
moovalur ramamirtham ammaiyar higher education scheme
புதிதாக இந்த ஆண்டு அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் மாணவிகள் மாதம் ஆயிரம் 1,000/- பெறுவது எப்படி? அதற்கான தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது..!
புதுமைப்பெண் திட்டம் என்று அழைக்கப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தில் மாணவிகள் இணைந்து மாதம் 1,000/- ரூபாய்.
பெறுவதற்கான தகுதிகள் குறித்து இந்த திட்டம் நோக்கம் பற்றிய இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்..!
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவியர் பொருளாதார சிக்கலின் காரணமாக 12-ம் வகுப்பு முடித்தவுடன் கல்வி தொடர முடியாமல் போகின்ற சூழ்நிலை இருக்கிறது.
எனவே இந்த மாணவிகளின் கல்வி தடைப்படாமல் அவர்களின் உயிர் கல்வி சேர்க்கை அதிகரிக்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம்.
செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயிர் கல்வி திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து.
கல்லூரியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டாயப் படிப்பு, தொழில் படிப்பு, ஆகியவற்றில் இடைநீற்றல் இருக்கக் கூடாது.
என்ற முடிவில் தமிழக அரசு உறுதியுடன் இருக்கிறது, இதற்காக மாதம் 1,000/- ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கட்டாயம் தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் இருத்தல் அவசியம்.
அரசு பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிட நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள்.
மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர்சீர் மரபினர் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிகள்.
மாற்றுத்திறனாளிகள், நலத்துறை பள்ளியில், வனத்துறை பள்ளியில், சமூக பாதுகாப்பு துறை பள்ளிகள், போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெற முடியும்.
இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் RTE மூலம் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு தமிழக தனியார் பள்ளியில் பயின்ற மாணவியர்,9ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றால் இந்த திட்டத்தின் மூலம் அவர்களும் பயன்பெற முடியும்.
இந்தத் திட்டம் மூலம் கல்லூரியில் வழங்கப்படும் உதவித்தொகை
முதன் முதலில் இளநிலை படிப்பில் கலை அறிவியல், தொழில் துறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமோ ITI,இளநிலை மற்றும் முதுநிலையில் இணைந்த படிப்புகள் ஆகியவற்றில்.
மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவியர்களுக்கு அந்த படிப்பு முடியும் வரை உதவித்தொகை மாதம் ரூபாய் 1,000/- தொடர்ந்து வழங்கப்படும்.
கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு முதல் 3 ஆண்டுகளும், தொழில் படிப்புகளில் பொறியல் படிப்பிற்கு முதல் 4 ஆண்டுகளும், மருத்துவம் கல்வியில் முதல் 5 ஆண்டுகள் வரை பயிலும் மாணவிகளுக்கு உதவி தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கான தகுதிகள் என்ன?
பயிற்சிக் களத்தில் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவிகள் இருந்தாலும் இந்த இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற முடியும்.
கல்லூரியில் சென்று பயிலும் மாணவியருக்கு இந்த உதவி தொகை வழங்கப்படும்.
அஞ்சல் வழியாக அல்லது தொலைதூர கல்வியில் அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்படமாட்டாது.
வேறு திட்டங்களில் நிதி உதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இந்த திட்டத்தின் கீழ் உதயத்தொகை பெற முடியும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக இருக்கிறது.
ஏற்கனவே உயர்கல்வில் சேர்ந்த மாணவியரும் மீதம் இருக்கும் ஆண்டுகளுக்கான படிப்பிற்கு இந்த உதவி தொகை பெற முடியும்.
இந்த திட்டத்திற்கான மறுசீரமைக்கப்பட்ட வலைத்தளம் உருவாக்கப்பட்டது.
மாணவியர்கள் தங்கள் உயர் கல்வியில் பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரை கொண்டு இணைந்து கொள்ள முடியும்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.
குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும்.
உயர் கல்வி திட்டத்தின் மூலம் பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
உயர்கல்வியால் பெண்களின் திறன்களை அதிகரிக்க வேண்டும்.
உயர்கல்வியில் இடைநீற்றல் விகிதத்தை முற்றிலும் குறைக்க வேண்டும்.
பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.
போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது,என தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to secure your pan card..!
Pathira Pathivu some important details..!
What is mutual fund and how to investment..!