
Meen kulambu seivathu eppadi in tamil 2022
மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்பதற்கான சில எளிமையான குறிப்புகளை தெரிந்து கொள்ள போகிறோம்.
இறைச்சி வகைகளில் மீன் குழம்பு என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.
கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன், குளம் மீன்,கிணற்று மீன் என அனைத்து வகையான மீன்களும் மிகவும் சுவை கொண்டதாக இருக்கிறது.
மீன் குழம்பு, மீன் வருவல் என்றாலே, அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் மீன்களில் ஏராளமான வகைகள் இருக்கிறது ஒவ்வொரு மீனும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
நாம் இந்த கட்டுரையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள போகிறோம்.
மீன் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்
உங்களுக்கு பிடித்த மீன் தோராயமாக – அரை கிலோ
புளி – தேவையான அளவு
மல்லித்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் – அரைத்தது
நல்லெண்ணெய் – 2 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சீரகத்தூள் – 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள் – 3 டேபிள்ஸ்பூன்
மீன் குழம்பு செய்முறை 1
ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு 1 டேபிள்ஸ்பூன், சிவப்பு மிளகாய் 4, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அதில் சின்ன வெங்காயம் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும், பிறகு அதில் தக்காளி சேர்த்து தக்காளி தொக்கு ஆகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
மீன் குழம்பு செய்முறை 2
புளிக்கரைசல் செய்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் சீரகத்தூள் 4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் 4 டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்.
மஞ்சள்தூள் தேவையான அளவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து, அதை வாணலியில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
மீன் குழம்பு செய்முறை 3
குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கழுவி வைத்திருக்கும் மீனை சேர்க்க வேண்டும் அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அதில் ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நன்கு வேக வைக்கவேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி விட வேண்டும், இப்பொழுது சுவையான மீன் குழம்பு தயாராகிவிட்டது.
மீன்களில் எந்த வகையான மீன் அதிக சுவை கொண்டது..!
குறிப்பாக மீன் குழம்பை மண் பானையில் செய்தால் அதிக அளவு சுவை கொண்டதாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் அடுத்த நாள் வைத்து இதனை சாப்பிடலாம்.
Tips to get high yields from mushroom cultivation
மீன் வறுவல், மீன் குழம்பு, மீன் கிரேவி, என பல வகைகளில் மீனை சமைத்து சாப்பிடலாம், இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கிறது.
குறிப்பாக ஒமேகா 3 ஊட்டச்சத்து உடலில் பல்வேறு விதமான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.