
Money transfer to another account problem 2023
தவறான வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டீர்களா கவலைப்படாதீர்கள் உடனே பெற்றுவிடலாம் எப்படி..!
தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுவரும் இந்த நிலையில் வங்கி சேவைகள் அனைத்தும் இணையதளம் ஆகிவிட்டன.
இன்று வங்கியில் பணத்தினை டெபாசிட் செய்வது கூட எளிதாக ஆகிவிட்டது இயந்திரம் மூலம்.
இப்படி வங்கியில் பல சேவைகள் இணையதளம் மூலம் பெறும் வசதிகள் வந்துவிட்டன.
இருந்தாலும் சில பிரச்சினைகள் நீடித்துக் கொண்டே இருக்கிறது, வங்கியில்,நீங்கள் செய்யும் சிறு தவறு கூட உங்களுக்கு எதிராக அமைந்துவிடும்.
ஆக நீங்கள் ஒவ்வொரு முறையும் பரிவர்த்தனை செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
அப்படி நீங்கள் சிறு தவறு கூட அது உங்களுக்கு கூட பாதகமாக அமைந்து விடலாம்.
நீங்கள் தவறான நபருக்கு அல்லது தவறான வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டால் எப்படி பணத்தை திரும்பப் பெறுவது.
ஏனெனில் அந்த மாதிரியான சமயத்தில் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பதற்றம் மட்டுமே இருக்கும்.
அடுத்து என்ன செய்வது என யோசிக்காமல் பணம் போய்விடுமோ என்ற அச்சம் மட்டும் தொற்றிக்கொள்ளும் உங்களுக்கு.
பணம் செலுத்தும் நபருக்கு தான் பிரச்சனை
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறை படி பண பரிமாற்றம் செய்யும் பொழுது பயனாளியின் வங்கிக் கணக்கு எண் மற்றும் மற்ற விவரங்களை கொடுப்பது பணம் செலுத்தும் நபரை சேரும்.
இணையதள பணப் பரிமாற்றத்தில் தவறான கணக்கிற்கு பணம் சென்றுவிட்டால்.
அந்த எண்ணில் யாருக்கும் வங்கி கணக்கு இல்லை எனில் தானாகவே பணம் செலுத்திய நபரின் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்.
உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்
நீங்கள் தவறுதலாக அனுப்பிய வங்கி கணக்கு எண்ணில் யாரேனும் இருந்தால் அது சிக்கல்தான்.
ஏனெனில் அந்த பணத்தை அந்த கணக்கு உரிமையாளரின் அனுமதியின்றி பணத்தைத் திரும்பப் பெற முடியாது.
இப்படி தவறுதலாக இன்னொருவரின் கணக்கிற்கு பணத்தை செலுத்தியது தெரியவந்தால், பணம் செலுத்தியவர் உடனடியாக வங்கியை அணுகி பணத்தை தவறுதலாக செலுத்தியதை தெரிவிக்க வேண்டும் கட்டாயம்.
பணத்தை எப்படி திரும்பப் பெறுவது
நீங்கள் தவறாக செலுத்திய பணத்தை திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் உங்களுடைய வங்கி ஈடுபடும்.
அதன்படி எந்த வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் செலுத்தப்பட்டது.
அந்த வங்கி நடந்த தவறுகள் குறித்த விவரங்களை அளித்து, பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்.
பணம் பெறுவதை தடுக்கலாம்
எந்த வங்கிக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது அந்த அக்கவுண்ட் சொந்தக்காரர் யார் அவருடைய மொபைல் எண் போன்ற விவரங்களை பெற்றுத் தருவதற்கு முயற்சி எடுக்கும்.
பணத்தை திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக் கொண்டால் அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்து பெற்று தரவும் வங்கி உதவும்.
அதே போல் பணம் தவறுதலாக மாற்றப்பட்டு அக்கவுண்டில் அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாக தடை செய்யப்படும்.
வங்கி கணக்கிற்கு தடை விதிக்கலாம்
பணப் பரிமாற்றத்தில் தவறு நடந்தது குறித்து எடுத்துச்சொல்லி உரியவருக்கு பணத்தைத் திருப்பி அளிக்க ஒப்புக் கொண்டபின் தடை நீக்கப்படலாம்.
சில நேரம் தனது அக்கவுண்டில் கூடுதலாக பணம் இருப்பதை கூட கவனிக்காமல் அவசர தேவைக்காக அந்த பணத்தை செலவழிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது சில நபர்களுக்கு.
ஒருவேளை அப்படி நடந்தால் திரும்பவும் அந்த தொகையை அந்த நபர் தனது கணக்கில் டெபாசிட் செய்யும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
பணத்தை திருப்பி அளிக்க முடியாது என்று அந்த நபர் தெரிவித்தால் அவர் மீது வங்கி நேரடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to download e PAN card in tamil 2023