
OLA electric scooter delivery starting 2022
எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒருவழியாக தொடங்கியது வாடிக்கையாளர்கள் பெரும் உற்சாகம்..!
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கியுள்ளது இது குறித்து முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு வழியாக தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
முன்னதாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் டெலிவரி பணிகள் அக்டோபர் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என அந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது ஆனால் சிப் பற்றாக்குறை காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில் ஒரு வழியாக தற்போது டெலிவரி பணிகள் தொடங்கியுள்ளன ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர களுக்கு வழக்கமான டீலர்ஷிப் பணியை பின்பற்றவில்லை.
ஆனால் அதற்கு பதிலாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நேரடியாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை சர்வீஸ் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு தோன்றும், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சர்வீஸ்செய்ய வேண்டுமென்றால் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சர்வீஸ் செய்யக்கூடிய நபர் உங்கள் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து கொடுத்துவிடுவார் சர்வீஸ் வீட்டில்தான் நடைபெறும்.
இப்பொழுது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்யும் பணிகளும் வேகமாக நடைபெறத் தொடங்கியுள்ளன.
எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்வதற்கான அடுத்த புக்கிங் தொடக்கம் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது ஆனால் இதற்கான சரியான தேதியை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போதைய நிலையில் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது, அவற்றுக்கு s1 மற்றும் s1pro என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டன, இதில் s1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோ மீட்டர்.
பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோமீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3.6 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
இப்பொழுது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒருமுறை நிரப்பினால் 120 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என அந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வகையான டிரைவிங் மோடு வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம் ஓலா எஸ் ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிலோமீட்டர்களாக இருக்கிறது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 40 கிலோமீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும்.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யலாம்.
ஓலா s1 pro மாடல்
s1 pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலாக ஒரு டிரைவிங் மோடு வழங்கப்படுகிறது, அந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கூடுதல் வண்ண தேர்வுகளும் இதில் இருக்கிறது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஹில்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர டிஜிட்டல் கி குரல் கட்டளைகள், மொபைல் போன் கனெக்டிவிட்டி, நேவிகேஷன் மற்றும் 7 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளிட்ட வசதிகளையும் நீங்கள் இந்த வாகனத்தை பெற்றால் அனுபவிக்கலாம்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தமிழகத்தில் தனது மிகப்பெரிய பிரம்மாண்டமான தொழிற்சாலையை அமைத்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.
Signs might indicate your liver disease in tamil
மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை பலமடங்கு அதிகரிப்பதற்கு இரு அரசுகளும் மானியங்களை கொடுக்கிறது.