
New education system in tn with IIT 2022
தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு புதிய வகையான டெக்னாலஜி மையம் அசத்தும் ஐஐடி மெட்ராஸ்..!
தமிழகத்தின் தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பயிற்சி அளிக்க கிராமப்புற தொழில்நுட்பம் மையங்கள் புதிதாக திறக்கப்படும் என ஐஐடி மெட்ராஸ் அறிவித்துள்ளது.
ஐஐடி மெட்ராஸ் இன்னோவேஷன் டெக்னாலஜி ஃபவுண்டேஷன் (IIT Madras innovation Technology Foundation) மற்றும் (Asha for education) ஆகியவை இணைந்து.
தமிழ்நாட்டில் உள்ள தொலைதூர மற்றும் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் கல்வி குறித்த அறிவை அதிகமாக வளர்க்கும்.
நோக்கத்துடன் கிராமப்புற தொழில்நுட்ப மையங்களை தற்போது தொடங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் மற்றும் சீத்தஞ்சேரி ஆகிய கிராமங்களில் புதிதாக இரண்டு தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவையும், அதன் நன்மைகளையும் கொடுக்கும், இந்த மையங்கள் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும்.
IIT மெட்ராஸ் மற்றும் (Asha for education) அறக்கட்டளை இந்த திட்டத்திற்கு பண உதவி அளிக்கிறது, மேலும் தொழில்நுட்ப ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஐஐடி மெட்ராஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வீ காமகோடி நமது நாட்டின் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்களுக்கும்.
நன்கு தரமான கல்வி மற்றும் தொழில்நுட்பம் குறித்த அறிவை அதிகம் வளர்க்கும் நோக்கத்தில் ஐஐடி மெட்ராஸ் எப்பொழுதும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நடுநிலை பள்ளி மாணவர்கள்
தற்போது இரண்டு கிராமங்களில் இரண்டு கிராமப்புற தொழில் நுட்ப மையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன, இது எங்கள் திட்டத்தின் முதல் வெற்றியாகும்.
(Asha for education) என்பது உலக அளவில் கல்வி செயல் குழுவாகும், இது கடந்த 2015 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் கிராமப்புற இந்திய மாணவர்களுக்கு.
புதிய முறையில் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் கணக்கிட்டு சிந்தனை ஆகிய இரண்டிலும் கல்வி கற்பிக்கிறது.
நிரலாக்கத்தை கற்பிக்க இந்தக் குழுவானது மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (Massachusetts Institute of Technology)-யின் Scratch மற்றும் கூகுளின் Blockly போன்ற மேம்பட்ட பிளாக் அடிப்படையிலான நிரலாக்க, கருவிகளை பயன்படுத்துகிறது.
கிராமப்புற ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி முயற்சிகள் குறித்து Asha for education நிறுவனத்தை சேர்ந்த தலைவர் ராஜாராமன் கிருஷ்ணன் தெரிவிக்கையில்.
இந்த தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்த மிகவும் எளிமையானவை என்பதால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சில நாட்களில் இவற்றில் தேர்ச்சி பெற்று விடுகிறார்கள்.
மேலும் கற்றலில் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்கள் மற்ற நாடுகளில் இது போல் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு பாடத்திட்டம் போன்றவை நிரூபிக்கப்பட்டு உள்ளது.
Asha for education
இந்த நிபுணத்துவத்தை உருவாக்க Asha for education திட்டமிட்டுள்ளது, தரமான தொழில்நுட்பக் கல்வியில் ஐஐடியின் அனுபவத்தையும், அறிவையும், பயன்படுத்தவும் நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
மேல்நிலை பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் இந்த மையங்கள் புதிதாக திறக்கப்பட முடிவெடுத்துள்ளோம் இதனால் மாணவர்கள் பள்ளி நேரத்திற்குப் பிறகு.
மாலையில் எங்கள் மையங்களில் வழங்கப்படும் தொழில்நுட்ப பயிற்சிகளில் எளிமையாக கலந்து கொள்ள முடியும்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு கணினி அறிவியல் மற்றும் பிற தொழில்நுட்பங்களை கற்க வாய்ப்பு முற்றிலும் கிடைப்பதில்லை ஒருவேளை.
வாழ்நாள் முழுக்க பல் ஈறுகளில் பிரச்சனை வராமல் இருக்க.
அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தாலும் கணினியில் எந்த அனுபவமும் இல்லாத நபர்களால் கற்பிக்கப்படுகிறது எங்கள் கிராமப்புற தொழில்நுட்பம் மையங்களின்.
What are the reason cancer cells developing body
அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்குத் தரமான கல்வி தொழில்நுட்பம் கல்வி கற்பிக்கப்படும்.
இந்த திட்டம் கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம், என்று அவர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில் அறிவித்துள்ளார்.