
New education policy full details in tamil
புதிய கல்விக் கொள்கை திட்டம்
வணக்கம் நண்பர்களே நம்மளுடைய இணையதள பதிவில் இன்றைக்கு புதிய தேசிய கல்விக் கொள்கையின் மாற்றத்தைப் பற்றி தான் முழுமையாக பார்க்க போகிறோம்.
புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை 1986க்கு மாற்றாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் பத்திரிகை தகவல் நிறுவனமான PIB முக்கிய கல்விக் கொள்கையின் அம்சங்களை வெளியிட்டுள்ளது, அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
புதிய கல்வி கொள்கை திட்டத்தில் மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை பள்ளி கல்விக்கு உலகளவிய அணுகுமுறையை உறுதி செய்வதே தேசிய கல்வி கொள்கை திட்டமாக உறுதி செய்கிறது.
வகுப்பு முறையில் அறிவித்த திட்டம்
பள்ளிக்கல்வித்துறையில் 3,5 மற்றும் 8ம் வகுப்பு களுக்கு தேசிய திறந்தவெளி, மாநில திறந்தவெளி பள்ளிகள் மூலமாக மாணவர்களுக்கு, கல்வி வழங்க திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வி பாடத்திட்டங்கள், தொழிற்கல்வி பாடங்கள், முதியோர் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்கள் இலக்கினை அடைவதற்காக.
யோசனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன,பள்ளி படிப்பை தொடர முடியாமல் இடையில் நிறுத்திய சுமார் 2 கோடி குழந்தைகளுக்கு மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு, இந்த ஆண்டில் புதிய திட்டமான தேசிய கல்வி கொள்கை திட்டத்தை வகுத்துள்ளது.
புதிய பாடத்திட்ட கல்வி கொள்கை என்ன சொல்கிறது
தற்போது நடைமுறையில் உள்ள 10+12 கல்விமுறை பாடத் திட்டம் மாற்றப்பட்டு முறையான கல்வி முறை 8-11,11-14 மற்றும் 14-18 வயதிற்கு ஏற்ற 5+3+3+4 ஆண்டுக்கான பாடத்திட்ட முறை அமல்படுத்தப்படும்.
இதுவரை பள்ளிக்கு செல்லாத 3 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, பள்ளி படிப்பை படிப்பதற்கு இந்த புதிய கல்விக் கொள்கை திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இக்கல்வி திட்டமானது 3 ஆண்டு மழலையர் கல்வியுடன் 12 ஆண்டு பள்ளிக்கூட படிப்பை சேர்ந்ததாக இருக்கும் 8வயது வரையிலான குழந்தைகளுக்கு.
முன் குழந்தை பருவ கவனிப்பு மற்றும் கல்வி தேசிய திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை NCERT நிறுவனம் உருவாக்கம் செய்யும்.
நிர்வாகத் துறையில் என்ன மாற்றங்கள்
இந்த புதிய கல்விக் கொள்கை திட்டமானது தேசிய கல்வி கொள்கை முறையை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, குழந்தைகளுக்கான மேம்பாட்டு துறை, சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, மற்றும் மகளிர் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும்.
கல்விக்கான தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை (National curriculum and Pedagogical Framework for Early Childhood Care and Education) (NCPFECCE) மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கம் செய்கிறது.
மொழி மற்றும் பன்மொழி ஆற்றல்
மாணவர்கள் குறைந்தபட்சம் 5ம் வகுப்பு வரையிலும் ஆனால், 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையில், தாய்மொழி /உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக, கட்டாயம் இருக்க வேண்டும் என இந்த புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிவுறுத்துகிறது.
இந்தியாவில் இருக்கும் இதர செம்மொழிகள் மற்றும் இலக்கியங்கள் மாணவர்களுக்கு விருப்ப பாடமாக அமையும் குறிப்பாக 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில்.
இந்தி மொழி குறித்து மாணவர்கள் வேடிக்கை செயல்திட்டம் நடவடிக்கைகளில் விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம்.
செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களின் பயன்பாட்டிற்காக மாநில மற்றும் தேசிய பாடத்திட்ட பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு சீர்திருத்தம் என்றால் என்ன
3,5,8,ஆம் வகுப்பு சேர்ந்த அனைத்து மாணவர்களும் அந்தந்த ஆணையம் நடத்திவரும் தேர்வினை எழுதுபவர்கள் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் அரசு நடத்தி வரும்.
பொது தேர்வையும் மேற்கொள்ளலாம் அதேசமயம் முழுமையான மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சிறு திருத்தம் செய்யப்படும்.
புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய தேசிய மதிப்பீட்டு மையமான பார்க் (Performance Assessment Review and Analysis of Knowledge for Holistic Kepartment) (PARAKHK) திறன் மதிப்பீடு மறு ஆய்வு மற்றும் முழுமையான மேம்பாட்டுக்கான அறிவிப்பு பகுப்பாய்வு நிலையான அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி என்றால் என்ன
பாரத நாட்டில் எந்த ஒரு குழந்தையும் பிறந்த சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ கல்வி கற்பதை நிறுத்தி விடக்கூடாது என்பதே முக்கிய நோக்கத்தை கொண்டதாக அமைந்துள்ளது இந்த கல்விக் கொள்கை திட்டம் 2020.
பாலினம், சமூக கலாச்சாரம், புவியியல் அடையாளங்கள், உடல் குறைபாடுகள், உள்பட சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழந்தைகளுக்கு.
முக்கியத்துவம் அளிக்கப்படும் உடல் குறைபாடு இருக்கும் குழந்தைகள் தனது உயர் கல்வி படிப்பை முழுமையாக பெற வழிவகை செய்கிறது.
தொழில் தொடர்பான, விளையாட்டு தொடர்பான, கலை தொடர்பான, நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
பள்ளி நிர்வாகத்தில் மாற்றம் இருக்குமா
பள்ளி வளாகங்களாகவே, தொகுப்புகளாகவே அமைக்கப்படும், பள்ளியின் உள்கட்டமைப்பு,கல்வி நூலகம், வலுவான தொழில்முறை ஆசிரியர், சமூகம் போன்ற அனைத்து வளமும் கிடைப்பதற்கு நிர்வாகமானது இந்த திட்டத்தின் மூலம் அழகாக மாற்றி அமைக்கப்படும்.
தொழில் பாதை மற்றும் ஆசிரியர் சேர்க்கை
பள்ளியில் ஆசிரியர்கள் வலுவான வெளிப்படையான நடைமுறையில் பணியில் அமர்த்தப்படுவார்கள், ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படை செயல்திறன், மதிப்பீடு முன்னேற்ற வழி, முறைப்படி பதவி உயர்வு இருக்கும்.
பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான, தேசிய தொழில்முறை தரம், என்ற தனி அமைப்பை உருவாக்கப்படும், இந்த கல்விக் கொள்கையின் மூலம்.
புதிய பாடத்திட்டத்தில் உயர்கல்வி என்ன
வருகின்ற 2035 வாக்கில் மொத்த பதிவு விகிதம் 50 சதவீதமாக கல்வி தரம் உயர்த்தப்படும்.
தொழில் கல்வி விகிதத்தை 26.3 சதவீதத்திலிருந்து (2018), 2035 ஆண்டுவாக்கில் 50 சதவீதமாக உயர்த்துவது என்ற புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது, உயர்கல்வி நிறுவனங்களில் 3.5 கோடி புதிய இடங்கள் சேர்க்கப்படும்.
ஆசிரியர் கல்வி என்றால் என்ன
நம் நாட்டில் இருக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவுடன் ஆலோசித்து பிறகு புதிய மற்றும் விரிவான தேசிய ஆசிரியர் கல்வி திட்ட கூட்டமைப்பு வடிவமைக்கப்படும்.
வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குள் ஆசிரியர் கற்பித்தலுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி நான்கு வருடமாக இருத்தல்வேண்டும்.
தரம் குறைவாக உள்ள ஆசிரியர்களை வைத்து நடத்தி வரும் கல்வி நிறுவனம் மீது கடுமையான உச்ச கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கற்பித்தல் இயக்கம் பற்றிய தகவல்கள்
இந்திய மொழிகளில் கற்பிக்கும் திறன் வாய்ந்த மற்றும் பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கு.
குறுகிய கால மற்றும் நீண்ட கால கற்றல் தொழில்முறை ஆதரவை அளிக்க விரும்பும் திறன் வாய்ந்த, மூத்த ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டா கற்பித்தல் இயக்கம் நம் நாட்டில் அமைக்கப்படும்.
மாணவர்களுக்கு நிதி உதவி கிடைக்கும்
எஸ்சி, எஸ்டி, இதர பிற்பட்ட மற்றும் இதர மாணவர் தொழில் முனைவோர் வளர்ச்சி பிரிவுகளைச் சார்ந்த நன்கு படிக்கும் மாணவர்களுக்கு.
தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நம் நாட்டில் கல்வி உதவித் தொகையை பெறும் மாணவர்களின் முன்னேற்றத்தை ஆதரித்து மேம்படுத்தி மற்றும் கண்காணிக்க தேசிய கல்வி உதவி தொகை தளம் விரிவுபடுத்தப்படும் நாடு முழுவதும்.
தங்கள் நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக அளவில் இலவச கல்வி மற்றும் உயர்கல்வி உதவித்தொகையை அளிக்க தயாராக உள்ள நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி
டிஜிட்டல் சேமிப்பு தளங்கள், ஆராய்ச்சிக்கு நிதி உதவி மேம்படுத்தப்பட்ட மாணவர் சேவைகள், இணையவழிப் படிப்புகள், திறந்தவெளி இணையவழி படிப்புகளுக்கு, அங்கீகாரம் வழங்குதல், ஆகியவற்றுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
டிஜிட்டல் மற்றும் இணைய வழி கல்வி
தொற்று நோய்கள் மற்றும் நோய்த் தொற்று சமயங்களில் சமீபத்திய நிலைமையை கருத்தில் கொண்டு பாரம்பரியமான மற்றும் நேரடி கல்விக்கொள்கை எங்கெல்லாம் நடைமுறைப்படுத்த சாத்தியமில்லையோ.
அங்கெல்லாம் இணையவழி கற்றல், ஊக்குவிக்க தரமான கல்வியை வழங்குவதற்கான, தயார் நிலையை உறுதி செய்ய விரிவான பரிந்துரைகள் வகுக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பாடங்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றை கட்டமைக்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், ஒரு பிரிவு உருவாக்கப்படும், கல்வி மற்றும் உயர் கல்வியில், மின்-கற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
கல்வி தொழில்நுட்பம் என்றால் என்ன
கல்வி திட்டமிடுதல், மதிப்பீடுகள், மற்றும் நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள தேசிய கல்வி, தொழில்நுட்ப பேரவை, என்னும் தன்னாட்சி அமைப்புகள் உருவாக்கப்படும்.
தாய் மொழிகளை ஊக்கப்படுத்துதல்
அனைத்து இந்திய மொழிகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தேசிய கல்வி கொள்கை உள்ளூர் மொழிகளை பரிந்துரைக்கிறது முதலில்.
என்ன வயதில் கல்வி
இளைஞர் மற்றும் வயது வந்தோருக்கான கல்வியை 100% வழங்க உறுதி செய்ய வேண்டும்.
ஆஸ்துமா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா?
கல்விக்கு நிதி உதவி வழங்கப்படும்
கல்வித்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொது முதலீடு 6 சதவீதம் வரையில் உயர்த்தப்பட வேண்டும்.
தொழில்முறைக் கல்வி
அனைத்து தொழில்முறை படிப்புகளும் உயர் கல்வி அமைப்பின் இன்றியமையாத அங்கமாக இருக்கும்.
Best mileage bikes 2022 in tamil
தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், சுகாதார அறிவியல் பல்கலைக் கழகங்கள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்கள், ஆகியவை பல்நோக்கு நிறுவனங்களாக மாறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.