
Old pension scheme for Government employees in tn
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு..!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது குறித்து.
ஆராய வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது, இந்த குழு அறிக்கையை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று, தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியது.
அதன்படி இனி ஓய்வு ஊதியம் கிடையாது, பணிக்காலத்தில் பிடித்தம் செய்த தொகை மட்டுமே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது அரசு ஊழியர்களுக்கு இடையே மிகப்பெரிய ஒரு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதனை எதிர்த்து அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அரசுக்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இன்றுவரை வலியுறுத்துகிறார்கள்.
இந்த நிலையில் தான் தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது.
திரு மு க ஸ்டாலின் அவர்கள் திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் மீண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார்.
பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கை
தற்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எந்த ஒரு செய்தியும் வெளியிடப்படவில்லை.
இந்த திட்டத்தையும் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படவில்லை, வாக்குறுதி அளித்தபடி.
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து ஆராய அரசு சார்பாக வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அரசு ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், நிர்வாகிகளிடம், பழைய ஓய்வூதியத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்து உள்ளது.
இந்தக் குழு அவர்களின் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக அரசிடம் அறிக்கையாக தற்போது சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களுக்கு இடையில் எழுந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் இந்த பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பாக ராஜஸ்தான், ஜார்கண்ட், போன்ற மாநிலங்களில்.
அரசுக்குப் பெரும் சுமையாக அமையும்
இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் தேவைப்படும் ஆண்டுதோறும் இதற்காக தனியாக ஒரு பட்ஜெட் அமல்படுத்தப்பட வேண்டும்.
மாரடைப்பு வருவதற்கான முக்கிய அறிகுறிகள்
இதனால் தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம், காரணம் மேலும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரசு பணியில் சேர்வதற்கு முயற்சி செய்வார்கள்.
what are the symptoms in gas trouble in tamil
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் தெரிவித்துள்ளார்.