
Mottai maadi thottam amaikum muraigal in tamil
உங்கள் வீட்டில் மாடித் தோட்டம் அமைக்க வேண்டுமா..!
இன்றைய காலகட்டங்களில் காய்கறிகளில் அதிக அளவில் கலப்பட ரசாயனங்கள் கொண்டு, அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்கு, வழிமுறைகள் செய்துவிடுகிறார்கள்.
அனைவரும் வீட்டில் மொட்டை மாடி அமைத்து அல்லது சிறிய தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அதற்கேற்ப செய்தால் இதை கண்டிப்பாக சாத்தியமாகலாம், அதுமட்டுமில்லாமல், காய்கறிகளின் விலை என்பது சில நேரங்களில் உச்சத்தைத் தொட்டு விடுகிறது.
பொதுவாக நீங்கள் மாடித் தோட்டம் அமைக்கும் போது ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், தாவரங்களுக்கு குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் இருப்பது உங்களுக்கு அதிகமான விளைச்சலை கொடுக்கும்.
நீங்கள் தோட்டத்திற்கு தேர்வு செய்த இடத்தில் தளத்தை, ஈரம் தாக்காமல் இருக்க, பாலிதீன் விரிப்பில் இரண்டு கோட்டிங் கொண்டு பரப்ப வேண்டும்.
இடவசதி எவ்வளவு தேவை
காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் பெரிய இடத்திற்கான இடத்தைத் தேடி அலைய வேண்டாம்.
அதாவது மொட்டை மாடியில் காய்கறிகள், மாடிப்படிகளில் கீரைகளையும், ஜன்னல் ஓரங்களில் ரோஜா பூ, என்று எல்லாவிதமான செடிகளையும் எளிமையாக வீட்டில் வளர்க்கலாம்.
தொட்டிகள் பயன்படுத்தலாம்
தேங்காய் துருவியதும்,கொட்டாங்குச்சிகளை தூக்கி எறிய வேண்டாம்,அவற்றில் கீரைகளை வளர்க்கலாம்.
வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் பழைய பிளாஸ்டிக் டப்பாக்கள், வாட்டர் கேன்கள்,குடம், ஆகியவற்றை பயன்படுத்தலாம் இதற்கு.
கார் ஒர்க் ஷாப் மற்றும் லாரி பட்டறை போன்ற மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களில், பழைய ஆயில் பெயிண்ட் பாக்கெட்கள், கிரீஸ் டப்பாக்கள், அதிக அளவில் கிடைக்கும்.
பழைய இரும்பு கடைகளில் கிடைக்கும்,பழைய சின்டெக்ஸ் டேங்க் நகரங்கள் பெரிய பிவிசி பைப்புகள் மற்றும் பழங்களை அதிகம் பயன்படுத்தப்படும் மரப்பெட்டியில் ஆகியவற்றை வாங்கி வந்து செடி வளர்ப்புக்கு வீட்டில் எளிமையாக பயன்படுத்தலாம்.
இவைகள் வாங்குவதற்கு அதிகமான பணம் தேவைப்படாது, கிரீஸ் டப்பாக்களில் எண்ணெய் வாசம் போகும் வரை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
முக்கியமாக பயன்படுத்தப்படும் பொருட்களில் அடிப்புறம் நான்கு திசைகளில் அதிகப்படியான நீர் வெளியேற துவாரங்கள் இடவேண்டும்.
விளைச்சல் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
விளைச்சல் அதிகரிக்க நிலத்தின் ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம், என மூன்றையும் நன்கு கலந்து வைக்க வேண்டும்.
இந்த மண் கலவை விதைக்க வேண்டாம் 7 முதல் 10 நாட்கள் மண் காய்ந்து நுண்ணுயிரிகள் வேலை செய்யத் தொடங்கிவிடும், அதன்பிறகு விதைப்பு செய்தால் நல்ல விளைச்சல் அதிகரிக்கும்.
தேங்காய் நார் கட்டிகள் பயன்படுத்தலாம்
ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும், தேங்காய் நார், கட்டி கூட வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்,தேங்காய் நார்கழிவு கட்டிகளை பாலிதீன் பையை திறந்து உள்ளே வைக்க வேண்டும்.
அதில் 10 லிட்டர் அளவுக்கு நீர் ஊற்றிக் கொள்ளலாம், நன்கு மூடி தேங்காய் நார்யுடன் 3 கிலோ தொழு உரம், உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூச்சிக் கொல்லிகளை தலா 15 கிராம் என்ற அளவில் நன்கு கலந்து கிளறி விட வேண்டும்.
செடி வளர்க்கும் முறைகள்
வெண்டைக்காய், முள்ளங்கி, கொத்தவரை, மற்றும் கீரைகளை, நேரடியாக விதைப்பு செய்யலாம்.
மிளகாய், கத்திரிக்காய், மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்யலாம்.
பருவ காலங்களுக்கு ஏற்றவாறு
அதாவது கோடைகாலத்தில் இருமுறையும், குளிர்காலத்தில் ஒரு முறையும், ஒரு பைக்கு ஒரு லிட்டர் நீர் தண்ணீரை ஊற்றவேண்டும்.
காலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் பாசனம் செய்ய வேண்டும், என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பூச்சி தாக்குதலை எப்படி கட்டுப்படுத்த
பூச்சித் தாக்குதலை தவிர்க்க வாரம் ஒருமுறை வேம்பு பூச்சி விரட்டியை 4 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
மேலும் பஞ்சகாவியா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து ஊற்ற வேண்டும்.
செய்யக்கூடாத சில செயல்கள்
பைகளை நெறிக்கு அடுக்கி வைக்க கூடாது.
ரசாயன உரங்கள் உடன் உயிர் உரங்களை கலந்து விடக்கூடாது.
பைகளை நேரடியாக தளத்தில் வைக்கக்கூடாது.
ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு மற்றும் வியாபாரம் சுயதொழில்..!
மழைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது.
பைகளை தயார் செய்தவுடன் விதைப்பு அல்லது நடவினை மேற்கொள்ளக்கூடாது அதற்கு 10 நாட்களாவது கற்றிருக்க வேண்டும்.
Vastu Shastra for house construction in tamil
கோடை காலத்தில் புதிதாக தோட்டம் அமைப்பது முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
காய்கறித் தோட்டம் அமைக்கும் இடம் நிழல் விழும் இடமாக இருக்கக் கூடாது.