தாய்மை

பல்லு பறக்க ரத்தம் தெறிக்க விஜயின் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் Leo first look poster Poster Released online

Leo first look poster Poster Released online

Leo first look poster Poster Released online

பல்லு பறக்க ரத்தம் தெறிக்க விஜயின் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தென்னிந்தியா சினிமாவில் டாப் நடிகராக வளம் வரும் நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

விஜய்யின் பிறந்தநாள் என்றால் ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கும்.

அந்த வகையில் விஜய்யின் லியோ திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், அர்ஜுன், மன்சூர் அலிகான்,சஞ்சய், த்ரிஷா, பிரிய ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட பல திரைப்பட நட்சத்திரங்களின் பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்.

லியோ இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவால் சார்பில் லலித் குமார் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்த நாளன்று வெளியாகும் என லியோ பட குழு தெரிவித்து.

அந்த வகையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான அதிகாலை 12 மணிக்கு இணையதளத்தில் வெளியானது.

இரவு முழுவதும் ஆந்தை போல் கண் விழித்திருந்த விஜய ரசிகர்கள் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் லட்சக்கணக்கில் லைக்குகளை பறக்க விட்டனர்.

வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டும் நடித்து ரசிகர்களை வருடம் முழுவதும் அப்டேட்டுக்காக காத்திருக்க வைக்கும் விஜய் இம்முறை ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

விஜய் படமா லியோ இருந்தாலும் லோகேஷ் இயக்கம் திரைப்படம் என்பதால் மிகுந்த பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

கைதி,மாஸ்டர், விக்ரம் என்று தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் மிகப்பெரிய ஒரு ஹிட் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் அடுத்த படமாக லியோ திரைப்படம் ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரல்யகி வரும் நிலையில்.

போஸ்டரில் இருக்கும் சில விஷயங்களை ரசிகர்கள் நோட் செய்கிறார்கள் என்று இணையதளத்திலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அப்படி அந்த போஸ்டரில் நோட் செய்ய என்ன இருக்கிறது என்பதை முழுமையாக பார்ப்போம்.

லியோ என்ற பெயர் சிங்கத்தை குறிக்கும் ஆனால் இந்த போஸ்டரில் சிங்கத்திற்கு பதிலாக கழுதைப்புலி உருவம் இடம் பெற்றுள்ளது.

சொல்லப்போனால் காட்டின் சிங்கத்திற்கு மிகப்பெரிய எதிரியை இந்த கழுதைப்புலிகள்தானம்.

சிங்கம் விஜயகவும் எதிரிகள் கழுதை புலியாகும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக லியோ போஸ்டர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போஸ்டரில் விஜய் சுத்தியால் சுழற்று எதிரிகளின் ரத்தம் தெறிக்க பற்கள் பறக்க என்று செம அதிரடியாக லியோ படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சமீப காலமாக விஜயின் சில படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தாலும் விமர்சனம் ரீதியாக சோதனையாகவே இருக்கிறது.

அந்த வகையில் லியோ திரைப்படம் விஜய்க்கு மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என திரைப்பட குழு தெரிவிக்கிறது.

Voter ID உடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..!

How to change minor PAN card to Major PAN card

How to apply new voter id online in tamil

New privacy feature in WhatsApp 2023

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
2