
LIC Jeevan Lakshya child plan full details
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான சில திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்தியாவில் இருக்கும் மக்கள் தங்களுடைய பணத்தை குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்பத்தின் மருத்துவ செலவிற்காக சுமார் 65% பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் குடும்பத்தில் பணப் பிரச்சினை என்பது வந்து கொண்டே இருக்கிறது, என்பது அனைவரும் ஒரு புலம்பும் விஷயமாக இருக்கிறது.
ஒருவர் பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தால் அவர் ஆரோக்கியமாகவும், நீண்ட நாட்கள் செல்வச்செழிப்புடன் வாழ ஆரம்பித்து விடுவார், ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை குறிப்பாக இந்தியாவில்.
இதனைக் கருத்தில் கொண்டு நம்மளுடைய அரசாங்கம் மக்களின் நலனை பேணி காப்பதற்கே, பல்வேறு வகையான திட்டங்களை எல்ஐசி மூலம் மக்களுக்கு வழங்கி வருகிறது.
எல்ஐசி ஜீவன் லக்சயா உங்கள் குழந்தைகளுக்கான ஒரு பிரத்யேக திட்டம் இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாக பாதுகாக்க உங்களால் வைத்திருக்க முடியும்.
இன்றைய காலகட்டத்தில் முதலீடு என்பது பலரும் திட்டமிட்டாலும் குழந்தைகளுக்கு என தனியாக ஒரு முதலீடு செய்யும் நபர்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.
குழந்தைகளின் எதிர்கால கல்வி, திருமணம், இப்படி பலவற்றிற்கும் தனியாக முதலீடு செய்வது என்பது ஒரு முக்கியமாக அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டிய ஒரு கடமையாக இருக்கிறது.
நிலையான பொருளாதார இல்லாத சூழ்நிலையில் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கான முதலீட்டு திட்டங்கள் பல உள்ளன.
அந்தவகையில் நாம் இன்று பார்க்க இருப்பது எல்ஐசி ஜீவன் லக்சயா திட்டத்தைப் பற்றி தான்.
எல்ஐசி ஜீவன் திட்டம் பற்றிய தகவல்
இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் லாபம் நிறைந்த ஒரு குறைந்த பிரீமியம் செலுத்தும் காலம்கொண்ட ஒரு மிகச் சிறந்த திட்டமாக எல்ஐசியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை 18 வயது முதல் 50 வரை உள்ள நபர்கள் யார் வேண்டுமானாலும் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூபாய் 1 லட்சம் அதிகபட்சம் என்பது வரம்பு கிடையாது, இந்த பாலிசியை குழந்தைகளுக்காக பெற்றோர் குழந்தைகளை நாமினியாக வைத்து எடுத்துக்கொள்ள முடியும்.
எத்தனை ஆண்டுகள் பிரீமியம் செலுத்த வேண்டும்
இந்த பாலிசி காலம் 13 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரையில் உள்ள ஒரு சிறந்த திட்டமாக இருக்கிறது.
நீங்கள் 15 ஆண்டுகள் பாலிசி எடுக்க முடிவு செய்தால் 12 ஆண்டுகள் பிரீமியம் செலுத்த வேண்டும், 25 வருட பாலிசி எனில் 22 வருட பிரீமியம் செலுத்தினால் போதும்.
எப்படி பிரீமியம் செலுத்த வேண்டும்
இதில் பிரீமியத்தை உங்களுக்கு ஏற்றவாறு ஆண்டுக்கு, காலாண்டுக்கு,அரையாண்டுத்,மாதந்தோறும் என பிரித்து நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.
இதில் விபத்து மற்றும் திறன் இழப்பு பயங்களை ரைடர் பாலிசிகள் எடுத்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு 30 வயது என தோராயமாக வைத்துக்கொள்வோம் பாலிசி காலம் 25 ஆண்டுகள் நீங்கள் 22 ஆண்டுகள் தொடர்ந்து பிரீமியம் செலுத்த வேண்டும்.
வருடாந்திர பிரீமியம் -ரூபாய் 44826 + ஜிஎஸ்டி (4.5%)
அரையாண்டு பிரிமியம் -ரூபாய் 22,652 + ஜிஎஸ்டி
காலாண்டு பிரிமியம் -ரூபாய் 11,445+ ஜிஎஸ்டி
மாத பிரிமியம் -ரூபாய் 3815 ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி விகிதம் முதல் ஆண்டு பிரீமியத்தில் -4.5%
இரண்டாவது ஆண்டில் இருந்து 2.25% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும்.
என்னென்ன பலன்கள் இருக்கிறது
பாலிசிதாரர் ஒருவேளை துரதிஸ்டவசமாக பாலிசி காலத்தில் இறந்துவிட்டார் மீதமிருக்கும் காலத்திற்கும் பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை.
மாறாக நாமினிக்கி தொகையில் 10% பாலிசியை முடிவடையும் வரையில் வருட வருடம் கிடைக்கும்.
உதாரணத்திற்கு 5 லட்சம் ரூபாய் எனில் 50 ஆயிரம் ரூபாய் வருடம் வருடம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
அதோடு முதிர்வு காலத்தில் 110% தொகை கிடைக்கும்.
கூடுதல் என்ன பலன்
ஒருவேளை துரதிஷ்டவசமாக பெற்றோர் அல்லது பாலிசிதாரர் இறந்து விட்டாலும் குழந்தைகளுக்கு இது பொருளாதார ரீதியாக ஒரு சிறந்த பாதுகாப்பாக இருக்கும்.
ஏனெனில் இது நமது அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகின்றன ஒரு லைப் இன்சூரன்ஸ் திட்டமாகும், இதில் எந்த ஒரு ஏமாற்று வேலையும் நிகழாமல் இருக்கும்.
அதேபோல் இறப்பு பலன் மற்றும் முதிர்வு பலனை 5 வருடம் அல்லது 10 வருடம், 15 வருடம் என பல தவணை முறையில் பெற்றுக் கொள்ளும் வசதி இதில் இருக்கிறது.
ஆக இது மற்ற பாலிசிகளை காட்டிலும் மிகவும் பாதுகாப்பான ஒரு சிறந்த திட்டமாகும், தனித்துவமாகவும், எல்ஐசியில் இருக்கிறது.
முகத்தை பிரகாசமாக மாற்றும் கற்றாலை பவுடர்
கூடுதல் என்ன பலன்கள் கிடைக்கும்
நீங்கள் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வரைக்கும் ரைடர் பாலிசி எடுத்துக்கொள்ள முடியும் இதனால் பாலிசிதாரர் இயற்கையாகவே மரணம் அடைந்தாலும் 10 லட்ச ரூபாய் வரையில் பணம் கிடைக்கும்.
இது விபத்து மூலம் என்றாலும் அதன் பலன் முழுமையாக கிடைத்துவிடும்.
Here are some simple tips to get rid of dandruff
இதை வைத்து லோன் வாங்க முடியுமா
இந்த பாலிசி க்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அடமானம் வைத்து கடன் பெற்றுக் கொள்ளமுடியும் வங்கிகளில்.
அதேபோல் இரண்டு ஆண்டுகள் கழித்து சரண்டர் செய்து கொள்ளலாம்.