Health Tips

அடிவயிற்றில் இருக்கும் விடாப்படியான கொழுப்பை கரைக்க வேண்டுமா List of foods to melt belly fat in tamil

List of foods to melt belly fat in tamil

List of foods to melt belly fat in tamil

அடிவயிற்றில் இருக்கும் விடாப்படியான கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்..!

நீங்கள் உடல் எடை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் உடல் எடை குறைக்க வேண்டுமானால் எடை அதிகரிப்பு காரணமான கொழுப்புகளை கரைக்க வேண்டும்.

உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருந்தால் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து ஆற்றலாக மாற்றப்படும் இதன் மூலம் உடல் எடை குறையும்.

உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரு சில உணவுகளை நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதுவும் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் புரதச்சத்து மற்றும் குறிப்பிட்ட ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த உணவுகள் உடல் எடையை திறம்பட குறைக்க உதவுகிறது.

இது தவிர ஒரு சில பானங்களும் உடலின் மெட்டபாலிசனத்தை அதிகரித்து உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் திறனை கொண்டுள்ளது.

இப்போது உடலில் தேங்கியுள்ள விடாப்படியான கொழுப்புகளை கரைக்க உதவும் உணவுகள் குறித்து காண்போம்.

அந்த உணவுகளை தினமும் ஒருவர் சாப்பிட்டு வந்தால் மெட்டபாலிஷன் மேம்படுத்தப்பட்டு கொழுப்புகள் கரைந்து உடல் எடையும் குறையும்.

முட்டையின் வெள்ளை கரு

உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த காலை உணவாக முட்டை வெள்ளைகரு இருக்கும்.

ஏனெனில் முட்டையின் வெள்ளை கருவில் உள்ள அமினோ அமிலங்கள் உடலின் மெட்டபாலிசத்தை நாள் முழுவதும் சிறப்பாக வைத்துக் கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எனவே உடல் எடை குறைக்க நினைப்போர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க முட்டையின் வெள்ளை கருவை மட்டும் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

காரமான உணவுகள்

காரமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அதிக அளவு உணவு எடுத்துக் கொள்வதை தடுக்கலாம் மேலும் மிளகாயில் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் கெமிக்கல் கேப்சின் உள்ளது.

இந்த கேப்சின் ஹார்மோன்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இதயத்துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் உடலில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.

எனவே உங்கள் உடல் எடை குறைக்க விரும்பினால் காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

பட்டை

பட்டை உணவிற்கு ஒரு நல்ல மனம் மற்றும் சுவையை கொடுக்கிறது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது மேலும் இது தமனிகளை சுத்தம் செய்கிறது மற்றும் இதில் வெப்பமூட்டும் பண்புகள் இருப்பதால்.

இது உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதுடன் உடலில் உள்ள அதிக அளவு கலோரிகளை எரிக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் பட்டை தூளை உணவில் சேர்த்து வந்தால் அது உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதோடு இனிப்புகளின் மீதான ஆர்வத்தையும் குறைக்கும்.

டாக் சாக்லேட்

அனைவருக்கும் டாக் சாக்லேட் மிகவும் பிடிக்கும் அதுவும் டார்க் சாக்லேட்டை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் அது மனநிலையை மேம்படுத்தும்.

உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது எனவே நீங்கள் உங்கள் உணவில் உள்ள கொழுப்புகளை கரைத்து ஒல்லியாக மாறுவதற்கு விரும்பினால் தினமும் சிறிதளவு டாக் சாக்லேட் சாப்பிட்டு வரலாம்.

பால் பொருட்கள்

ஒரு டம்ளர் பாலில் கால்சியம் அதிக அளவு நிறைந்துள்ளது ஆய்வு ஒன்றில் தினமும் கால்சியத்தை எடுப்பது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பு செல்களை கரைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல் தயிரில் உள்ள ப்ரோபயோடிகள் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு உதவுகிறது,வயிற்றை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

நெய்

பலரும் உடல் எடை குறைக்க வேண்டுமென்றால் நெய் உணவில் சேர்க்கக்கூடாது என்று சொல்கிறார்கள் ஆனால் அது தவறு.

தூய பசும்பால் நெய் ஒருவரது வயிற்றை எளிதில் நிரப்புவதோடு மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.

நெய்யில் உள்ள கொழுப்பானது லீனோடேனிக் அமிலத்துடன் இணைந்து இது உடலில் தேங்கியுள்ள விடாப்படியான கொழுப்பை கரைக்க உதவுகிறது.

காபி

உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி புரியும் ஒரு அற்புதமான பானம் தான் காபி.

இந்த காபி ஒருவரை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது ஆய்வு ஒன்றில் காபி குடிக்காதவர்களை விட காபி குடிப்பவர்களின் உடலின் மெட்டபாலிசத்தை அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அடர்த்தியான தலைமுடிக்கு என்ன உணவு

கேரளா பெண்கள் எப்பொழுதும் அழகாக இருப்பதற்கு

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா

வீட்டுக் கடன் முதல் கார் லோன் வரை

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது

What is your reaction?

Excited
7
Happy
14
In Love
2
Not Sure
3
Silly
1