செய்திகள்

பரபரப்பை கிளப்பும் புது அம்சம் whatsapp பயனாளர்களின் நிலை என்ன New privacy feature in WhatsApp 2023

New privacy feature in WhatsApp 2023

New privacy feature in WhatsApp 2023

நேரடியாகவே மார்க்கே மாமா அறிவித்துவிட்டார் பரபரப்பை கிளப்பும் புது அம்சம் whatsapp பயனாளர்களின் நிலை என்ன..!

கேட்கும்போதே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் புதிய தரவரிசை கொள்கையை வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் வாட்ஸ் அப் (WhatsApp) பயனாளர்களிடம் மிகப்பெரிய ஒரு அச்ச உணர்வு மற்றும் ஒரு மகிழ்ச்சியான உணர்வு ஏற்பட்டுள்ளது அதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

முன்னதாக பேஸ்புக் என்று அழைக்கப்படும் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப்பில் தற்போது புதிய தரவரிசை கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

அது என்னவென்றால் தெரியாத அழைப்பாளர்களை அமைதிப்படுத்துங்கள் (Silence unknown callers) என்கின்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தின் பெயரை வைத்தே இதன் வேலை என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இதனை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் (Silence unknown callers) என்பது தெரியாத எண்களில் இருந்து வரும் வாட்ஸப் அழைப்புகளை சத்தமில்லாத அழைப்புகளாக மாற்றும் ஒரு புதிய வசதி.

அதாவது தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் உங்களுடைய ஸ்மார்ட் ஃபோன்களில் ஒலிக்காது.

இருப்பிடம் குறிப்பிட்ட அழைப்புகள் தொடர்பான விவரங்கள் உங்களுடைய whatsapp அக்கவுண்டில் உள்ள தொலைபேசி பட்டியலில் சேகரிக்கப்படும்.

அதன் வழியாக தெரியாத எண்களில் இருந்து வந்து இருந்தாலும் கூட அவைகளின் ஏதேனும் முக்கிய அழைப்புகள் உள்ளதா என்பதை உங்களால் மதிப்பாய்வு செய்ய முடியும்.

New Privacy Policy Benefits

ஒட்டுமொத்தமாக (Silence unknown callers) அம்சமானது ஸ்பேம் (Spam) மோசடிகள் மற்றும் அறியப்படாத அழைப்பாளர்களிடமிருந்து உங்களுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்கும்.

அதே சமயம் வாட்ஸ் அப் வழியாக உங்களுக்கு வரும் அழைப்புகளின் மீது அதிக கட்டுப்பட்டையும் வழங்கும்.

வாட்ஸ் அப்பிற்கு வந்துள்ள இந்த புதிய வசதி தெரியாத எண்களில் இருந்து அல்லது அறிமுகம் இல்லாத தொடர்களில் இருந்து வரும் தேவையற்ற அழைப்புகளை தானாகவே தடுத்துவிடும்.

என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த அம்சம் சில (WhatsApp)  பயனாளர்கள் மத்தியில் சலசலபை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

மோசடி செய்பவர்கள் மட்டும் அறியப்படாத எண்களில் இருந்து அழைக்க மாட்டார்கள் அல்லவா எமர்ஜென்சி நேரத்தில் அல்லது நல்ல நோக்கங்களுக்காக கூட புதிய எண்களிலிருந்து whatsapp அழைப்புகள் மேற்கொள்ளப்படலாம் அல்லவா.

அது போன்ற நேரங்களில் (Silence unknown callers அம்சமானது ஒரு முட்டுக்கட்டையாக செயல்படலாம் அல்லவா.

இருந்தாலும் கூட பெரும்பான்மையான வாட்ஸப் பயனுள்ளர்களின் பக்கம் இருந்து யோசித்துப் பார்த்தால்.

இந்த புதிய அம்சம் தேவையற்ற அழைப்புகளால் அதிகரித்து வரும், கவலைகளை நிவர்த்தி செய்யும் என்பதில்,வாட்ஸ் அப் வாயிலாக மோசடிகள் செய்யப்படுவது ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Meta நிறுவனம் புதிய தரவரிசை கொள்கை என்ற அம்சத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது,இது வாட்ஸ் அப்பில் உள்ள அத்தியாவசியமான தரவரிசை கொள்கையில் பயனளர்களுக்கு வழி காட்டும் ஒரு அம்சம்.

Start Check என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனாளர்கள் தங்கள் குறு செய்தி அழைப்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை பலப்படுத்த முடியும்.

வாட்சப் (WhatsApp) நிறுவனத்தின் கூற்றின்படி புதிய தரவரிசை கொள்கை வழியாக பயனாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ற சரியான அளவில் பாதுகாப்பை தேர்வு செய்ய முடியும்.

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

ரூ 1000 உரிமைத் தொகை இப்படித்தான் கிடைக்குமா

புதிய ரேஷன் கார்டு வாங்கப்போகிறீர்களா?

செட்டிநாடு முட்டை கிரேவி மசாலா செய்வது

சருமத்தை இயற்கையாக பளபளப்பாக மாற்றுவது

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0