
Lander detaches from Chandrayaan 3 spacecraft
நிலவை நெருங்கிய சந்திராயன் 3 இன்று நடக்கும் முக்கிய பணிகள்,இஸ்ரே விஞ்ஞானிகள் அறிவித்த முக்கிய தகவல்கள் என்ன?
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் தற்போது நிலவை நெருங்க தொடங்கியுள்ளது.
சந்திரன் 3 விண்கலத்திலிருந்து லேண்டர்(Lander) இன்று தனியாக பிரிக்கப்படுகிறது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரே கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரன் 2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
பல்வேறு கட்ட வெற்றிப்பயணங்களுக்கு பிறகு சந்திராயன்-2 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுவட்ட பாதையை வெற்றிகரமாக சென்றடைந்தது.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர்(Lander) விண்கலம் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.
இருந்தாலும் விண்கலத்தின் மற்றொரு பகுதி ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது,இதன்பிறகு இந்த வெற்றி தொடரும் என இந்திய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்.
அதாவது சந்திராயன்-3 விண்கலத்தை மறுபடியும் வடிவமைத்து நிலவில் அனுப்பப்படும் என அறிவித்தார்கள்.
இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இஸ்ரே ரூபாய் 615 கோடி ரூபாயில் சந்திரன்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது.
LVM-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள 2ம் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டது வெற்றிகரமாக.
சந்திராயன்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன்-3 அது தனது இறுதி இலக்கினை அடைய பல்வேறு படிநிலைகளை கடக்க வேண்டி இருக்கும்.
அதாவது நிலவை நோக்கி இந்தியாவின் சாதனை பயணத்தை கொண்டு செல்லும் இந்த சந்திராயன்-3 விண்கலம் பூமியை நீள்வட்ட பாதையில்.
5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சென்றடையும்,நீள்வட்ட பாதையில் சுற்ற தொடங்கி தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பூமியின் சுற்றுவட்ட பாதையை நிறைவு செய்த சந்திராயன்-3 விண்கலம் நிலவின் சுற்றுபட்ட பாதையில் தற்போது பயணித்து வருகிறது.
நிலவின் ஈர்ப்பு விசை பகுதிக்கு சென்றவுடன் சந்திராயன்-3 உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு,நிலவின் தரை இறங்கு வகையில் இஸ்ரே தீவிரப்படுத்தி உள்ளது தற்போது.
கடந்த 14ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் சந்திராயன்-3 விண்கலம் உயரம் குறைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
குறைந்தபட்சம் 151 கிலோ மீட்டர் தொலைவிலும் அதிகபட்சம் 179 கிலோமீட்டர் என்ற சுற்றுவட்ட பாதையில் சந்திராயன்-3 விண்கலம் சுற்றி வந்தது.
இதனை தொடர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மீண்டும் உயரம் குறைக்கப்பட்டு அப்போது குறைந்தபட்சம் 153 கிலோ மீட்டர் தொலைவிலும் அதிகபட்சம் 163 கிலோமீட்டர் என்று அளவிலும் நிலவினை சந்திராயன்-3 விண்கலம் சுற்றி வந்தது.
தற்போதைய சூழலில் நிலவில் 100 கிலோமீட்டர் தொலைவில் அடுக்குக்குள் சந்திராயன்-3 விண்கலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று சந்திராயன்-3 திட்டத்தின் மிக முக்கிய பணி நடைபெறுகிறது.
அதாவது விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து நிலவின் தரையில் தரையிறங்கும் லேண்டரை தனியாகப் பிரிக்கும் பணி நடவடிக்கையை விஞ்ஞானிகள் இன்று தொடங்குகிறார்கள்.
இந்தப் பணி முடிந்த பிறகு விண்கலத்தில் இருந்து லேண்டெர் தனியாக பிரிந்துவிடும் அதன் பிறகு இரண்டும் தனித்தனியாக தங்களுடைய பயணங்களை தொடங்கும்.
அதன்பிறகு சந்திராயன்-3 விண்கலத்தின் லேண்டெர் நிலவில் எங்கு தரை இறங்க வேண்டும் என்ற முடிவு செய்யப்படும்.
இதற்காக நிலவின் தரை இறங்குவதற்கான இடங்களை புகைப்படம் எடுத்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
சந்திராயன்-3 விண்கலத்தின் செயல்பாடுகளை பெங்களூரில் உள்ள ஆய்வு மையத்திலிருந்து விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
சந்திராயன்-3 விண்கலம் திட்டமிட்டபடி 23ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
ஆசை வார்த்தை தெரிவித்து உடலுறவு கொண்ட பிறகு..!