
Nityananda asked Sri Lanka for medical assistance
காசு என்னுது இடம் உன்னுது இலங்கையிடம் மருத்துவ உதவி கேட்ட நித்தியானந்தா என்ன நடக்கிறது..!
தனக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று நித்யானந்தா இலங்கைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நித்யானந்தா கைலாசா என்னும் ஒரு நாட்டை உருவாக்கியுள்ளார் அதிபர் என்றும் தன்னை அறிவித்துக் கொண்டார்.
தற்போது இலங்கை அரசிடம் மருத்துவ உதவி கேட்டிருக்கிறார் என்ன நடக்கிறது உண்மையில்.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து பொறியியல் படித்து பிறகு சாமியாராக மாறிய நித்யானந்தாவின் கதை என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
நித்யானந்தா என்றாலே எப்பொழுதும் சர்ச்சையின் நிறைந்த முழு வடிவம் நாட்டில் பல பாலியல் புகார்களிலும் கடத்தல் வழக்குகளிலும்.
சர்ச்சைகளிலும் சிக்கி நித்யானந்தா இங்கு இருந்தால் தான் பிரச்சனை கொடுக்கிறார்கள் என்று நாட்டை விட்டு தப்பி.
கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அங்கு தற்போது தொண்டுகள் செய்து கொண்டிருக்கிறேன் என்று அறிவித்துள்ளார்.
நித்தியானந்தாவுக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது உலகம் முழுவதும்.
இப்பொழுது அதனை முழுவதும் இந்திய அரசு கைப்பற்றியுள்ளது வழக்குகள் நடைபெறுவதால் நித்யானந்தா பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.
கைலாசா நாட்டிற்கு தனி பணம்
கைலாசா நாட்டிற்கு தனியாக தங்க பொற்காசுகள் விசா என அறிவிப்பை வெளியிட்டு அதிரடியை செய்தார் நித்யானந்தா அதுமட்டுமின்றி கைலாசாவில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு இலவசமாக விசா என்றும் அறிவித்தார்.
தமிழ்நாட்டிலிருந்து கைலசாவிற்கு வருபவர்களுக்கு இலவசமாக விசா என்றும் மேலும் அவர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
கைலாசாவில் நித்யானந்தாவுடன் பலர் இருக்கிறார்கள் அங்கிருந்து புகைப்படத்தையும் அவர்கள் சமூக வலைத்தளம் மூலம் அனுப்புகிறார்கள்.
இலங்கையிடம் மருத்துவ உதவி
இந்த நிலையில் இலங்கையிடம் மருத்துவ உதவி கேட்டு நித்யானந்தா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தமக்கு உடல்நலம் சரியில்லை எனவே அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது.
சிகிச்சைக்கான மொத்த செலவையும் மற்றும் அனைத்து மருந்துகளுக்கான செலவையும் தனது சொர்க்க பூமியான கைலாசா ஏற்றுக்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமாதி நிலையை அடைந்தார் நித்தியானந்தா
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் சமாதி நிலை அடைந்து விட்டதாகவும் நித்யானந்தா தெரிவித்தார்.
இதனால் அவரை பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
ஆனால் சில நாட்களில் தனக்கு ஒன்றும் இல்லை எனவும் நான் திரும்பி வந்துட்டேன் எனவும் நித்யானந்தா தன் கைப்பட எழுதிய கடிதத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்.
முன்னதாக பழமையான கலாச்சாரம் இந்துக்களுக்கான முதல் நாடான கைலாச நாடு மத சுதந்திரம் மாற்ற உரிமைகள் இளைஞர்களுக்கான தலைமை கல்வி.
கல்வி உரிமை பரிமாற்றம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட இருக்கிறது என்று கைலாச சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வருவாரா நித்யானந்தா
நித்யானந்தா இப்பொழுது இந்தியா வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு இருக்கிறார் எனவும் முதலில் இலங்கை வந்த பிறகு.
உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா..!
அந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வகையில் சில மாதங்கள் தங்கி அங்கிருந்து இந்தியாவிற்கு வருவதற்கான வழிகளை அவர் கண்டுபிடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
AIADMK general committee case Madras High Court
நித்யானந்தாவிடம் தற்போது பாஸ்போர்ட் இல்லை அவர் விமானம் மூலம் மற்ற நாடுகளுக்கு செல்ல வழியில்லை எனவே அவர் கப்பல் மூலம் மட்டுமே பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.