
Law and order disorder continues in Tamil Nadu
தொடரும் தாக்குதல் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..!
தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களாக குறிப்பாக ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது.
இதுவரை தமிழகத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்ததில்லை மாநில காவல்துறை என்ன செய்கிறது என்ற ஒரு கேள்வியும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டது.
அதில் குற்றச்செயல்கள் திடீரென்று அதிகரித்துவிட்டது அதனை தடுக்கும் முறை பெருமளவு குறைந்து விட்டது, இது வருத்தத்துக்குரிய செயல் என்றும் தெரிவித்திருந்தது.
குறிப்பாக ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில்.
மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை நள்ளிரவில் வீசிவிட்டு செல்வதால் கடுமையான பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்புக்கு உள்ளாக்கியது சம்பவங்களால் கோவை, ஈரோடு, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற மாவட்டங்களில் தமிழக காவல்துறை தீவிர கண்காணிப்பை முன்னெடுத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இப்பொழுது இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தை உளவுத்துறை தமிழக காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
வாகன சோதனை உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் ஆங்காங்கே இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
சேலத்தில் நடைபெற்ற சம்பவம்
அந்த வகை சேலத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் வீசிவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இது பற்றிய தகவல்கள் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை மண்ணெண்ணெய் வீசப்பட்ட வீட்டிற்கு வந்து சோதனைகளை மேற்கொண்டார்கள்,மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் இப்பொழுது ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஏன் இந்த திடீர் வன்முறை
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா இந்த அமைப்பை சார்ந்த நபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு,
தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இந்தியா முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து.
ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து உள்ளார்கள்.
தென் மண்டல ஐஜி வார்னிங்
தொடர்ந்து தென் மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்த மாவட்ட மண்டல ஐஜி கடுமையான ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்கள் யாராவது தவறாக நடந்துகொண்டால் உடனடியாக கைது செய்து.
சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுப்போம் என உத்தரவிட்டுள்ளார்.
பிஜேபி அறிவித்துள்ள அறிவிப்பு
பிஜேபி தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று வருகிறது.
இதை தமிழக அரசு கண்டிக்காமல் கண்டும் காணாமலும் இருக்கிறது எந்த ஒரு நபரையும் கைது செய்யவில்லை.
இதை நாங்கள் சும்மா விட போவதில்லை இதுபற்றி உடனடியாக உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
விசிக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரச்சினை தொடங்கியுள்ளது
வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தமிழகத்தில் 51 இடங்களில் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக வரலாற்றில் இது போன்ற ஒரு நிகழ்வை இதுவரை நிகழ்ந்ததில்லை இதை கடுமையாக இடதுசாரி கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் எதிர்த்து வருகிறார்கள்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்.
பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம், வராமல் தடுக்க சிறந்த வழிகள்..!
அக்டோபர் 2ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் மதநல்லிணக்க பேரணி நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரேநாளில் ஆர்எஸ்எஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தமிழகம் முழுவதிலும் பேரணி நடத்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளதால் நிச்சயம் சட்டம்-ஒழுங்கு இதனால் சீர்கெடும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
HIgh emergency situation in tamilnadu 2022
இப்பொழுது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, இதை கண்டும் காணாமலும் இதற்கு எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்காமல் தமிழக முதல்வர் அமைதி காத்து வருகிறார்.