Uncategorized

Muthukumar was murdered in Kuwait in tamil

Muthukumar was murdered in Kuwait in tamil

Muthukumar was murdered in Kuwait in tamil

குவைத்திற்கு சென்ற தமிழக இளைஞர் 3வது நாளில் சுட்டுக்கொலை முதலாளி வெறிச்செயல் பின்னணி என்ன..!

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் குவைத்துக்கு வேலைக்கு சென்ற 3வது நாளில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞரை வேலைக்கு அமர்த்திய நபரே அவரை சுட்டுக் கொன்று இருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது அவரது உடலை தங்களிடம் ஒப்படைக்க கோரி அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரனுக்கு நீதிகேட்டு திருவாரூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக பறிபோன வேலை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா லட்சுமணன் குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன் இவர் (B PHARM) பட்டதாரியான இவர்.

அங்குள்ள சிறிய மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்களுக்கு வேலை பறிபோனது.

இதையடுத்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அங்கே சிறிய காய்கறி கடை ஒன்றை வைத்துள்ளார்.

ஆனால் அதில் அவருக்கு போதிய வருமானம் இல்லை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரது குழந்தை கூட சரியாக பள்ளி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வேலை கிடைத்ததால் மிக்க மகிழ்ச்சி

இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று நல்ல சம்பாதிக்க வேண்டும் என்று யோசனை செய்து வந்துள்ளார்.

அதற்கேற்றார்போல் வெளிநாடுகளில் வேலை தேடி உள்ளார் அதற்கு சில வெளிநாட்டு ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டு அவர் வேலை கேட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனம் சார்பில் கடந்த மாதம் முத்துக்குமரனுக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில் ஒரு நிறுவனத்தில் கேசியர்யாக அவருக்கு பணி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த முத்துக்குமரன் தனது மனைவி மற்றும் பெற்றோரிடம் இது குறித்து கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

வேலை விஷயத்தில் ஏமாந்த முத்துக்குமரன்

இதையடுத்து கடந்த 3ஆம் தேதி அவர் குவைத்தின் அல் அகமது நகருக்கு சென்றார் ஆனால் அங்கு சென்றதும் தான் உண்மை நிலவரம் முழுவதும் தெரிய வந்தது.

அவரை அங்கிருந்த சில நபர்கள் ஒரு நிறுவனத்திற்கு கூட்டி சென்றார்கள்.

பின்னர் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு அவருடன் 50க்கும் மேற்பட்ட ஆடுகளும் ஏற்றப்பட்டன.

இதுகுறித்து கேட்டபோது ஆடு மேய்க்கவே வேலைக்கு நியமித்திருக்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள்.

பின்னர் சுட்டெரிக்கும் மதிய வேளையில் பாலைவனத்திற்கு முத்துக்குமரனை அழைத்து சென்றார்கள்.

கேசியர் வேலை என்று தெரிவித்து அழைத்துவந்து ஆடு மேய்க்க சொல்கிறீர்களே என அவர் மிகுந்த வருத்தப்பட்டுள்ளார்.

வேறு வழி இன்றி அன்றைய தினம் அவர் ஆடுகளை மேய்த்து இருக்கிறார்.

எதிர்காலத்தில் அதிக லாபத்தைக் கொடுக்க போகும் தொழில்கள்..!

எப்படி கொலை செய்யப்பட்டார்

இந்தநிலையில் கடந்த 7ஆம் தேதி முத்துக்குமரன் தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என தனது முதலாளியிடம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது ஆத்திரத்தில் முதலாளி முத்துக்குமரனை சுட்டுக் கொன்று விட்டதாகவும் குவைத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் தெரிவிக்கிறது.

A new twist in the Kallakurichi school girl case

முத்துக்குமாரின் உடலை ஒப்படைக்க வேண்டும் என அவரது மனைவியும் பெற்றோரும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0