
Odisha train accident caused by electrical interlocking
இவ்வளவு பெரிய விபத்திற்கு இந்த சிறிய குறைபாடு தான் காரணமா சிபிஐ விசாரணை துவங்கும் முன்பே உண்மை வெளிவந்தது..!
ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டு உள்ள நிலையில் இந்த விபத்து குறித்த முக்கியமான காரணம் ஒன்று வெளியாகி உள்ளது.
எலக்ட்ரானிக் இன்டெர்லாக்கிங் சிஸ்டத்தில் உள்ள குழப்பம் தான் இந்த விபத்திற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதே நேரத்தில் இதற்கு பின்னால் சதி வேலை கூட நிகழ்த்திருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது இது குறித்து விரிவாக காணலாம்.
2ம் தேதி ஒடிசா மாநிலம் பலசூர் பகுதியில் கொல்கத்தா சாலிமர் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர் ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் கிட்டத்தட்ட 270 நபர்கள் உயிரிழந்தார்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
இந்த சம்பவம் இந்தியாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது இவ்வளவு பெரிய கோர சம்பவம் நடந்ததற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் இந்த ரயில்களில் கவர் தொழில்நுட்பம் இல்லாமல் இருப்பதே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்பட்டு வந்தது.
ஆனால் ரயில்வே நிர்வாகம் இதை முற்றிலும் மறுத்து விட்டது கவர்ச்சி தொழில்நுட்பத்தால் இந்த விபத்தை தடுத்து இருக்க முடியாது என தெளிவாக தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட விபத்து ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்டதாகும் இதை கவச் தொழில்நுட்பத்தால் தடுக்க முடியாது தற்போது இந்த ரயில் ஏன் தடம் புரண்டது என்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அளித்த பேட்டியில் ரயில்வே கமிஷனர் நடத்தி விசாரணையில்.
எலக்ட்ரிக் இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட குளறுபடியை இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என தெளிவாக தெரிய வந்துள்ளது.
இன்டெர் லாக்கிங் முறை என்றால் என்ன?
எலக்ட்ரிக் இன்டெர் லாக்கிங் முறை என்பது இரண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு நடுவே உள்ள ரயில் தண்டவாளத்தில்.
எந்த ரயிலை அனுமதிக்க வேண்டுமென இது ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் சேர்ந்து கட்டுப்படக்கூடிய ஒரு சிக்னலின் சிஸ்டம் தான் இந்த எலக்ட்ரிக் இன்டெர் லாக்கிங் முறை.
இந்த இன்டர் லாக்கிங் சிஸ்ட முறையால் ரயில் எதிரெதிரே வந்து மோதிக்கொள்ளும் விபத்தை தடுக்க முடியும் இந்த முறை தான் இந்திய முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பிட்டு விபத்து நடந்த இடத்திலும் இதை இன்டர்லாக்கிங் முறைதான் பயன்படுத்தப்பட்டது,இதில் ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தற்போது ரயில்வே நிர்வாகம் கருதுகிறது.
இந்த இன்டெர் லாக்கிங் சிஸ்டம் என்பதை தற்போது கண்டுபிடிக்க புதிய முறையெல்லாம் இல்லை பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு நடைமுறைதான்.
ஆனால் அப்பொழுது இது மேனுவலாக அதாவது மனிதர்களாக இயக்கப்பட்ட சிஸ்டமாக இருந்தது இப்போது இது எலக்ட்ரிக்கல் முறையில் இன்டர் லாக் என்பது ஒரு சாவின் மூலம் லாக் செய்து.
ஸ்டேஷன் மாஸ்டருக்கு உள்ள தொடர்பு
அந்த சாவியை ரயிலில் உள்ள ஓட்டுனரிடம் ஒரு வளையம் போன்ற அமைப்பில் கட்டி அனுப்புவார்கள்.
அந்த ரயில் ஓட்டுநர் அடுத்த ஸ்டேஷனிற்கு சென்ற பிறகு இந்த சாவியை ஸ்டேஷன் மாஸ்டர் இடம் பொறுப்பில் இருப்பவர்களும் ஒப்படைப்பார்.
அவர் இந்த லாகின் முறையை அடுத்து ரிலீஸ் செய்ய முடியும் இப்படியாக இந்த இன்டெர் லாக்கிங் தற்போது நவீனப்படுத்தி எலக்ட்ரானிக் இன்டெர் லாகின் முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது.
இப்பொழுது இந்த சாவியை அடுத்த ஸ்டேஷன்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் இல்லை ஒரு முறை இங்கு லாக் செய்துவிட்டால்.
அடுத்த ஸ்டேஷனில் உள்ள இந்த லாகின் சிஸ்டம் தானாக லாக் ஆகிவிடும் அதை அன்லாக் செய்ய முடியாது ரயில் கடந்த பின்பு தான் அதை அன்லாக் செய்ய முடியும்.
இதில் ஒரே நேரத்தில் இரண்டு சிஸ்டமும் அன்லாக் அல்லது லாக் ஆகிவிட்டால் தானாக அனைத்து சிக்னல்களும் சிவப்பு நிறத்திற்கு சென்று விடும்படி செட் அமைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் சிக்னல் எல்லாம் சிவப்பு நிறத்திற்கு சென்று விடும்.
ரயில்கள் எல்லாம் தற்போது இருக்கும் நிலையிலேயே நின்றுவிடும் இதனால் விபத்துகளை தடுக்க முடியும் என்பதற்காக இந்த சிஸ்டம் இவ்வாறு வடிவமைக்கப்பட்டது.
இரண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு நடுவே அதிகமான தூரம் இருந்தால் ஒரு ஸ்டேஷனில் இருந்து ரயில் கிளம்பி மற்றொரு ஸ்டேஷன் வந்த பின்பு தான் எதிர் திசையில் வர முடியும் என்ற நிலை இருந்ததால்.
அதிக நேரம் ரயில் காத்திருக்க வேண்டும் இதற்காக இரண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே லூப் லைன் என்ற செட்டப் இருக்கும்.
அதாவது மெயில் இருந்து பக்கவாட்டில் சிறிது தூரம் வரை லூப் லைன் தண்டவாளங்கள் இருக்கும்.
ஒரு ஸ்டேஷனில் இருந்து ரயில் கிளம்பியதும் அது லூப் லைன் வரை சென்று மெயின் லைனில் இருந்து மாறி லூப்லைனில் காத்திருக்கும் எதிர்ப்புறம் மற்றொரு ரயில் கடந்து சென்ற பிறகு.
இந்த ரயில் லூப் லைனில் இருந்து மீண்டும் மேல் லைனுக்கு மாறி தொடர்ந்து அடுத்த ஸ்டேஷனுக்கு பயணிக்கும் இந்த நடைமுறை இந்தியா முழுவதும் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த லூப் லைன் உள்ள பாதைகளில் ஒரு ரயில் லுப் லைனுக்கு மாற வேண்டுமா அல்லது மெயின் பாதையிலே செல்ல வேண்டுமா என்பது எலக்ட்ரிக் பைண்டிங் சிஸ்டம் மூலம் ரயிலின் ஓட்டுனருக்கு தெரிவிக்கப்படும்.
குறிப்பிட்ட விபத்தில் சரக்கு ரயில் லுப் லைனில் நின்றுள்ளது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக லூப் லைனில் தடம் புரண்டு உள்ளது இது எப்படி நடந்தது என்று தான் விசாரணை நடந்து வருகிறது.
எலக்ட்ரானிக் பைண்டிங் சிஸ்டத்தில் உள்ள குறைபாடா அல்லது இதற்கு பின்னால் ஏதாவது சதி வேலை இருக்கிறதா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் இந்த விபத்து குறித்த பல தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது,இதை மக்கள் நம்பக்கூடாது போலியான தகவல்களை புறம் தள்ள வேண்டும்.