
New tuticorin furniture manufacturing park 2022
சர்வதேச பர்னிச்சர் பூங்கா பெல்ஜியம், ஜெர்மனி, நிறுவனங்கள் தயார், ஆரம்பமே அசத்தல்..!
இந்தியாவில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்களின் மூலம் முதலீட்டை ஈர்த்து, மாநிலத்தின் வர்த்தகம் உற்பத்தி, வேலைவாய்ப்பை மென்மேலும் உருவாக்கி வருகிறது.
மேலும் தமிழ்நாட்டு உள்நாட்டு வர்த்தகத்திற்கான பொருட்களை உற்பத்தி செய்வதை காட்டிலும் ஏற்றுமதி வர்த்தகத்தை சார்ந்த பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதுதான்.
நீண்டகால வளர்ச்சிக்கும், வர்த்தக வளர்ச்சிக்கும் சரியாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதனடிப்படையில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச பர்னிச்சர் பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச பர்னிச்சர் பூங்கா
இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த பூங்காவில் ஆரம்பத்திலே 2 வெளிநாட்டு நிறுவனமும் 1 உள்நாட்டு நிறுவனமும் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் சுமார் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000/- கோடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளதாக.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் இந்தியாவிலே முதன் முறையாக சர்வதேச பர்னிச்சர் பூங்கா தூத்துக்குடியில் தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Deceunick நிறுவனம்
இதேபோல் பெல்ஜியம் நாட்டின் Deceunick நிறுவனம் சுமார் பர்னிச்சர் உற்பத்திக்காக ரூபாய் 400 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த முதலீடு மூலம் Deceunick நிறுவனத்தின் தூத்துக்குடி உற்பத்தி நிறுவனத்தில் மட்டும் சுமார் நேரடி மற்றும் மறைமுகமாக 250 ஊழியர்களுக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Hettich Group நிறுவனம்
இந்த பர்னிச்சர் பூங்காவில் ஜெர்மன் நாட்டின் Hettich Group நிறுவனம் பர்னிச்சர்கள் உற்பத்திக்காக மற்றும் தைப்பதற்கு 700/-கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
மேலும் இந்த முதலீட்டு மூலம் சுமார் 730 புதிய ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ சென்சுரி சோபா லிமிடெட்
இந்தியா நிறுவனமான நியூ சென்சுரி சோபா லிமிடெட் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவில் 600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேரடி மற்றும் மறைமுக மாக தொழிற்சாலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக தூத்துக்குடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
சர்வதேச பர்னிச்சர் பூங்காவை தூத்துக்குடியில் உருவாக்க முக்கிய சில காரணங்களும் இருக்கின்றன.
ஏற்கனவே சென்னையில் அதிகப்படியான நெரிசல் மற்றும் மக்கள்தொகை அதிகமாக உள்ள நிலையில் இப்போது பல நிறுவனங்கள் ஓசூர், கோவை, நகரங்களுக்கு திருப்பி விடப்படுகிறது.
ஆனால் பர்னிச்சர் உற்பத்தி துறையில் தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முக்கியமான தேவை என்றால் அது ஏற்றுமதி.
இதனால் சர்வதேச பர்னிச்சர் பூங்காவை தூத்துக்குடியில் உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
கண்களைக் கவரும் புதிய மெஹந்தி டிசைன்கள் 2022
தூத்துக்குடி துறைமுகம் தமிழகத்தின் 2வது பெரிய துறைமுகம் இந்திய அளவில் 3வது பெரிய துறைமுகமாக இருக்கிறது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி க்கான தென்கிழக்கு நாடுகள்
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, போன்ற தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் நாடுகளிலிருந்து கப்பல்களுக்கும் தூத்துக்குடி துறைமுகம் நுழைவாயில்.
How to make egg fried rice recipe in tamil 2022
அதனால் சென்னை துறைமுகத்தை போலவே தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏற்றுமதி வர்த்தகத்தை அதிக அளவில் உருவாக்க வேண்டும்.
என்ற சர்வதேச பர்னிச்சர் பூங்கா துவக்கப் புள்ளியாக இருக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்.