
List of post office schemes in India 2023
இந்திய மக்கள் தங்களுடைய பணத்தை குறிப்பாக குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் எதிர்பாராத ஏற்படும் மருத்துவ செலவிற்காக அதிக அளவில் பணத்தை சேமிக்கிறார்கள்.
இந்திய மக்களின் எப்பொழுதும் முதன்மை தேர்வாக இருப்பது தபால்துறை மற்றும் தபால் துறையில் 10 திட்டங்கள் இருக்கிறது.
இந்திய மக்கள் அதிக அளவில் அஞ்சல் துறையில் முதலீடு செய்வதற்கு சில காரணங்கள் இருக்கிறது.
முக்கியமாக சந்தை அபாயம் இல்லை, வருமான வரி விலக்கு சில திட்டங்களுக்கு இருக்கிறது, பணத்திற்கு எந்த ஒரு அபாயமும் ஏற்படுவதில்லை.
இந்தியாவில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் உங்களுடைய சேமிப்பு கணக்கை மாற்றிக் கொள்ள முடியும்.
சில திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்படுகிறது.
தபால்துறை தற்போது முன்னணி வங்கி போலவே சேமிப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
நீங்கள் தபால் துறையில் சேமிப்பு திட்டம் வைத்திருந்தால் அதற்கு (ATM) அட்டை பெற்றுக் கொள்ள முடியும், இதன் மூலம் இந்தியாவில் எந்த இடத்திற்கு நீங்கள் சென்றாலும் பணம் எடுக்க முடியும்.
குழந்தைகளின் கல்விச் செலவு திருமண செலவு போன்றவற்றிற்கு தனியாக முதலீட்டு திட்டங்கள் தபால் துறையில் இருக்கிறது.
வருங்கால வைப்பு நிதி திட்டம் மூலம் நீங்கள் அதிகப்படியான பணத்தை இந்த திட்டத்தில் சேமிக்க முடியும்.
இந்த திட்டம் மூலம் அதிகப்படியான வருமானம் உங்களுக்கு கிடைக்கும்,இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு இருக்கிறது.
தேசிய தங்க பத்திர திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான நேரம் ஒதுக்கப்படும்.
அப்போது இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம் நம் நாட்டின் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கூட இந்த திட்டத்தில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்து அதிகப்படியான வட்டி வருவாயை பெறுகிறார்.
தபால் துறையில் இருக்கும் 10 திட்டங்கள்
Post Office Savings Sccount (SB) (தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (SB)
National Savings Recurring Deposit Account (RD) (தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு)
National Savings Time Deposit Account (TD) (தேசிய சேமிப்பு நேர வைப்பு கணக்கு)
National Savings Monthly Income Account (MIS) (தேசிய சேமிப்பு மாத வருமான கணக்கு)
Senior Citizens Savings Scheme Account (SCSS) (மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கு)
Public Provident Fund Account (PPF) (பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு)
Sukanya Samriddhi Account (SSA) (சுகன்யா சம்ரித்தி கணக்கு)
National Savings Certificate (NSC) (தேசிய சேமிப்புச் சான்றிதழ்)
Kisan Vikas Patra (KVP) (கிசான் விகாஸ் பத்ரா)
PM Cares For Children Scheme
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to protect pan card aadhar card 2023
How to get token for magalir urimai thogai..!