Uncategorized

Medical report regarding the death of Ms J Jayalalitha

Medical report regarding the death of Ms J Jayalalitha

Medical report regarding the death of Ms J Jayalalitha

சசிகலாவை சித்தரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடந்தது என்ன.

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா உயிரோடு மீண்டும் தன்னுடைய இல்லத்திற்கு திரும்பாமல்.

சடலமாக கொண்டுவரப்பட்டது தமிழக மக்களிடையே மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் செல்வி ஜெயலலிதா உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியது.

தமிழகம் சரியான திசையில் வேகமாக வளர்ச்சி பாதைக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் அந்த நேரத்தில் சரியான ஆளுமை இல்லாமல் போனதால் தமிழகத்தின் வளர்ச்சி என்பது கடுமையாக பாதிக்கப்பட்டது.

பிஜேபி கொண்டு வரும் எந்த ஒரு சட்டத்தையும் கடுமையாக எதிர்த்தார் அது மட்டுமில்லாமல் தமிழகத்திற்கு தொந்தரவு கொடுக்கும் எந்த மத்திய அரசும் ஜெயலலிதா இருக்கும் வரை எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை.

இதுபோன்ற ஒரு சிறந்த ஆளுமை தமிழகத்தில் இல்லாததால் இன்று தமிழகத்தினுடைய நிலைமை என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியும்.

செல்வி ஜெயலலிதா 75 நாட்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அதற்கு பிறகு உயிரிழந்து விட்டார் என்ற செய்தி வெளியானது அவர் மருத்துவமனையில் இருக்கும் பொழுது ஒவ்வொரு அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் கட்சி நிர்வாகிகளும்.

மாறி மாறி தகவல்களை வெளியிட்டு கடுமையான சந்தேகத்தை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தினார்கள்.

2வது முறை ஆட்சியில் அமர்ந்த செல்வி ஜெயலலிதா

தமிழகத்தின் சிறந்த முதல்வராக கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 2வது முறையாக 234 தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து நின்று வெற்றி பெற்றது.

மே மாதம் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக மக்களின் ஆசிர்வாதத்துடன் 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசும்போது நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.

அதிமுக என்ற மாபெரும் கட்சி 200 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் நீடித்து இருக்கும்.

மறுபடியும் சிறந்த நல்லாட்சி கொடுக்கும் என்று கர்ஜனையுடன் பேசினார்.

மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்ட முதல்வர்

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மெட்ரோ ரயில் நிலையம் தொடக்க விழாவில் பங்கேற்ற செல்வி ஜெயலலிதா சற்று சோர்வுடன் இருந்தார்.

அவரது நடையில் லேசான தள்ளாட்டம் இருந்தது ஆனாலும் அவரது பேச்சில் அதே கம்பீரம் இருந்தது.

அன்றைய தினம் இரவு உடல்நலக் குறைவினால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த நாள் முதல் அனைத்து சம்பவங்களும் ரகசியமாகபட்டன ஊடகங்களிலும் மறைக்கப்பட்டது உண்மை நிகழ்வு என்ன என்று தெரியவில்லை.

அப்போலோ மருத்துவமனை அறிக்கை என்ன

காய்ச்சல் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக செல்வி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து அப்போலோ மருத்துவமனைதெரிவித்தது.

75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த செல்வி ஜெயலலிதா இறுதியில் சடலமாக அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார்.

யார் முதல் குற்றவாளி யார் துரோகி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் டாக்டர் கே எஸ் ரவிக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை

ஜெயலலிதா அவருக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவ குழு 5 முறை சென்னை வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.

அமெரிக்காவிலிருந்து வந்த டாக்டர் ஜெயலலிதாவுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தார், ஆனாலும் அது நடக்கவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதலே சசிகலாவுடன் மோதலில் இருந்து ஜெயலலிதா

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது ஜெயலலிதாவால் கூட  MLA ஆக முடியவில்லை.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த செல்வி ஜெயலலிதா இவை அனைத்திற்கும் காரணம் சசிகலா என்று புரிந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார்.

ஜெயலலிதா சுதாகரனை தன்னுடைய வளர்ப்பு மகன் இல்லை என்றும் அறிவித்தார்.

கட்சிப் பொறுப்புகளில் இருந்து முழுமையாக சசிகலா குடும்பத்தை நீக்கினார், ஆனால் சில மாதங்களில் போயஸ் தோட்ட இல்லத்திற்கு சசிகலா மீண்டும் திரும்பினார்.

இல்லத்தை விட்டு வெளியேற்றிய ஜெயலலிதா

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதும் சில மாதங்களில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கியது.

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், யாரும் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கடுமையான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஆனால் சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுக்க 10 மாதங்களில் அவரை மட்டும் தனது இல்லத்தில் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.

மற்றவர்கள் யாரையும் ஜெயலலிதா கட்சியில் வீட்டினுள் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில்தான் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சுமுக உறவு இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் தெளிவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முக்கியமான சிகிச்சையை திட்டமிட்டுத் தடுத்த சசிகலா

ஜெயலலிதா சசிகலா இருவருக்கும் சுமூகமான உறவு இல்லாததால் சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை என்று அழைக்கப்படும்.

இருதயத்திற்கு தேவையான முக்கியமான சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் என் கடைசி வரை நடக்கவில்லை.

மருத்துவமனையில் சசிகலா செய்த திடுக்கிடும் தகவல்கள்

அதிமுக பொதுச் செயலாளராகவும் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கட்சி தொண்டர்கள் எதிரில் நிற்க கூட அஞ்சி நடுங்குவார்கள்.

மருத்துவ காளான் வளர்ப்பு தொழில் வீட்டிலிருந்து 4 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்..!

அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் எப்போது பதவி பறிபோகும் என்று அச்சத்துடன் இருப்பார்கள்.

காணும் இடமெங்கும் எதிரிகள் இல்லை என்று கடந்த 2014ஆம் ஆண்டு பேசியிருந்தால் செல்வி ஜெயலலிதா.

அவர்களுக்கு பிறகு வீட்டிற்குள் இருந்த மறைமுக எதிரியை கண்காணிக்க தவறி விட்டார் என்றுதான் அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

Two women were sacrificed in Kerala

சதிலீலாவதியாக செயல்பட்ட சசிகலா ஜெயலலிதாவிற்கு மறக்க முடியாத மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டார்.

என்று தமிழக மக்கள் இப்போது வருத்தத்துடன் சமூக வலைதளங்களில் தங்களுடைய ஆதங்கங்களை தெரிவிக்கிறார்கள்.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0