Schemes

நத்தம் வீட்டுமனை பட்டா பெறுவது எப்படி..! Natham Veetu Manai Patta Peruvathu Eppadi

Natham Veetu Manai Patta Peruvathu Eppadi

Natham Veetu Manai Patta Peruvathu Eppadi

நத்தம் வீட்டுமனை பட்டா பெறுவது எப்படி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வசிப்பதற்கு வீடு இல்லாமல் சாலை அருகில் குடிசை அமைத்து வசித்து வருகிறார்கள்.

இவர்களின் கஷ்டத்தை போக்குவதற்கு தமிழ்நாடு அரசு புறம்போக்கு நிலங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், போன்ற மக்களுக்கும் நத்தம் வீட்டு மனை பட்டா வழங்குகிறது.

இதன் மூலம் வீடு இல்லாத, நிலம் இல்லாத, ஏழை எளிய வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் ஆதிதிராவிடர் மக்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன் பெறுகிறார்கள்.

இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள் இந்த நத்தம் வீட்டு மனை பட்டா என்பது ஒரு சிறிய கான்கிரீட் வீடு கட்டுவதற்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

மக்கள் மத்திய மாநில அரசு வழங்கும் இலவச வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் அதன் மூலம் இந்த மக்களுக்கு மானிய தொகை மற்றும் அரசாங்க உதவி கிடைக்கிறது.

இந்த நத்தம் வீட்டு மனை பட்டா எப்படி பெறுவது அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை போன்ற அனைத்து விவரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.

பொதுவாக நத்தம் என்றால் மனிதர்கள் வாழும் இடத்தை குறிக்கும் அதில் முக்கியமானதாக புறம்போக்கு நிலங்கள் சார்ந்த கொண்டதாய் இருக்கும்.

அதனால் மட்டுமே நத்தம் புறம்போக்கில் வாழும் மக்களுக்கு கிடைக்கிறது, ஆனால் பட்டா என்பது கிடைக்காமலே போய்விடுகிறது.

இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள், ஏனென்றால் ஒரு வீட்டிற்கு பத்திரமும், பட்டாவும், இருந்தால்தான்.

அந்த சொத்தானது முழுமையாக அவர்களால் அனுபவிக்க முடியும் மற்றும் அவர்கள் நினைத்தது போல் அந்த சொத்தை கையாள முடியும்.

ஒரு நபர் நத்தம் புறம்போக்கு நிலத்தில் சுமார் 20 ஆண்டுகள் மேலாக வசிக்கிறார், ஆனால் பட்டா வாங்க முடியவில்லை இதற்கு என்ன செய்வது.

இலவசமாக பட்டா முகாம் வருடத்திற்கு ஒருமுறை உங்களது நகராட்சியில் நடைபெறும், அப்பொழுது நீங்கள் ஒரு மனு எழுதிக் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்டா முகாமில் நீங்கள் மனு கொடுத்து வேலை நடைபெறவில்லை என்றால் என்ன செய்வது

பட்டா வாங்கும் நபர்கள் எத்தனை வருடங்கள் அந்த இடத்தில் வசிக்கிறீர்கள், அதற்கு வீட்டு வரி ரசீது, குடிநீர் வரி, மின் கட்டண ரசீது மற்றும் உங்களுடைய அடையாள அட்டை.

ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, போன்றவற்றை எல்லாம் ஒரு நகலை எடுத்து மனு பின்னாடி இணைத்து வட்டாட்சியரிடம் கொடுக்கவேண்டும்.

வட்டாட்சியர் என்ன செய்வார் என்றால் உங்களுடைய கிராம நிர்வாக அலுவலர் Revenue Inspector மற்றும் சர்வேயர் இடம் இந்த பொறுப்புகளை ஒப்படைத்து விடுவார்.

கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று விசாரித்து அந்த இடம் நத்தம் புறம்போக்கு இடம் அல்லது அரசாங்கம் எதிர்காலத்தில் அந்த இடத்தில் ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருகிறதா என்று முழுமையாக விசாரணை செய்வார்.

அதன்பின்பு Revenue Inspector இடம் தெரிவிப்பார் அவரும் இந்த இடத்தின் பணிகளைப் பற்றி முழுமையாக விசாரிப்பார்.

கடைசியாக சர்வேயர் அந்த இடத்தில் ஒரு FMB ஸ்கெட்ச் ஒன்றை போடுவார் மொத்தமாக எல்லாம் சோதனை செய்து மறுபடியும் வட்டாட்சியரிடம் இந்த மனு செல்லும்.

பிறகு அவர் உங்களுக்கு பட்டா வழங்குவார், இந்த முறை எல்லாம் மாதக்கணக்கில் நடைபெறுவதால், நீங்கள் சற்று பொறுமையாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

Joining our WhatsApp group

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

ஜூலை மாத ராசி பலன்கள் 2023

How to get new ration card in tamil nadu

பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

கட்டுமான பொருட்களின் விலைப்பட்டியல்..!

What is your reaction?

Excited
4
Happy
20
In Love
3
Not Sure
10
Silly
2