Uncategorized

margali matham special benefits in tamil

margali matham special benefits in tamil

margali matham special benefits in tamil

மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்ன ஏன் அதிகாலையில் எழ வேண்டும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!

மார்கழி மாதம் என்றாலே கடவுள் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக இந்து மதத்தில் கருதப்படுகிறது தமிழ் வருடத்தின் 9-வது மாதம் மார்கழி மாதமாக இருக்கிறது.

இம்மாதம் தனுர் மாதம் என்று பழங்கால இலக்கியங்களில் அழைக்கப்படுகிறது, மார்கழி மாதத்தில்தான் நம்முடைய உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கும்.

மார்கழி மாதத்தில் கோவில்களில் அதிகாலையில் வழிபாட்டில் வேதங்களுக்கு, பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சிஆழ்வார் பாசுரங்கள், பாடப்படுகிறது.

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் பெண்கள் குளித்து விட்டு வாசலில் கோலம் போட்டு, இறைவனை வழிபாடு செய்வது, இன்றும் வழக்கமாக பின்பற்றப்படுகிறது தமிழ் கலாச்சாரத்தில்.

தமிழ் சங்க இலக்கியங்களின் படி மார்கழி மாதம் தேவர் மாதம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது கடவுளை வழிபடும் மாதமாக கருதப்படுகிறது, தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.

இறைவனை வழிபடுவதற்காக இந்த மாதம் பின்பற்றப்படுவதால் இந்த மார்கழி மாதத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் இந்து கலாச்சாரத்தில் நடத்தப்படுவதில்லை.

சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும், சூரியன் உதிப்பதற்கு முன்பு பூஜை ஆராதனை நடைபெறும்.

மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள இரண்டு மணி நேரத்தை குறிக்கும் நேரமாக கருதப்படுவதால், சூரிய உதயத்திற்கு முன்பே இந்த காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஓசோன் மண்டலம் மற்றும் சுத்தமான காற்று

மார்கழி சிறந்தது என்னவென்றால் நம்மளுடைய பிரபஞ்சத்தில் இருக்கும் ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வரும்.

இதனால் அதிகாலையில் சுத்தமான காற்று என்பது பூமியில் படர்ந்து இருக்கும் நமது உடலில் பொதுவாக 80 சதவீத ஆக்சிஜனும் 20 சதவீத கரியமிலவாயு இருக்கவேண்டும்.

ஆனால் இப்போது இருக்கும் அதிநவீன அறிவியல் வளர்ச்சியால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து பல நோய்கள் ஏற்பட்டுவிடுகிறது.

எனவே மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஓசோன் படலத்தில் இருந்து வரும் சுத்தமான காற்று வேறு எந்த மாதத்திலும் கிடைக்காது.

அதனால் தான் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து, சுத்தமான காற்றை சுவாசிக்கும் பொழுது, நம்முடைய உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் முழுவதும் சுத்தமாக கிடைக்கும்.

இதனால் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து விடும்.

தமிழ் கலாச்சாரத்தின் அறிவியல்

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தானங்கள் செய்ய வேண்டுமென நம்முடைய கலாசாரமும் சொல்கிறது.

அந்தவகையில் மார்கழி மாதத்தில் செய்யும் தானங்கள், உங்களுக்கு பெரிய பாக்கியத்தையும் கொண்டுசேர்க்கும், மார்கழி என்றாலே அதிக குளிர் இருக்கும் என்று பொருள்.

இந்த காலத்தில் வசதி இல்லாத ஏழை எளியவர்கள் சாப்பிடுவதற்கு உணவு, உடுக்க உடை, இரவு தூங்கும் பொழுது இந்த குளிரைத் தாங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு மார்கழி மாதத்தில் குளிரைத் தாங்கிக்கொள்ள கம்பளி போர்வை தானமாக கொடுக்கலாம்.

இந்த தானம் செய்வதன் மூலம் நிறைய புண்ணியங்கள் உங்களை தேடி வந்தடையும், இதனால் இம்மாதத்தில் உங்களால் முடிந்தவரை யாராவது ஒருவருக்காவது இதுபோல் உதவி செய்து வாருங்கள்.

கோலம் போடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்

சில நபர்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் கடும் குளிருக்கு பயந்து விடியற்காலையில் எழுந்து வாசலில் கோலம் போடாமல் இரவு தூங்குவதற்கு முன்பு போல போட்டுவிடுவார்கள்.

இரவு கோலம் போடுவதால் உடலுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைப்பதில்லை.

தமிழ் கலாச்சாரம் சொல்லும் ஒவ்வொரு விஷயத்துக்கும் அதற்கு பின்பு அறிவியலில் மறைந்திருக்கும் மிகப்பெரிய ஒரு ஏதோ ஒரு விஷயம் இருக்கும்.

மார்கழி மாத அதிகாலையில் கிடைக்கும் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு வாசலில் கோலம்போடப்படுகிறது, கோலத்தில் கூட தானம் உள்ளது என்றுதான் சொல்லுவார்கள், அதை பச்சரிசி மாவில் தான் போடுவார்கள் சங்ககாலத் தமிழ் மக்கள்.

கோலம் போடுவதால் மனம் அமைதி பெறும், மனதை ஒருநிலை படுத்தலாம், நேர்மறையாக சிந்திக்கலாம், சுத்தமான காற்றை பெற முடியும், ஆரோக்கியமாக இருக்கலாம்.

மார்கழி மாதத்தில் நடைபெறும் விழாக்கள்

மார்கழி மாதத்தில் பொதுவாக சைவ மற்றும் வைணவ கோயில்களில் திருவிழாக்கள் கடவுள்களுக்கு நடைபெறும், திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி.

பாவை நோன்பு, நோன்பு படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி போன்ற பல்வேறு வகையான விழாக்கள் நடத்தப்படுகிறது.

குடிப்பழக்கத்தை நிறுத்த சித்த வைத்தியம் சொல்லும் எளிய மருந்து குறிப்புகள்..!

நீங்களும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவதால், மனமும் அமைதி பெறும்.

OLA electric scooter delivery starting 2022

நேர்மறையாக சிந்திக்கலாம், உடல் ஆரோக்கியமாக இருக்கும், இதனால் உங்களுடைய செல்வச்செழிப்பு அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் பெறலாம்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0