
Newly constructed road Quality in tiruvannamalai
அண்ணாமலை வெளியிட்ட முக்கிய வீடியோவால் கடும் சிக்கலில் சிக்கிய தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள்.
திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாக தார் சாலை போடப்பட்டு உள்ளது, அந்த தார் சாலையை பெண் ஒருவர்.
வெறும் கையால் பெயர்த்து எடுக்கும் வீடியோவை தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் ஊர் கவுண்டனூர் ஊராட்சியில் அமைந்துள்ள குட்டூர் கிராமம் மலைகளால் சூழப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் சமூகத்தினர் குடும்பங்களுடன் இயற்கை சூழலில் வசித்து வருகிறார்கள்.
இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு,மருத்துவ வசதி உள்ளிட்டவற்றுக்கு ஊர்கவுண்டனூர் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு இதுவரை எந்த ஒரு தார் சாலையும் இல்லாமல் இருந்தது.
இதனால் குட்டூர் கிராமத்தினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
தங்கள் பகுதியில் புதிய தார்சாலை வசதி வேண்டும் என பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் துறையினர்.
எம்எல்ஏ, எம்பி அவர்களிடம் மனு அளித்தார்கள் எனினும் அவர்களுடைய கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்தது.
திமுக அரசால் சுமார் 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்த மலைவாழ் கிராமத்தில் சாலை போடப்பட்டது.
இதனால் அந்த மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள், இந்த சூழலில் தற்போது தார் சாலை போடப்பட்ட ஒரே வாரத்திற்குள் அதன் தரம் வெளியே தெரியத் தொடங்கிவிட்டது.
தார் சாலையில் பல இடங்களில் தானாகவே விரிசல் தொடங்கியுள்ளது, இதனிடையே இந்த சாலையில் ஒரு பகுதியை அந்த கிராமத்தை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர்.
தனது கையால் எளிதாகப் பெயர்த்து எடுத்தார் மேலும் மக்கள் பலரும் அந்த சாலையில் பதிக்கப்பட்டிருக்கும் கற்களை கையால் பெயர்த்து எடுத்தார்கள்.
இதனை வீடியோவாக பொதுமக்கள் எடுத்தார்கள் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதனால் அதிகப்படியான மக்கள் மற்றும் இளைஞர்கள் திமுக அரசை நோக்கி பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இதனை உன்னிப்பாக கவனித்து வந்த பாஜக
தமிழக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் திமுக அரசின் லட்சணத்தை பாருங்கள் என கேலிக்கூத்தாக சிரித்துக் கொண்டிருக்கிறார்.
பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் தமிழகத்திற்கு, நமது மத்திய அரசு இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் கோடி 2,269 ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது.
இப்பொழுது தமிழக அரசு தரமற்ற சாலையை போட்டு அதில் சுமார் 70 சதவீத அளவிற்கு பணத்தை திருடி உள்ளது என பாஜக கட்சி தலைவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இப்போது திமுகவின் இந்த அரசை பெருமளவு மக்கள் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் மனநிலை மாற்றம்
திரு மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அவ்வப்போது பல்வேறு வகையான சச்சரவுகளில் சிக்கிக் கொண்டிருப்பது வழக்கமாகி உள்ளது.
மு.க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றவுடன் தொடங்கி இதுவரை பல்வேறு வகையான சமூக பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டது.
குறிப்பாக மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் இந்த கட்சி சிக்கிக் கொள்வது வழக்கமாக உள்ளது.
தமிழகத்தில் அதிக வருமானம் கொடுக்கும் கைவினைத் தொழில்
இதனால் தமிழகத்தில் இப்போது திமுக அரசை பெருமளவு பொதுமக்கள் வெறுக்க தொடங்கியுள்ளார்கள்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அதிகப்படியான விலைவாசி உயர்வு, பெண்களை தகாத வார்த்தைகளில் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் திட்டுவது.
Rajinikanth becomes governor full details in tamil
அரசாங்க அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் அதிகரிப்பு என அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை பொதுமக்கள் அடுக்குகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் திமுக அரசை நோக்கி பல்வேறு கேள்விகள் எழுப்புகிறார்கள் மற்றும் கேலி கிண்டல் செய்கிறார்கள்.