
MonkeyPox in India now the symptoms in tamil
பீதியை கிளப்பும் குரங்கு அம்மை நோய் உங்களை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை என்ன..!
குரங்கு அம்மை நோய் முதன்முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் குறைவாக பரவத் தொடங்கிய பின்னர் அமெரிக்க, ஐரோப்பிய, நாடுகளுக்கும் பரவி இப்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது.
குரங்கு அம்மை என்பது ஒரு வகையான அம்மை நோய்.
சின்னம்மை, பெரியம்மை, நோய் குரங்குகளிடமிருந்து பரவும் அம்மை நோய் அம்மை வைரஸ் தொற்றிலிருந்து பரவுகிறது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை இப்பொழுது பலமாக அச்சுறுத்தி வருகிறது.
ஆபிரிக்க, அமெரிக்க, ஐரோப்பிய, நாடுகளில் பரவி வந்த இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் நுழைந்தது.
இப்போது தலைநகர் டெல்லியிலும் இதனுடைய அறிகுறி தென்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் குரங்கு அம்மை நோய் பரவலை உலக அளவில் சுகாதார அவசரநிலை என்று அறிவித்தார்.
இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மத்திய அரசு மாநிலங்களுக்கு போர்க்கால அடிப்படையில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
குரங்கு அம்மை என்பது ஒரு வகை அம்மை நோய் வைரஸ் தொற்றுகளில் இருந்து பரவுகிறது.
சின்னம்மை, பெரியம்மை, நோய் போலவே குரங்குகளிடம் இருந்து வரும் இந்த அம்மை நோய் முதன் முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவ தொடங்கியது.
பின்னர் அமெரிக்க, ஐரோப்பிய, நாடுகளுக்கு குரங்கு அம்மை நோய் பரவ தொடங்கியுள்ளது.
குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் என்ன
உடல் அசதி, காய்ச்சல், உடல் முழுவதும் கொப்புளங்கள், தொண்டைப்புண், இருமல், நினநீர் கணுக்கால் வீக்கம், தலைவலி, உடல் சோர்வு.
கண் வலி அல்லது பார்வை குறைபாடு, பார்வை மங்குதல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் கடுமையான சிரமம்.
மூச்சுத்திணறல், வலி, இடுப்புவலி, உள்ளிட்டவை குரங்கு அம்மை நோய்க்கான முக்கிய அறிகுறிகளாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகலாம்.
குரங்கு அம்மை நோய் 6 முதல் 13 நாட்களில் தீவிரம் அடையலாம் எனவும் இது 3 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அனைத்து வயதினரையும் தாக்கும் என்றாலும் ஊட்டச்சத்து குறைபாடு, இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை வைத்துக் கொள்ளும் நபர்கள் ஆகியோர் எளிதில் நோய் பாதிப்பிற்கு உள்ளவர்கள் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கை என்ன
அரசு வெளியிட்டுள்ள அறிவுத்துறைகளில் குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளது.
குரங்கு மட்டுமில்லாது, வளர்ப்பு பிராணிகள், உட்பட அனைத்து விலங்குகளிடமிருந்து கட்டாயம் விளங்கியிருக்க வேண்டும்.
அல்பெண்டசோல் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்..!
தனிமனித இடைவெளியை கடைபிடித்தால், கைகளை சுத்தமாகக் கழுவுதல், மூக்கு, வாய் பகுதியில், அடிக்கடி தொடாமல் இருப்பது.
உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது, இதுபோன்ற செயல்கள் உங்களை குரங்கு அம்மை நோயிலிருந்து பாதுகாக்க உதவும் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
How are the President and Vice President elected in India
தமிழக அரசு இது தொடர்பாக சில அறிவிப்புகளை வழங்கியுள்ளது பொதுமக்கள் கட்டாயம் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை அணுகுங்கள், அங்கு உங்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.