செய்திகள்

லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது ஏன் விரிவான முழு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது..!Luna 25 spacecraft Russia sent to the moon exploded

Luna 25 spacecraft Russia sent to the moon exploded

Luna 25 spacecraft Russia sent to the moon exploded

கடைசி நேரத்தில் அடி வாங்கிய ரஷ்யா லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது ஏன் விரிவான முழு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது..!

இந்தியாவுக்கு போட்டியாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா லூனா 25 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையை பெரும் திட்டத்துடன் களம் இறக்கப்பட்ட ரஷ்யாவின் விண்கலம் திட்டம் தோல்வி அடைந்தது என தகவல்கள் கசிந்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யவில்லை,எனவே தென்துருவத்தில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக.

இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனம் ரூபாய் 615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது.

இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக சென்றது தற்போது வரை விண்கலம் திட்டமிட்டபடி அதனுடைய பாதையில் வெற்றிகரமாக பயணித்து வருகிறது.

சந்திரயான்-3 நிலவின் சுற்றுவட்ட பாதையில் நுழைந்த பிறகு ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டெர் தனியாக பிரிந்துள்ளது, வெற்றிகரமாக அதன்படி படிப்படியாக நிலவுக்கு விக்ரம் லேண்டருக்கும் இடையே உள்ள தூரம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ம் தேதி லேண்டெருக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம் 113 கிலோமீட்டர் எனவும்,அதிகபட்சம் 157 கிலோமீட்டர் எனவும் இருந்தது.

இதன் பிறகு இன்று அதிகாலை விக்ரம் லேண்டெர் நிலவின் அருகில் மிக சிறிய தூரத்தில் நெருங்கியுள்ளது.

இன்று அதிகாலை 1.53 மணி அளவில் விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம்,என்பது 25 கிலோமீட்டர் ஆகவும் அதிகபட்சம் 134 கிலோமீட்டர் ஆகும் குறைக்கப்பட்டுள்ளது.

நிலவில் தரை இறங்கும் விக்ரம் லேண்டர்

அடுத்த கட்டமாக நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டாரை மெதுவாக தரையிறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் துவங்கியுள்ளார்கள்.

வருகின்ற 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரஷ்யா நிலவை ஆய்வு செய்வதற்கு லூனா 25 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பப்பட்டது,இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில்,லூனா விண்கலத்தை ரஷ்ய ஆகஸ்ட் 10ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

இந்திய நேரப்படி அதிகாலை 2.10 மணியளவில் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவில் மீண்டும் ஆய்வு செய்வதற்கு விண்கலத்தை செலுத்தி உள்ளது.

இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையை ஐந்தே நாளில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு 4 முதல் 5 நாட்கள் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றும் இந்த விண்கலம் தென்துருவத்தில் தரை இறங்குவதற்கு சரியான இடத்தை ஆய்வு செய்து,அதன் பிறகு தரையிறங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகில் சக்தி வாய்ந்த ராக்கெட் வைத்துள்ள நாடு ரஷ்யா இதன் மூலம் நிலவின் சுற்றுவட்ட பாதையை வெறும் ஒரே வாரத்தில் லூனா விண்கலம் சென்றடைந்து விட்டது.

அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி ஏவப்பட்ட விண்கலம் ஆகஸ்ட் 21ஆம் தேதி தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டது.

சந்திராயன்-3 விண்கலம் 23ஆம் தேதி தான் தரையிறங்க திட்டமிட்டு இருந்த நிலையில்.

21ஆம் தேதி லூனா 25 தரையிறங்கும் என ரஷ்யா விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும் விண்கலம்

லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பை நெருங்கும்போது சிக்கல்களை சந்தித்துள்ளது,அதாவது விண்கலம் நிலவின் தரை இறங்குவதற்கான இறுதி கட்ட சுற்றுவட்ட பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இறுதி சுற்றுவட்ட பாதைக்கு லூனா 25 விண்கலத்தை செலுத்த முடியவில்லை சரியாக,இதனால் தொடர்ந்து தனது பாதையிலே லூனா 25 விண்கலம் சுற்றி வந்துள்ளது.

திட்டமிட்டபடி விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது,உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இந்த விண்கலத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

விண்கலம் கடைசி நேரத்தில் விழுந்து நொறுங்கியது,என ரஷ்ய தரப்பில் ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

லூனா 25 விண்கலம் திட்டம் தோல்வி அடைந்து விட்டதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது,கடந்த 1976 ஆம் ஆண்டுக்கு பிறகு நிலுவை ஆய்வு செய்வதற்கு ரஷ்யா விண்கலம் செலுத்தியது இதுவே முதன்முறை.

உக்கரையின் போர் உள்பட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ரஷ்ய விண்வெளி திட்டத்தில் கவனம் செலுத்தியது,அந்த நாட்டு விஞ்ஞானிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

PM e Bus sewa scheme details in tamil 2023..!

தொப்பையை குறைக்க சிறந்த 5 பானங்கள்..!

பாஜக ஆட்சி பிரதமராகும் மோடி இந்திய கூட்டணிக்கு

What is your reaction?

Excited
2
Happy
1
In Love
1
Not Sure
2
Silly
1