
New electricity tariff hike information 2023
அதிர்ச்சியளிக்கும் இபி புதிய மின் கட்டண உயர்வு கட்டணத்தை வாபஸ் பெருமா மத்திய அரசு எதிரும் எதிர்பார்ப்பு..!
உட்சபட்ச நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான 20 சதவீத மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழகம் முழுவதும் வலுக்க துவங்கிவிட்டன.
நாடு முழுவதும் நேரத்திற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு அமல்படுத்த இருக்கிறது.
பொதுவாக தற்போது மின்சாரத்தை ஒரு நாளில் எந்த நேரத்தில் பயன்படுத்தினாலும் ஒரே விதமான கட்டணம் தான் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதில் தான் இப்பொழுது புதிய மாற்றத்தை ஏற்படுத்தபோகிறது மத்திய அரசு.
அதன்படி மின்சாரத்தை மிக அதிக அளவில் பயன்படுத்துகின்ற நேரத்திற்கு அதிக கட்டணமும் குறைவான அளவில் பயன்படுத்துகின்ற நேரத்திற்கு இயல்பை விட குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படும்.
அதற்கு ஏற்ற வகையில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் மின் கட்டண பட்டியலில் இரண்டு மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது.
அந்த வகையில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகின்ற பீக் (Peak Hours) என்று அழைக்கப்படும் உச்ச நேரத்தில் அதாவது காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மாலை 6:00 மணி முதல் இரவு 10 மணி வரை மின்கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்க போகிறது.
நேரத்திற்கு இயல்பான கட்டணத்தை விட 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.
உச்சபட்ச நேரத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான 20 சதவீத மின்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பான கட்சிகள் மாநில தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில்.
தமிழக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை
தமிழகத்தில் காலை மாலை வேலைகளில் 6 முதல் இரவு 10 மணி வரையில் 5 மணி நேரத்தை அதிக மின் பயன்பாடு நேரமாக தமிழக அரசு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மின் தேவை அதிகம் உள்ள நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மின் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க வேண்டும் என,மத்திய மின்சார துறை அமைச்சகம் திடீரென்று அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கட்டண உயர்வு ஏழை நடுத்தர மக்களுக்கு கடும் சுமை ஏற்படுத்த போகிறது இது பொதுமக்களின் மீது திணிக்கப்படும் அப்பட்டமான நேரடி தாக்குதல்.
மாநில அரசுகளை கலந்துயோசிக்காமல் மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இந்த மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழக கட்சிகள் தெரிவித்துள்ளன.
இது வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மக்களுக்கு விரோதமான இந்த மின் கட்டண உயர்வை வன்மையாக கண்டிக்கிறோம் என பல்வேறு கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஸ்மார்ட் மீட்டர் முறை
முன்னதாக தமிழகத்தில் வீட்டு பயன்படுத்தப்படும் நுகர்வோர்களுக்கு பாதிப்பில்லை என்பது மின் பகிர்மான கழகம் தெரிவித்தது.
இப்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி உச்சநேரம் கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை எனவே இந்த திருத்தத்தால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு அபராதம் வசூல் செய்வது தொடர்பான விவகாரத்தில் தற்போது அபராதம் எதுவும் நிர்ணயம் செய்யப்படாததால்,நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு
வாரிசு சான்று வாங்க தேவையான ஆவணங்கள்