
New Maruti Swift car 40 km per liter in india
லிட்டருக்கு 40 கிலோமீட்டர் மைலேஜ் தரும் மாருதியின் புதிய கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது விலையும் மிகவும் குறைவு..!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிறுவனம் மாருதி சுசுகி,இதன் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மும்முரமாக இருக்கிறது.
இந்த நிறுவனம் புதிய தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் (Swift car) காரை வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள்.
இதற்கு முக்கிய காரணம் இந்த காரின் மைலேஜ் தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுசுகி ஸ்விப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 88.5 (BHP) மற்றும் 113 NM (Torque) திறனை உருவாக்கக்கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த எஞ்சின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகிறது,புதிய தலைமுறை மாடலிலும் வழங்கப்படலாம்.
இது தவிர புதிய பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைபிரிட் என்ஜின் (Strong Hybrid Engine) தேர்வு மாருதி சுசுகி ஸ்விப்ட் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கிறது.
இதன் மைலேஜ் ஒரு கிலோமீட்டருக்கு 35 அல்லது 40 கிலோ மீட்டர் அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுவரை உலகில் எந்த ஒரு காரும் இந்த மைலேஜ் வழங்குவதில்லை ஒரு லிட்டருக்கு 35 முதல் 40 கிலோமீட்டர் மைலேஜ் கொடுப்பது என்பது உண்மையில் ஒரு சாதாரண விஷயம் இல்லை.
எனவே தான் புதிய தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் கார் வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
அவர்களுக்குயேல்லாம் தற்போது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
புதிய தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் கார் வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என தகவல்கள் கசிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் சந்தையில் புதிய தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் கார் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும்.
அதனைத் தொடர்ந்து இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் அநேகமாக 2024 ஆம் ஆண்டில் முதல் பாதியில் புதிய தலைமுறை புதிய தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் கார்.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்,இதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகியுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக் பிளாட்ஃபார்ம்களில் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்ஷன் அடிப்படையில் புதிய தலைமுறை ஷிப்ட் கார் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இது எடை குறைவானதாக இருந்தாலும் சிறப்பான பாதுகாப்பை வழங்கும் என கூறப்படுகிறது.
மேலும் சிறப்பான வாகனம் இயக்க அனுபவம் கிடைக்கும் புதிய தலைமுறை மாருதி ஸ்விப்ட் காரில் நவீன வசதிகளும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதில் (large touch screen, fully digital instrument control) போன்ற அதிநவீன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது,மாருதி சுசுகி பாதுகாப்பு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்திய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்