
Law Commission seeks public opinion for Uniform Civil Code
பொது சிவில் சட்டம் குறித்து தற்போது இணையதளத்தில் கருத்து கேட்கும் பணி தொடங்கியுள்ளது இதற்கு நீங்களும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இந்தியாவில் இப்பொழுது ஆட்சி செய்யும் பாஜக அரசு புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளது,அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு.
ஆளும் பாஜக அரசு இந்திய முழுவதும் பல்வேறு விதமான வரலாற்று சிறப்புமிக்க அதிரடியான சில திட்டங்களை கொண்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து சாதி, இனம், மொழி, மற்றும் மதம் உள்ளிட்டவற்றிற்கு அனைத்து விதமான ஒரே சட்டங்கள் ஆகும்.
தற்போது இந்தியாவில் இந்து, கிறிஸ்டின், முஸ்லிம், புத்த, போன்ற மதங்கள் இருக்கிறது,இந்த மதங்களின் அடிப்படையில் சட்டங்கள் சிலவகை மாறுகிறது.
இதனால் இந்தியாவை சரிவர ஆட்சி செய்ய முடியவில்லை மக்களுக்கு அனைத்து விதமான சட்டங்களும் சென்று சேரவில்லை.
மக்களுக்கு அனைத்து விதமான சலுகைகளும் கிடைக்கவில்லை என காரணத்தை தெரிவித்து ஆளும் பாஜக அரசு.
தற்போது இந்திய முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,அதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தைக் கூட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வருகின்ற.
மழைக்கால கூட்டத்தொடரில் இந்த பொது சிவில் சட்டம் நிச்சயம் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கொண்டுவரப்படும் அப்படி கொண்டுவரப்பட்டால்.
இந்த சட்டம் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இந்தியாவில் சட்டம் வடிவம் பெற்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுவிடும்.
இதனால் இந்தியாவில் அனைத்து விதமான சட்டங்களும் சலுகைகளும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் என்று பிஜேபி அரசு நம்புகிறது.
அந்த கட்சிக்கு அதிகப்படியான வாக்குகள் மக்களிடத்தில் கிடைக்கும் என இந்த கட்சி நம்புவதால் நிச்சயம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம்.
அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மோடி வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்.
பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் கட்சிகள்
இந்த பொது சிவில் சட்டத்தை திமுக மற்றும் அதன் கூட்டணி இடதுசாரி கட்சிகள் போன்றவை கடுமையாக எதிர்த்து வருகிறது.
ஏனென்றால் இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைவதில்லை என வெளிப்படையாகவே இந்த கட்சிகள் தெரிவிக்கிறது.
இந்தப் பொது சிவில் சட்டத்திற்கு மக்களிடம் கருத்து கேட்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது,அதற்காக அதிகாரப்பூர்வ இணையதளமும் வெளியிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால்,membersecretary-lci@gov.in என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு சென்று உங்களுடைய கருத்துக்களை பதிவிடலாம்.
இந்தப் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வர வேண்டுமென பல்வேறு மக்கள் பல கால ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
இப்பொழுது இந்த பொது சிவில் சட்டத்தை நிச்சயம் இந்தியாவில் நிறைவேற்றுவோம் அதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை என்று ஆளும் பிஜேபி அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனால் இந்த சட்டம் வருகின்ற ஜனவரி மாதத்திற்குள் இந்தியாவில் நடைமுறைக்கு வருவதில் எந்த மாற்றமும் இல்லையன ஆளும் பிஜேபி கட்சியின் முக்கிய தலைவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்