செய்திகள்

நெய்வேலி நெல் பயிர்கள் அழிப்பதை பார்த்து அழுகை வந்தது 2 மாதம் காத்திருக்க முடியாதா?NLC wait for two months to harvest the paddy crop

NLC wait for two months to harvest the paddy crop

NLC wait for two months to harvest the paddy crop

நெய்வேலி நெல் பயிர்கள் அழிப்பதை பார்த்து அழுகை வந்தது 2 மாதம் காத்திருக்க முடியாதா?உயர் நீதிமன்ற நீதிபதி கடுமையான அதிருப்தியான கேள்விகளை அடுக்கினார்..!

நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுந்த நீதிபதி தான் பயன்படுத்தும் ACயை ஒரு நாள் அனைத்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

நெய்வேலியில் நெற்பயிர்களை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து கடுமையான அதிர்ச்சியை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்.

பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

என்எல்சி நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தம் போராட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி.

என்எல்சி தரப்பில் அவசர மனு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது,இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக.

ஆதாரத்துடன் தெரிவித்தார்கள் வழக்கை விசாரித்த நீதிபதி என்எல்சி நிறுவனம் மற்றும் அங்கு பணிக்கு செல்ல ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில்.

கடலூர் மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இது தொடர்பாக ஆகஸ்ட் 3ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளார்,என்எல்சி பணியாளர்களுக்கு அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்து.

அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள் என்றும் அதற்காக கொஞ்சம் பணத்தையும் செலவிடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

எதிர்காலத்தை நினைத்து கண்ணீர் விடுவதாக நீதிபதி

என்எல்சி நிறுவனத்திற்காக கைப்பற்றப்பட்ட நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிலத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கைப்பற்றப்பட்ட நிலத்திற்கு.

10 ஆண்டுகளுக்கு முன்பாக இழப்பீடு தொகை கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது நிலத்தை சுவாதீனம் எடுக்க உரிமையாளர்கள் எதிர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது குறிப்பிட்ட நீதிபதி 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காமல் பயிரை அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாத என கேள்வி எழுப்பினார்.

பயிரிடப்பட்ட நிலத்தில் வாகனங்களை விட்டு கால்வாய் தோன்றும் பணிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போது அழுகை வந்ததாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகில் பயிர்கள் அழிக்கப்படுவதை தடுக்க முடியவில்லை என்றும்.

நிலத்தை எடுப்பதற்கு ஆயிர காரணங்கள் இருந்தாலும் பயிர்கள் அழிக்கப்படுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தனது வருத்தத்தை தெரிவித்தார்.

ஒரு பயிர் என்பது சாதாரண ஒரு செயலாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் வாழ்வாதாரத்திற்கு பயிர்கள் மிக முக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இழப்பீடுகள் பெற்றாலும் பயிர்கள் அழிக்கப்படுகிறது என கோபம் விவசாயிகளுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

நாம் உயிருடன் இருக்கும் காலத்தில் மிகப்பெரிய உணவு பஞ்சத்தை சந்திக்க நேரிடும் என்றும், அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக் கொள்வதை நாம் தலைமுறையிலே சந்திக்க போகிறோம் என்றும்.

அப்போது நிலக்கரி பயன்படாது என்பது தனது கருத்தாக நீதிபதி தெரிவித்தார்.

இதற்காக என்எல்சி நிறுவனம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை என்றும் தனது கருத்தில் தான் திட்டவட்டமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கல்கி எழுதிய நாவலின் அடிப்படையில் நீதிபதி

அமரர் கல்கி எழுதிய பொன்னின் செல்வன் நாவலில் கதாபாத்திரங்கள் பயணிக்கும் நெய்வேலி அணைக்கரையை ஒட்டி கொள்ளிடம் பாய்ந்து ஓடும் அழகை மறக்க முடியாது என குறிப்பிட்ட அவர்.

அந்த இடங்கள் எல்லாம் தற்போது பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தனது வேதனையை குறிப்பிட்டார்.

நீங்கள் எதிர்கால உணவு பஞ்சத்தின் ஆபத்தை உணராமல் தோண்டிக்கொண்டே இருக்கிறீர்கள் என வேதனை தெரிவித்த நீதிபதி சோழநாடு ஒரு காலத்தில் சோருடைய என்று பெருமை கொண்ட நாடு.

என்எல்சி போன்ற நிறுவனங்களால் இந்த பகுதிகள் அழிக்கப்படுவதாக கவலை தெரிவித்தார்.

பூமியை தோண்டி நிலக்கரி, மீத்தேன், என ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டே இருந்தால் அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்பதுதான் இயற்கை ஆழ்வார்கள் பெரும்பான்மையான கேள்வியாகவும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் கை வைத்தால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு மழை நீர் கிடைக்காது என்றும் தெரிவித்தார்.

காவேரி டெல்டா, தாமிரபரணி பகுதி, வட தமிழகத்தில், சில பகுதிகள் போன்ற மூன்று இடங்களில் தான் பாசனம் உள்ளதாகும் அதை அழித்துவிட்டால் அரிசி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தை வைத்து ராஜா போல் வாழ்ந்தார், நீங்கள் விவசாயிக்கு பல மடங்கு பணம் கொடுத்தாலும் மற்றவர்களிடம் வேலை பார்க்க மனமில்லாமல் ஊரைவிட்டு சென்று விடுவதாகவும்.

சொந்த ஊரைவிட்டு வெளியில் போனால் அவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மக்கள் பாதிக்கப்படுவதை அரசு அதிகாரிகள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் இயந்திரத்தனமாக செயல்படுவதாகவும் தனது கருத்தை தெரிவித்தார்.

அப்பொழுது குறிப்பிட்ட என்எல்சி தரப்பில் ஆஜரான நீதிபதி நீங்கள் பயன்படுத்தும் மின்விளக்கு, குளிர்சாதன பெட்டி, ஆகியவற்றிற்கு நிலக்கரி எடுப்பதனால் மின்சாரம் கிடைக்கிறது என குறிப்பிட்டார்.

இதை கேட்ட நீதிபதி இன்று நான் நாள் முழுவதும் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்தப்படுவதில்லை என தெரிவித்தார்.

பூமிக்கு அடியில் இருக்கக்கூடிய அனைவரும் ஏசி காற்றில் வாழ்வதில்லை என்றும்.

புங்கை மரம், வேப்பமரம், ஆலமரக் காற்றில், இளைப்பாற்றுபவர்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட நாட்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட நீதிபதி இதை அதிகாரிகள் உணரும்படி எடுத்துக் கூறுங்கள் என தெரிவித்தார்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Morning drinks to lower bad cholesterol

How to change Passport photo in tamil

How to renew your old Passport in online 2023

tn rs 1000 scheme how to get form in tamil

How Check PAN card Misuse in tamil 2023

What is your reaction?

Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0