு விசாரணை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
முக்கியமாக வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ள நிலையில் விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது.
இந்த வழக்கில் சமீபத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டியிடம் விசாரணை நடைபெற்றது.
மேலும் அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன், ஆகிய நபர்களிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.
வழக்கு என்ன நிலையில் உள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் இருக்கிறது, ஜெயலலிதா மரணத்திற்குப் பின்பு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி.
இங்கு நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், அலுவலகக் கோப்புகள்,கொள்ளையடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அதோடு எஸ்டேட்டில்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவலாளி ஒருவர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார்.
அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள்
இந்தக் கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின்பு சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுபட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இவர் ஜெயலலிதாவின் முன்னாள் வாகன ஓட்டுநர், அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர்.
இதில் அதிர்ஷ்டமாக சயான் உயிர் தப்பினார், இதனால் இந்த வழக்கு தேசிய அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற மர்ம மரணங்கள்
இந்த வழக்கில் கனகராஜ் மற்றும் சயான் குடும்பத்தினர் மரணம் கொடநாடு எஸ்டேட் என்ஜினியர் தற்கொலை, உள்ளிட்ட பல மர்ம மரணங்கள் தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே சயான் முக்கிய வாக்குமூலங்களை கொடுத்துவிட்டார்.
கனகராஜ் உயிரிழப்பு முன்பு கோவை மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ரவியிடம் செல்போனில் பேசி இருக்கிறார்.
இதனால் அவரிடம் மூன்று நாட்களுக்கு முன் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் விசாரணைகள்
இந்தநிலையில் கோடநாடு கொலை, கொள்ளை, வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எஸ்டேட் உரிமையாளர் என்ற முறையில் அவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது, சசிகலாவிடம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று விசாரணை செய்யப்படுகிறது.
உடம்பில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும்..!
மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளார்கள்.
Gooseberry juice remove blockages in the blood vessels
அதுமட்டுமில்லாமல் எஸ்டேட்டில் காணாமல் போன ஆவணங்கள், கோப்புகள், குறித்து விசாரிக்கப்பட உள்ளது.
சென்னை தி நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் விசாரணை தொடங்கியுள்ளது,அவரது இல்லம் முன்பு ஏராளமான தொண்டர்கள் கூடி உள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.