
morning breakfast for school students in Chennai
தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு..!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மாநகராட்சிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, காலை சிற்றுண்டி வழங்க இருப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகி.
நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, இதனை நேற்று பட்ஜெட் தாக்கலில் சென்னை மேயர் தெரிவித்தார்.
முக்கியமான அறிவிப்பை வெளியிட்டனர்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது, அந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அரசு அமோக வெற்றி பெற்றது.
அதில் மொத்தம் உள்ள 21 வார்டுகளிலும் மற்றும் மாநகராட்சிகளிலும் ஆளும் அரசு மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது.
அதுமட்டுமின்றி நகராட்சி,பேரூராட்சி,தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர், பதிவுகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது.
உள்ளாட்சித் தேர்தலின் போது பலவித கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை திமுக அரசு அறிவித்தது தமிழகத்தில்.
திமுக சார்பில் திரு வி க நகர் 74 வார்டு உறுப்பினராக பிரியா என்ற பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார்.
அவர் நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சென்னைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் புதிய சில திட்டங்களுக்கான அறிவிப்புகளையும், அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள, நிதி நிலவரம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
குறிப்பாக தமிழக பள்ளிகளில் செயல்படுத்த இருக்கும், புதிய திட்டங்கள் பற்றிய, அறிவிப்புகளை அவர் செய்தியாளர்கள் மூலம் வெளியிட்டார்.
என்ன மாதிரியான திட்டங்கள்
தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டம் மிகப் பெரிய ஒரு மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது, இந்த திட்டத்தை பார்த்து அமெரிக்கா போன்ற சில நாடுகள் தங்கள் நாட்டிலும்.
இதே போல் பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் முறையும் கொண்டு வந்தது, அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்.
பள்ளி, கல்லூரிகளுக்கு, சிறந்த திட்டத்தை கொண்டு வருகிறது, இந்த திட்டத்தை பார்த்து மற்ற நாடுகள், மாநிலங்கள், தங்கள் மாநில மற்றும் நாடுகளிலும் இதே போல் திட்டத்தை செயல்படுத்துகிறது.
வரவிருக்கும் புதிய திட்டம்
அதில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இனி வரும் நாட்களில் பள்ளிகளில் பாலியல் குழுக்கள் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் கழிப்பறை வசதிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள், தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
இதற்காக 32 க்கும் அதிகமான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த பட்ஜெட்டில் முக்கியமாக சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும்.
இனிவரும் காலங்களில் காலை உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதிலுமிருந்து மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்று வருகிறது.
உணவு வழங்குவதற்கு என்ன காரணம்
சென்னை போன்ற மாநகராட்சிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கு சென்று வருவது என்பது மிக கடினமான ஒரு விஷயம் ஏன் என்றால் அங்கு போக்குவரத்து என்பது அதிக கூட்டநெரிசல்.
சிறுநீரக கல் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!
அதுமட்டுமில்லாமல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
what are the symptoms of ulcer in tamil
நம் தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், காலணி, உணவு மற்றும் பல்வேறு வகையான திட்டங்கள் போன்ற எந்த ஒரு மாநிலமும் அல்லது நாடுகளும் இதுவரை செயல்படுத்தவில்லை.