
LPG cylinder price reduction under Ujjwala scheme
உஜ்வாலா திட்ட கேஸ் சிலிண்டருக்கு மானியம் ரூபாய் 400 ஆக உயர்வு,சிலிண்டரின் விலை அதிரடியாக 200 ரூபாய் குறைப்பு வெளியான முக்கிய தகவல் என்ன..!
உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் 200 ரூபாய் வழங்கப்படும் வரும் நிலையில் தற்போது மேலும் 200 ரூபாய் கூடுதலாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட சமையல் ஏரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசின் அதிரடியாக குறைத்துள்ளது.
200 ரூபாய் குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது, இதன்படி தமிழ்நாட்டில் தற்போது ரூபாய் 9118 ஆக உள்ள எரிபொருள் சிலிண்டரின் விலை.
இனி 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் அதேபோல் திட்டத்தின் கீழ் 400/- மானியம் இனிவரும் காலங்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 400/- ரூபாய் மானியம் வழங்கப்படும் மத்திய அமைச்சரை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் அந்த தகவலை தெரிவித்தார்.
மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய இலவச இணைப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் அடுப்பு மற்றும் முதல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.
திடீரென்று அறிவிக்கப்பட்டதற்கு என்ன காரணம்
கடந்த இரண்டு வருடமாக எரிபொருள் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு கொண்டே இருந்தது மாதம்தோறும் அதுவும் வணிகரீதியான சிலிண்டரின் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு கொண்டே இருந்தது.
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இப்பொழுது எரிபொருள் சிலிண்டரின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
என்று பல்வேறு பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
தீபாவளிக்கு காத்திருக்கும் மக்களுக்கு பரிசு
எரிபொருள் சிலிண்டர் விலை இப்பொழுது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது மேலும் மானியமும் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் தீபாவளிக்கு இன்னும் இரண்டு மாதம் மட்டுமே உள்ள நிலையில் தீபாவளிக்கு பெட்ரோல் டீசல் மீதான விலை 10 ரூபாய் முதல் குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஏனென்றால் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இப்பொழுது மத்திய அரசு பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Electrified Ethanol powered toyota innova 2023..!