செய்திகள்

இந்த ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு Main cause of Odisha train accident clear explained

Main cause of Odisha train accident clear explained

Main cause of Odisha train accident clear explained

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2ம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ரயில் விபத்து இந்தியாவில் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த ரயில் விபத்து குறித்து விசாரணை தீவிரமாக பல்வேறு கோணங்களில் நடந்து வரும் சூழ்நிலையில் சில முக்கியமான காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது இது திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது மக்களிடம் மிகுந்த சந்தேகம் உள்ளது.

அதாவது இதுபோன்ற ஒரு விபத்து நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை இன்டர் லாக்கிங் மற்றும் பாண்டிங் முறையில் தான் பிரச்சினை இருப்பதாக இதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் காணலாம்.

கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி இரவு 7 மணிக்கு ஒடிசா மாநிலம் பலசோர் பகுதியை அடுத்து பஜார் ரயில் நிலையம் பகுதியில் ஷாலிமாறிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்.

பெங்களூரில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன இது இந்தியாவின் 3வது மிகப் பெரிய ரயில் விபத்தாக இருக்கிறது.

இந்த விபத்தில் சுமார் 288 நபர்கள் உயிரிழந்தார்கள் 1000 நபர்களுக்கு மேல் படுகாயம் அடைந்தார்கள்.

இந்தியாவை உலுக்கிய இந்த ரயில் விபத்து சம்பவம் குறித்து தற்போது சிபிஐ விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக நடந்த ஆய்வில் இந்த விபத்திற்கு காரணம் எலக்ட்ரானிக் இன்டெர் லாக்கிங் முறை மற்றும் பாயிண்டிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் என கூறப்படுகிறது.

இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் முன் இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பலசோர் பகுதியை அடுத்து பஜார் ரயில் நிலையத்தில் மொத்தம் இரண்டு மெயின் லைன்களும், இரண்டு லூப் லைன்களும் இருக்கிறது.

பஜார் ரயில் நிலையம் பகுதி சிறிய ஸ்டேஷன் என்பதால் அங்கு பெரும்பாலான ரயில்கள் நிற்காது.

இதில் லூப் லைன்களில் மற்ற முக்கியமான ரயில்கள் வரும் பொழுது சாதாரண ரயில்கள் அல்லது சரக்கு ரயில்கள் ஓரங்கட்டி நிறுத்தப்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

சம்பவம் நடந்த அன்று இந்த பகுதியில் உள்ள இரண்டு லூப் லைன்களிலும் சரக்கு ரயில்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டு இருந்தது.

ஒரு மெயின் லைனில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் மற்றொரு மெயின் லைனில் பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்ல சிக்னல் வழங்கப்பட்டது.

அப்பொழுது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் செல்லாமல் லூப் லைனில் மாறி சென்று சரக்கு ரயிலுடன் மோதியதாக கூறப்படுகிறது.

சிலர் இந்த ரயில் லூப் லைனில் மாறுவதற்கு முன்பே ட்ரெயினில் ஆகிவிட்டதாக அதாவது தடம் புரண்டு விட்டது என்று கூறுகின்றனர்.

மெயின் லைனில் செல்ல வேண்டிய ரயில் எப்படி லுப் லைனுக்கு மாறியது என்பதுதான் தற்போது புரியாத கேள்விக்குறியாக இருக்கிறது.

லூப் லைனில் மாறிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் முன்பக்கம் இருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் அதன் பெட்டியில் தடம் புரண்டு பக்கத்து டிராக்கில் சென்று கொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி சில பெட்டிகள் மட்டுமே தாக்கியது.

இதில் மூன்று ரயில்களும் சேதம் அடைந்தன பயணிகள் ரயிலில் இருந்த பலர் உயிரிழந்தனர் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

லூப் லைனுக்கும், மெயின் லைனுக்கும் மாறி செல்லும் முறை இன்டர் லாக்கிங் எனப்படும் சிஸ்டம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

தண்டவாளத்தின் பொசிஷன் சிக்னலிங் சிஸ்டம் சிக்னல் கட்டுப்பாட்டாரை ஆகியவற்றை இணைத்துதான்.

கட்டுப்பாட்டு அறையில் வழங்கப்படும் சிக்னலுக்கு ஏற்பட தண்டவாளத்தின் பொசிஷன் மற்றும் சிக்னல் தானியங்கியாக மாறிக் கொள்ளும்.

தற்போது இந்தியாவில் அதிநவீன இன்டர் லாக்கிங் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு மேனுவல் லிவர் மூலம் இழுப்பது போன்ற இருந்தது ஆனால் அதிநவீன தொழில்நுட்பத்தில் இப்பொழுது இன்டெர் லாக்கிங் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் சிக்னல் லைட்டும் இன்டர்லாக்கிங் ஆன தண்டவாளமும் இணைக்கப்பட்டிருக்கும்.

ஒருவேளை கட்டுப்பாட்டு அறையின் சிக்னல் கிடைத்த பின்பும் தண்டவாளம் அதற்கு தகுந்தார் போல் மாறாமல் இருக்கிறது என்றால் அதை உடனடியாக சிக்னல் கண்டுபிடித்து சிக்னலும் பச்சை நிறத்திற்கு மாறாமல், சிவப்பு விளக்கு மாறிவிடும்.

இந்த இன்டெர்லாக்கிங் சிஸ்டம் ஆட்டோமேட்டிக்காக இருப்பதால் இதில் எந்த குழப்பமும் ஏற்படாது.

மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு மாற பயிண்டிங் சிஸ்டம் இருக்கிறது.

இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மெயின் லைனில் செல்ல வேண்டும் என்றால் பைண்டிங் 17 ல் இருக்க வேண்டும் லூப் லைனில் செல்ல வேண்டுமென்றால் 17Aல் இருக்க வேண்டும்.

இந்த ரயிலுக்காக கட்டுப்பாட்டு அறையில் பாயிண்ட் 17 சிக்னல் தான் வழங்கப்பட்டது, ஆனால் தண்டவாளம் பாயிண்ட் 17A நோக்கி இருந்தது.

இப்படி நடப்பதற்கு சாத்தியமே இல்லை இதுதான் விபத்திற்கு முக்கிய காரணம்.

அனைத்தும் தானியங்கி முறையில் இருப்பதால் கட்டுப்பாட்டாரை சிக்னல் பாயிண்ட் 17 சிக்னல் இருக்கும்போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் தான் சென்றிருக்க வேண்டும்.

சரக்கு ரயிலுக்காக 17Aக்கு மாற்றப்பட்ட தண்டவாளம் பாயிண்ட் 17 Aல் இருந்து மாறாமல் 17ல் இருந்திருந்தால் சிக்னல் எல்லாம் சிவப்பு விளக்குகள் இருந்திருக்கும்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் நின்றிருக்கும் ஆனால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் செல்ல சிக்னல் கிடைத்தும்.

அது லூப் லைனுக்கு மாறியதுதான் விபத்திற்கு அடிப்படை காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படி நடக்க வாய்ப்புகள் இல்லை ஒருவேளை இப்படி நடக்க இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும் என ரயில்வே தெரிவிக்கிறது.

முக்கியமான காரணங்கள் என்ன

ஒன்று மெயின் லைனுக்காக சிக்னல் கிடைத்த பின்பு யாரோ ஒருவர் இதை மேனுவலாக தண்டவளத்தை மட்டும் 17Aக்கு மாற்றி இருக்க வேண்டும்.

இந்த தண்டவாளம் சிக்னல் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்ற இணைக்கும் வகையில் கேபில் மற்றும் ராடுகள் இடையே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இதற்குரிய சரியான சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லாமல் இருந்திருக்கும்.

இந்த சிக்னல் எல்லாம் கட்டுப்பாட்டு அறையில் லைட்டிங் கொண்ட ஒரு பேனலில் இணைக்கப்பட்டிருக்கும்.

அந்த பேனலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு சிவப்பு விளக்கிற்கு பதிலாக, பச்சை விளக்கிற்கு மாற்றி எரிந்திருக்ககூடும்,இதை கவனிக்காமல் விட்டு இருப்பார்கள்,இதனால் கூட விபத்து ஏற்பட்டு இருக்க வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த விபத்திற்கான காரணம் கோரமண்டல எக்ஸ்பிரஸ் என்பதுதான் உண்மையான விஷயம் ,ஆனால் இந்த ரயிலை ஓட்டி சென்ற லோக்கோ பைலட் இதற்கு காரணமாக இருக்க முடியாது.

ரயில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான வேகத்தில் செல்லவில்லை எந்த லைனில் செல்ல வேண்டும் என்பது ஸ்டேஷன் சிக்னல் கட்டுப்பாட்டாளர்களின் கையில் தான் இருக்கிறது.

இதில் ரயில் லோகோ பைலட் செய்ய எந்த வேலையும் இல்லை.

இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவிக்கும்போது இந்த பிரச்சனைக்கு காரணமான நபர் கண்டுபிடிக்கப்பட்டார் என தெரிவித்தார்.

தற்போது அவரிடம் இந்த விபத்து குறித்து விசாரணை தீவிரமாக பல்வேறு கோணங்களில் நடைபெற்று வருகிறது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தா அல்லது மனித தவறுகளால் நடந்த விபத்தா அல்லது தொழில்நுட்ப முறையில் ஏற்பட்ட பிரச்சனையா என்பது குறித்து விரைவில் முழுமையான தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு குறைகிறது

வக்ர சனியால் உருவாகிறது 2 ராஜயோகங்கள்

12ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் தேதி வெளியீடு

வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு எவ்வளவு

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0