செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்..! List of Districts in Tamil Nadu 2023

List of Districts in Tamil Nadu 2023

List of Districts in Tamil Nadu 2023

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்..!

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 38 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் மாவட்ட நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

இவற்றுக்கு விதிவிலக்காக கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்று உள்ளது.

தற்போது மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர்மாற்றம் பெற்று வந்துள்ளன.

ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 மாநிலம்

பல்வேறு முன்னணி நாளிதழ் நடத்திய கருத்து கணிப்பில் தமிழ்நாடு இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக இருக்கிறது.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பெண்களுக்கு முன்னுரிமை, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, வறுமை போக்குதல், போன்ற காரணங்களால்.

1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்தியாவின் சென்னை மாநிலம், சென்னை மாகாணம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போது எல்லைக்குள் உருவாக்கப்பட்ட சென்னை மாநிலம் ஆனது 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

முந்தைய சென்னை மாகாணத்தின் 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்து.

செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம்,தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஆகியவை ஆகும்.

இந்த மாவட்டங்களில் தொழில் மையம், பெரிய தொழிற்சாலைகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள், மென்பொருள் தொழிற்சாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி, போன்ற பல்வேறு நிறுவனங்கள் இருக்கிறது.

இந்தியாவில் தமிழ்நாடு அதிக வருவாய் செலுத்தும் மாநிலமாக இரண்டாமிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை, கிருஷ்ணகிரி, போன்ற மாவட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் வருவாய் கிடைக்கிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி வரி (GST tax) தொகையை செலுத்துகிறது.

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி GST tax தொகை செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் மேல் படிப்பு செல்லும் நபர்களின் எண்ணிக்கை குமார் 50 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை மற்றும் மதியம் என இருவேளை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது,தமிழ்நாட்டில் குழந்தைகளின் கல்விக்கு பல்வேறு விதமான சிறந்த வகுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக குழந்தைகளுக்கு மிதிவண்டி, இலவச சீருடை, பாட புத்தகம், மடிக்கணினி, உதவி தொகை, என பல்வேறு விதமான நல திட்டங்கள் கல்விக்காக அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்

1.சென்னை

2.கடலூர்

3.காஞ்சிபுரம்

4.செங்கல்பட்டு

5.திருவள்ளூர்

6.திருவண்ணாமலை

7.வேலூர்

8.விழுப்புரம்

9.கள்ளக்குறிச்சி

10.திருப்பத்தூர்

11.ராணிப்பேட்டை

12.அரியலூர்

13.மயிலாடுதுறை

14.நாகப்பட்டினம்

15.பெரம்பலூர்

16.புதுக்கோட்டை

17.தஞ்சாவூர்

18.திருச்சிராப்பள்ளி

19.திருவாரூர்

20.தர்மபுரி

21.திண்டுக்கல்

22.கோயம்புத்தூர்

23.கரூர்

24.ஈரோடு

25.கிருஷ்ணகிரி

26.நாமக்கல்

27.நீலகிரி

28.சேலம்

29.திருப்பூர்

30.கன்னியாகுமரி

31.மதுரை

32.ராமநாதபுரம்

33.சிவகங்கை

34.தேனி

35.தூத்துக்குடி

36.திருநெல்வேலி

37.தென்காசி

38.விருதுநகர்

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

ரூ 1000 உரிமைத் தொகை இப்படித்தான் கிடைக்குமா

புதிய ரேஷன் கார்டு வாங்கப்போகிறீர்களா?

செட்டிநாடு முட்டை கிரேவி மசாலா செய்வது

சருமத்தை இயற்கையாக பளபளப்பாக மாற்றுவது

What is your reaction?

Excited
5
Happy
9
In Love
3
Not Sure
5
Silly
4