
Murungai keerai powder for hair health in tamil
ஒரு டீஸ்பூன் இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உங்கள் ஆயுசுக்கும் தலைமுடி பிரச்சினை வராது நீங்களும் இரும்பு மனிதராக மாறி விடலாம்.
நமது உடலில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் நாம் இரும்பு மனிதராக மாறி விடலாம்,இதற்காக தினமும் இரும்பு சாப்பிட முடியுமா.
இரும்புச்சத்து அதிகமாக இருக்கும், விலை குறைவாக இருக்கும், ஊட்டச்சத்து மிக்க இயற்கையில் விளைந்த பொருட்களை தான் சாப்பிட முடியும்.
நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அந்த பொருளை மதிப்பதே கிடையாது, அலட்சியமாக நினைப்பது, ஏனென்றால் இதனுடைய விலை மிகவும் குறைவு,இது எளிதாக கிடைக்கும்.
விலை அதிகமாக இருக்கும் பொருட்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்று மக்களிடம் பொதுவாக ஒரு வதந்தி நிலவுகிறது.
நம்முடைய கிராமபுறங்களில் பழங்காலத்தில் சில வீடுகளில் வீட்டிற்கு பின்னால், சில வீடுகளில் வீட்டிற்கு முன்னால் இந்த மரம் கட்டாயம் வளர்க்கப்பட்டது.
அந்த மரம் தான் முருங்கை மரம், காலப்போக்கில் வீட்டில் இருந்து இந்த மரம் வளர்க்கும் முறை மிகவும் குறைந்து விட்டது அதை சாப்பிடுவதை மறந்து விட்டோம்.
ஆனால் இப்பொழுது முருங்கைக்கீரை வர்த்தகம் என்பது மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்பதும் நல்ல பணம் கொடுக்கும் தொழிலாக இருக்கிறது.
தினமும் முருங்கைக் கீரை வாங்கி அதை சுத்தம் செய்து பொரியல் செய்து அல்லது குழம்பில் சேர்த்து சாப்பிடுவது சிரமம்.
சிறந்த மருந்தாக நினைத்து 1 டீ ஸ்பூன் சாப்பிடலாம் அது எப்படி என்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
இதனை தயாரிப்பது எப்படி
பெரிய அளவில் 3-4 முருங்கை கீரையை கட்டுகளை வாங்கி காம்பு இல்லாமல் வெறும் கீரைகள் மட்டும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பூச்சி மருந்து அடிக்க கீரையை பார்த்து வாங்கவேண்டும் ,பூச்சி அரிக்காத மரத்திலிருந்து உடைக்கப்பட்ட சரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் கீரையை தண்ணீரில் சுத்தம் செய்யக்கூடாது, அகலமான ஒரு தட்டில் பரவலாக கொட்டி வீட்டுக்குள்ளே காற்றில் ஆற வைத்துவிடுங்கள்.
இயற்கையான முறையில் காற்றில்தான் உலரவைக்கவேண்டும் 7 நாட்கள் இதை இப்படி நிழலில் உலரவிட வேண்டும், தினமும் 3 முறை அல்லது 4 முறை உங்கள் கையை கொண்டு லேசாக அப்படியே கிளறிவிடுங்கள்.
தண்ணீர் படக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் 7 நாட்கள் இந்த முருங்கைக்கீரையை நன்றாக காய்ந்த பிறகு கையில் எடுத்தாலும் மொறுமொறுவென என உடையும்.
இதை மிக்ஸியில் போட்டு பொடி செய்து சல்லடையில் சலித்து சிறிய பவுடர் போல் தயாரித்து வைத்துக்கொள்ளலாம், முக்கியமாக காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் 3 மாதங்கள் கூட கெடாமல் இருக்கும்.
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, ஒரு டீஸ்பூன் பவுடரை தினமும் தண்ணீரில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது.
முடிந்தால் ஒரு டீ ஸ்பூன் இந்த பவுடரைக் அப்படியே தண்ணீரில் கலக்காமல் சாப்பிட்டு வாருங்கள் அது உங்களுடைய விருப்பம் இப்படி மட்டும் செய்து பாருங்கள் 90 நாட்களில் உங்கள் உடல் ரீதியான அனைத்து பிரச்சினைகளும் நிரந்தரமாக தீர்வு கிடைக்கும்.
ஒரு துளி அளவும் சந்தேகம் வேண்டாம், ஆனால் இந்த முருங்கை கீரையை வாங்கி உருவி சுத்தம் செய்து தண்ணீரில் மட்டும் கலந்து விடக்கூடாது என்பதை மறக்கக்கூடாது.
அப்படியே உலர வைத்து அரைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக உள்ளது, உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
எங்கு சிறந்த வட்டி கிடைக்கும் தபால் துறையா அல்லது வங்கியா
எளிய முறையில் சத்து மிகுந்த பொருட்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், இதையெல்லாம் செய்வதற்கு சிரமமாக இருந்தால்.
How to find pure oil made in Czech in tamil
இப்பொழுது அனைத்து கடைகளிலும் சுத்தமான முறையில் பவுடர் செய்யப்பட்ட முருங்கைக்கீரை குறைந்த விலையில் கிடைக்கிறது அதனை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம்.