Uncategorized

Lone wolf attack in covai car blast

Lone wolf attack in covai car blast

Lone wolf attack in covai car blast

கோவை சம்பவம் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த திட்டம், பிரபலமான கோவில்களை நோட்டமிட்டு ஒத்திகையை செய்த குழு வெளியான அதிர்ச்சி தகவல்..!

கோவை தற்கொலைப்படை தாக்குதல் தனி ஓநாய் தாக்குதல் முறையில் நடத்த திட்டம் வகுக்கப்பட்டு இருக்கலாம் என காவல்துறை உயர் அதிகாரிகள் இப்பொழுது சந்தேகம் கொள்கிறார்கள்.

இதில் உயிரிழந்த ஜமேஷா முபீன்  தனது நெருங்கிய உறவினர்களான அசாருதீன் மற்றும் அப்சர்கானுடன் சேர்ந்து கோனியம்மன், விநாயகர்,சங்கமேஸ்வரர் கோவில், போன்ற முக்கியமான இந்து கோவில்களை.

நோட்டமிட்டு ஒத்திகை பார்த்து உள்ளனர் என்றும் போலீசார் இப்போது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

கோவை உக்கடம் அருகே கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் அருகே சென்று கொண்டிருந்த மாருதி கார் ஒன்று திடீரென்று கடுமையாக வெடித்து தீப்பிடித்தது.

இதில் உக்கடம் ஜி எம் நகரை சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், அதற்குப் பிறகு இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல் என கண்டுபிடிக்கப்பட்டு.

இந்த வழக்கை திமுக அரசு தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிரடியாக மாற்றியுள்ளது.

அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் இப்பொழுது வெளியாகியுள்ளன

இந்த சூழலில் கோவை தற்கொலைப்படை தாக்குதல் என்று பிஜேபி சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் கசிந்துள்ளது.

அதாவது ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் தாக்குதல் நடத்த திட்டம் வகுக்கப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்படுகிறார்கள்.

இது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது அதன் விவரம் முழுவதும் பின்வருமாறு.

கோவையில் முக்கியமான கோவில்களைத் தகர்க்க திட்டம்

ஜமேஷா முபீன் தனது நெருங்கிய உறவினர்களான அசாருதீன் மற்றும் அப்சர்கானுடன் சென்று சங்கமேஸ்வரர்,கோனியம்மன், விநாயகர் கோவில் களை நோட்டமிட்டுக் பார்த்துள்ளார்கள்.

அதற்கான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றும் வேலையில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் தனது உறவினர்கள் அசாருதீன் சென்று மற்றும் அப்சர்கானுடன் காந்தி பார்க்கில் 3 சிலிண்டர்களை வாங்கி இருக்கிறார்கள்.

மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம்

பழைய மார்க்கெட் பகுதிக்கு சென்று டிரம்களை வாங்கி அதில் வெடி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை அடுக்கி வைத்து அதனை வாகனத்தில் வைத்து எடுத்து சென்று இருக்கிறார்கள்.

இந்த சம்பவங்களைப் பார்க்கும்போது மிகப் பெரிய தாக்குதல்களை பல்வேறு இடங்களிலும் முக்கியமான கோவில்களில் நடத்துவதற்கு சதி திட்டம் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் கொள்கிறார்கள்.

இதன் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. (NIA) விசாரணை தொடங்கும் முன்பே பல்வேறு முக்கிய தகவல்களை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை என்றால் என்ன

இந்த சம்பவம் நன்கு திட்டமிட்டதாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் கொள்கிறார்கள் அதுவும் இந்த தாக்குதலானது (Lone wolf attack) என்ற ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் இருக்கலாம் என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது.

அதாவது தீவிரவாத சிந்தனை உடையவர்கள் தனிப்பட்ட முறையில் இதுபோன்ற மிகக்கொடுமையான தாக்குதல் நடத்துவதை ஒற்றை ஓநாய் தாக்குதல் என்று சொல்லப்படுகிறது.

வெளிநாட்டு நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா

நிச்சயம் வெளிநாட்டு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் உறுதியான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஏனென்றால் இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் கைதாகி கேரளா சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை இந்த நபர்கள் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

என்ற தகவல்களும் இப்பொழுது வெளியாகி உள்ளது இதனால் இது ஒரு நன்கு திட்டமிட்டு தீவிரவாத தாக்குதல்.

கணையத்தை பாதுகாக்க உதவும் சிறந்த உணவு வகைகள்..!

இதற்கு  பல்வேறு குழுக்கள், அமைப்புகள், இருக்கிறது அவர்கள் வெளிநாட்டிலிருந்து இவர்களுக்கு ஆர்டர் கொடுத்து இருக்கலாம் எனவும் காவல்துறையினர் இப்பொழுது தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

கோவையின் அடையாளமாக இருக்கும் முக்கியமான கோவில்கள்

கோவையின் கோனியம்மன் அம்மன் கோவில் பிரபலமான கோவில் சங்கமேஸ்வரர் கோவில் விநாயகர் கோவில் போன்ற முக்கிய கோவில்களை இவர்கள் நோட்டமிட்டு இருப்பது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore car blast incident information

ஏனென்றால் இந்த கோவில்கள் கோவையின் ஒரு முக்கிய அடையாளமாகவும் பண்பாட்டு நாகரிகம் போன்றவற்றில் இந்த கோவில்கள் பழங்காலத்திலிருந்து தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0