
Nattu Kozhi Valarpu Scheme Details in tamil
பெண்களுக்காக தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் தமிழக அரசு அறிவித்துள்ள இலவச நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிப்பதற்கான என்னென்ன ஆவணம் தேவை, எப்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது, போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வகையான திட்டங்களை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறது மற்றும் புதுப்புது திட்டங்களை கொண்டு வந்து கொண்டு இருக்கிறது.
தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நம்முடைய நாடு முன்னேறினால் மட்டுமே பொருளாதார ரீதியாக அனைத்து மக்களும் சமமாக முன்னேற முடியும்.
மக்கள் தொகையில் உலகில் 2ம் இடத்தில் இருக்கும் நம் நாட்டில் உணவு உற்பத்தி என்பது தினம்தோறும் சரியாக நடைபெற்றால் மட்டுமே உணவுப் பஞ்சம் என்பது வராது.
அதனாலதான் மத்திய மாநில அரசுகள் ஏழை எளிய மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
அது மட்டுமில்லாமல் உணவு சார்ந்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்குகிறது.
யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டம் பெண்களுக்கு மட்டும்தான்.
இதற்கு தேவையான ஆவணம்
இலவச கோழி வழங்கும் திட்டத்தில் இணைக்க கூடிய ஆவணம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ,விண்ணப்பதாரரின் இரண்டு புகைப்படம், போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும்.
முன்னுரிமை
இலவச நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தில் திராவிடர், ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு 30 சதவீத இட ஒதிக்கீடு கொடுக்கிறது தமிழ்நாடு அரசு.
திட்ட பயன்கள்
பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் இலவசமாக 20 முதல் 25 வரையிலான கோழி வழங்குகிறார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கு தடுப்பூசிகள் அனைத்தும் கால்நடைகள் பராமரிப்பு அதிகாரியின் மூலம் வழங்கப்படும்.
விண்ணப்பம் செலுத்தும் இடம்
இந்த திட்டத்தில் விண்ணப்பபடிவத்துடன் மேல் கூறிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பபடிவத்தில் சரியான முகவரி விவரங்களை நிரப்பிய பிறகு.
கால்நடை அதிகாரி அல்லது உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பபடிவத்தினை ஒப்படைத்தால் அவர்களே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பார்கள்.
விண்ணப்ப படிவம் நிரப்பும் முறை
இந்த விண்ணப்பப்படிவத்தில் படிப்பு,விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர் அல்லது கணவரின் பெயர், தொலைபேசி எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண்.
விண்ணப்பதாரரின் இனம், முகவரி, ஊராட்சி, பேரூராட்சி, குடும்பத்தில் உள்ள நபர்களின் விவரம் குறிப்பிட வேண்டும்.
அனைத்து விண்ணப்பபடிவத்தில் முன்னுரிமை பிரிவில் விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண், திருநங்கை, இவற்றில் ஏதேனும் உள்ளவர்கள் சரியான விவரத்தை கொடுக்க வேண்டும்.
குடும்பத்தில் உள்ள நபர்கள் ஏதேனும் அரசு பணியில் இருந்தால், அதன் விவரம் அடுத்து இதற்கு முன் தமிழக அரசின் இலவச ஆடு, கோழி, கறவை மாடு, வழங்கும் திட்டத்தில் நீங்கள் விண்ணப்பித்து பயன்பெற்று இருந்தால் அதன் விவரத்தை முழுமையாக குறிப்பிட வேண்டும்.
வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்..!
இதன் பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் சரியானது என்று உறுதிமொழி கையொப்பத்தை நீங்கள் இடவேண்டும்.
விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்தால் கால்நடை மருத்துவரிடம் ஒப்படைத்த பிறகு இலவசமாக வழங்கிய கோழிக்கு நோய் ஏற்பட்டால்.
Indian household average wealth is just
அந்த கால்நடை மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.