
OPS has so many problems with Chennai High Court judgement
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் எடப்பாடிபழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
மீண்டும் எடப்பாடி கே பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி பெரும் சிக்கலில் சிக்கிய ஓபிஎஸ் என்ன நடக்கிறது அதிமுகவில்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மேலோட்டமாக பார்த்தால் பன்னீர்செல்வத்துக்கு சாதமாக இருந்தாலும் கூட.
இதனால் அதிக பலம் பெறுவது இபிஎஸ் மட்டுமே, இந்த தீர்ப்பின் முழு வடிவத்தையும் இப்பொழுது பார்க்கலாம்.
ஏற்கனவே கூட்டிய பொதுக்குழு சட்டப்பூர்வமாக செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டு இருந்தாலும், அவர் சட்டபூர்வமாக மீண்டும் பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமையை உருவாக்கலாம் என்ற நிலை இருக்கிறது.
ஒற்றை தலைமை தொடர்பான திட்டங்களை பொதுக்குழுவில் மேற்கொள்ள தடைகள் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சமாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சந்தோஷமாக இருந்தாலும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் இனிவரும் காலங்களில்.
அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் மீண்டும் பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை என்ற முடிவை எடுத்தால்.
அதில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது அதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது, அந்த தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாது.
என்ற ஒரு முக்கியமான அம்சத்தை தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதால்.
வெளியில் சந்தோஷமாக இருந்தாலும் ஓபிஎஸ் தரப்பில் இப்பொழுது பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டோம் என்ற மன வருத்தம் அதிகமாகவே இருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விவரம்
எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த ஜூலை 11-ஆம் தேதி கூட்டிய பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அம்மன் வைரமுத்து ஆகியோர் சார்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது.
இதனால் பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்றும் அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரட்டை தலைமையே தொடரும்
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் ஒற்றை தலைமையாக ஈபிஎஸ் உருவெடுத்து இருந்தாலும் அது செல்லாமல் போய்விட்டது.
மீண்டும் இரட்டை தலைமையே தொடர்வது உறுதியாகியுள்ளது, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மேற்கொண்ட நியமனங்கள் அனைத்தும் ரத்தாகி உள்ளது.
தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமைந்துள்ளது
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடிபழனிசாமி இருப்பார்கள் என்றும் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளதால்.
ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் சந்தோஷம் அடைந்துள்ளனர் அதேநேரம் ஓபிஎஸ்க்கு சாதகமாகவும் எல்லாம் இந்த தீர்ப்பு இல்லை.
அதில் அவர்கள் கொண்டாட எதுவும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்து வருகிறார்கள், அதுவும் ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையான விஷயம் தான்.
கட்டாயம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் இரு தலைவர்களின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது என தெளிவாக தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு சதவீதம் பகுதியினர் கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தால்.
அதனை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்டாயம் மறுக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
பெரும் சிக்கலில் சிக்கிய ஓ பன்னீர்செல்வம்
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் கருத்து வேறுபாட்டுடன் செயல்பட்டால் பொதுக்குழுவை கூட்ட.
ஒரு புதிய ஆணையரை நியமிக்கும் படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கூட்டப்படும் பொதுக்குழுவில்.
ஒற்றை தலைமை குறித்து விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு எந்த தடையுமில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ்-க்கு ஏற்படுத்திய சிக்கல்
இந்தத் தீர்ப்பின் மூலம் ஓபிஎஸ்-க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது காரணம் இப்பொழுது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால்.
அவர்கள் எந்த நேரத்திலும் பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் கோரிக்கை வைக்கலாம்.
அந்த கோரிக்கையை நிராகரிக்க கூடாது மற்றும் மறுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு ஓபிஎஸ்-க்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட ஆணையரை நியமிக்கலாம்
ஒருவேளை ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவை கூட்ட மறுத்தால் சட்ட ஆணையரை நியமித்து இபிஎஸ் தரப்பு பொதுக்குழுவை கூட்ட முயற்சிக்கும்.
அப்போது பொதுக்குழுவில் பெரும்பான்மை ஆதரவு இபிஎஸ் பக்கம் இருந்தால் ஓபிஎஸ் இந்நிலைமை கேள்விக்குறியாகும்.
ஆண்மை அதிகரிக்க சிறந்த இயற்கை உணவுகள்..!
இந்த அம்சம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கை கொடுக்கும் என்பதால், ஓபிஎஸ் இது குறித்து அவசர அவசரமாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
எடப்பாடி வைத்திருக்கும் புதிய மெகா டுவிஸ்ட்
பொதுக்குழுவை கூட்டினாலும் ஈபிஎஸ்க்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் அவரை ஒற்றை தலைமையாக வரலாம் என்பதால் இந்த விஷயத்தில் சற்று நிதானமாக முடிவு எடுக்க வேண்டுமென்றும் ஓபிஎஸ் தரப்பு தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது.
Prime Minister Narendra Modi assets details in tamil
அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, தினகரன், உள்ளிட்ட அனைவரும் இணைந்து மீண்டும் அம்மாவின் ஆட்சிக்கு இணங்க.
கட்சியை வழிநடத்தி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.