
Madurai AIIMS Medical College construction work
மதுரையில் எய்ம்ஸ் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கிய ஜப்பான் நிறுவனம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்குகிறது..!
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ரூ 1500 கோடி நிதியை ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளது.
ஜைக்கா நிறுவனத்தின் உதவியுடன் கட்டப்பட உள்ள நிலையில் மீதி நிதியை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.
மதுரை மாவட்டம் தோப்பூரில் சுமார் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளாகியும் ரூபாய் 5 கோடியில் மட்டுமே சுற்று சுவர் கட்டப்பட்டு உள்ளது.
இதனால் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஜைக்கா நிறுவனத்துடன் நிதி ஒப்பந்தம்
அடிக்கல் நாட்டி ஒன்றரை வருடம் கழித்து ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தான பின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லப்பட்டது.
அப்போதைய அதிமுக அரசு மருத்துவமனைக்கு சரியான இடத்தை ஒப்படைக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியது.
மருத்துவமனை கட்ட இடம் ஒதுக்கீடு
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அன்று மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை வருகின்ற 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
எப்பொழுது பணிகள் தொடங்கும்
லோக்சபாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமாவளவன் எம்பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரை இராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு தற்காலிகமான வகுப்புகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் பற்றிய முழு விபரங்களையும் தரும்படி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர் கேட்ட விவரங்கள் கேட்ட நிலையில் ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கியுள்ளது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பணிகள் எப்பொழுது முடிக்கப்படும்
இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 1,977 கோடி ரூபாய் ஜைக்கா நிறுவனம் மட்டும் ரூபாய் 1,500 கோடி நிதி உதவி அளிக்க உள்ளது என்றும் ஜைக்கா நிறுவனத்தின் உதவியுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்ட உள்ள நிலையில்.
மீதமுள்ள நிதியை அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்பொழுது இதன் பணிகள் தொடங்கும்
மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது 1,978 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமான பணிகள்.
ஒரே வாரத்தில் சைனஸ் நோயை குணமாக்கும் அற்புத மருந்து..!
2023 ஆண்டு தொடங்கப்பட்ட 2026 ஆண்டு நிறைவடைய உள்ளது என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
what is heat wave and how to protect your body
இப்போதுதான் நிதி ஒதுக்கி இருக்கிறார்கள் விரைவில் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.