
New case against jallikattu competition
ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியை ரத்து செய்யக் கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் இப்பொழுது தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தின் பாரம்பரியமும் பழமை வாய்ந்த ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போது ஒட்டுமொத்த தமிழக மக்களும் பொங்கி எழுந்து வீதிக்கு வந்து போராடினார்கள்.
தன்னெழுச்சியாக நடந்த போராட்டங்களின் விளைவாக தடை தகர்க்கப்பட்டது மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழ்நாடு முழுவதும்.
அனைத்து மாவட்டங்களிலும் சிறு கிராமங்களிலும் தை மாதம் ஆனால் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்னும் பொங்கலுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் இந்த சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை செய்ய வேண்டும் என பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள்.
திடீரென்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது இதன் மீது வரும் நவம்பர் 23ஆம் தேதி வழக்குகள் விசாரணை தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் அவசர அவசரமாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
விரைவில் வரவிருக்கும் தை மாதம் பிறப்பை முன்னிட்டு தற்போது ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் நபர்கள் தங்கள் காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகளை கொடுக்க தொடங்கி விட்டார்கள்.
கொரோனா வைரஸ்க்கு பிறகு கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது போல் இந்த ஆண்டும் தை பொங்கல் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.
அதற்கான ஆணை கிடைக்கும் என காலை உரிமையாளர்கள் அதற்காக ஜல்லிக்கட்டு காளைகளை இப்பொழுது தீவிரமாக தயார்படுத்தி வருகிறார்கள்.
காளைகளுடன் தயாராகும் வீரர்கள்
இப்பொழுது தீவிரமாக காளைகளுக்கு நடைபயிற்சி, மண் குத்துதல், நீச்சல் பயிற்சி, வடம் போடுதல், உள்ளிட்ட பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
காளைகளுக்கு சிறப்பு உணவாக பாதாம் பருப்பு, தேங்காய் பூ, பருத்திக் கொட்டைப்,பிண்ணாக்கு,வேர்கடலை, உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகள் கொடுக்கப்படுகிறது.
இப்பொழுது மதுரையில், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில்.
நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக காளை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவசரமாக மனு தாக்கல் செய்த பீட்டா அமைப்புகள்
மாடுபிடி வீரர்கள் காளை உரிமையாளர்கள் என ஒட்டுமொத்த தமிழக மக்களே ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்பார்த்து வரும் இந்த சூழ்நிலையில்.
தமிழகத்தின் பாரம்பரியமாக அடையாளமாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும்.
உரிய விதி முறைகளை பின்பற்றுவதால் அதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நவம்பர் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தமிழக மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
முதலீடு இல்லாமல் மாதம் 2,00,000/- லட்சம் ரூபாய் எப்படி சம்பாதிப்பது..!
ஜல்லிக்கட்டு போட்டி இப்பொழுது அரசியலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எந்த அரசு வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆண்டுதோறும் வெற்றிகரமாக நடத்தினால் அந்த அரசு தமிழக மக்களிடம் நல்ல பெயர் எடுக்கும்.
How to reduce heart attack risk in tamil
ஒருவேளை இந்தப் போட்டிக்கு தடை ஏற்பட்டால் அந்த அரசு விரைவில் தேர்தலில் படுதோல்வி அடையும் என்பது இங்கு உள்ள இரண்டு திராவிட கட்சிகளுக்கும் நன்கு தெரியும்.
இதனால் இந்த விவகாரத்தில் திமுக அரசு உடனடியாக ஒரு நல்ல முடிவை எடுக்கும் என தமிழக மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.