Uncategorized

Organic farming Green Chilli Cultivation Method

Organic farming Green Chilli Cultivation Method

Organic farming Green Chilli Cultivation Method

பச்சை மிளகாய் புதிய சாகுபடி முறையில் அதிக மகசூல் மற்றும் வருமானம் பெற முடியும்..!

பச்சை மிளகாய் பொதுவாக அன்றாட உணவுகளில் அதிக பயன்படக்கூடிய ஒரு தவிர்க்க முடியாத பொருள்.

இந்த பச்சை மிளகாய் சைவம் மற்றும் அசைவ உணவுகள் என்று இரண்டுக்கும் அதிக அளவு பயன்படக்கூடிய உணவுப்பொருள் எனவே நீங்கள் இயற்கை விவசாயத்தில் பயிரிடும்போது.

அதிக வருமானம் பெற இயலும் இதன் மூலம், பச்சை மிளகாய் சாகுபடி பொருத்தவரை நன்கு, தெரிந்தவராக இருந்தால் அனைத்து காலகட்டத்திலும் இதில் சாதிக்க முடியும்.

பச்சை மிளகாய் இயற்கை முறையில் சாகுபடி செய்தால் இதற்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது அது மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த பச்சை மிளகாய் சாகுபடி முறைகளைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டால் அனைத்து காலகட்டங்களிலும் இதனை நல்ல முறையில் சாகுபடி செய்து வருமானம் ஈட்ட முடியும்.

Organic farming Green Chilli Cultivation Method

நிலம்

மானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் பச்சை மிளகாய் முக்கியப் பயிராக இருக்கிறது கர்நாடகம், ஆந்திரம், ஆகிய மாநிலங்களில் அதிக பரப்பளவில் மாணவராக சாகுபடி நடைபெறுகிறது.

இதில் சம்பா ரகங்களை விட மானாவாரி அதிகம் இருப்பினும், நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் சாகுபடி செய்ய ஏற்றது.

பச்சை மிளகாய் சாகுபடியில் ஆரம்ப விதை முளைத்தல், இளம் செடிகளின் வளர்ச்சி, ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மானாவாரி நாற்றங்காலில் ஏற்படும் பயிர் இழப்பு, ஆகியவை முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது.

இரகங்கள்

பச்சை மிளகாய் ரகங்களைப் பொறுத்தவரை கே1, கே2, போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்கள், நாட்டு முரண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும், பச்சை மிளகாய் சாகுபடி செய்ய ஏற்ற இரகங்களாக அதுமட்டுமில்லாமல் அதிக மகசூல் கொடுக்கக்கூடியதாக இப்பொழுது இந்தியாவில் இருக்கிறது.

பருவ காலங்கள் என்ன

ஜனவரி, பிப்ரவரி, ஜூன்-ஜூலை செப்டம்பர் போன்ற மாதங்கள் சிறந்த பருவகாலங்கள் ஆனால் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் பச்சைமிளகாய் எல்லா காலங்களிலும் பயிரிட்டு அதிக மகசூலை பெற்றுவிடுகிறார்கள்.

என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள், மண் நல்ல வடிகால் வசதியுடன் இருமண்பாடுகொண்ட 6.5-7.5 வரை கார அமிலத்தன்மை உள்ள நிலம் பச்சை மிளகாய் அதிக அளவில் மகசூல் செய்வதற்கு சிறந்த நிலமாக இருக்கிறது.

Organic farming Green Chilli Cultivation Method

விதை அளவு எவ்வளவு

ஏக்கருக்கு விதை அளவு 400 கிராம் போதுமானதாக இருக்கிறது 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிர் உரத்தை,20 கிலோ தொழு உரத்துடன் கலந்து விதைத்த பின் நிலத்தில் போதுமான ஈரம் இருக்கும் பொழுது நன்கு தூவ வேண்டும்.

அடியுரம்

அடி உரம் ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 52 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ், ஆகியவை இட்டுக் கொள்ள வேண்டும்.

நிலத்தை நன்கு தயாரிப்பது எப்படி

நன்கு பொடியாக்கப்பட்ட உழுது தயார் செய்யப்பட்ட நிலங்களில் புழுதியில் விதைகளை கை வரிசையில் பருவ மழைக்கு முன்னர் விதைத்து விட வேண்டும்.

மேலும் நடவு சாகுபடி முறையில் சிபாரிசு செய்யப்படும் உர அளவில், பாதி மட்டுமே மானாவாரி மிளகாய்க்கு இட வேண்டும்.

பயிர் முளைத்து 45ஆம் நாள் களை எடுக்கும்போது மேலுரமாக 45 கிலோ யூரியா இட வேண்டும்.

மேலுரம் இடும்போது மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும், பயிர் முளைத்த 30 ஆம் நாள் களை எடுக்க தொடங்கிவிடலாம்.

என்ன செய்யவேண்டும் பயிர் பாதுகாப்பிற்கு

பிஞ்சுகள் உதிர்வதைத் தவிர்க்கவும், பூக்கள் அடிக்கடி கொட்டுவதை தடுக்கவும், பச்சை மிளகாய் சாகுபடி செய்த 90 மற்றும் 120 ஆம் நாளில் பிளானோபிக்ஸ்.

வளர்ச்சி ஊக்கி மருந்தை 4.5 லிட்டர் நீரில் ஒரு மில்லி லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து பிஞ்சுகள் மற்றும் பூக்கள் மேல் படும்படி தெளிக்க வேண்டும்.

வளர்ச்சி ஊக்க மருந்துடன் கலக்கும் நீர் உப்பு நீராக இருக்கக் கூடாது என்பதை நீங்கள் கவனமாக இருக்கவேண்டும், நிலத்தில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்.

பூச்சி வகைகள் என்ன

இலைப்பேன், அசுவினி, காய்ப்புழு, போன்ற பூச்சி வகைகள் பச்சை மிளகாய், செடி மற்றும் பூக்கள் பிஞ்சுகளை தாக்கும்.

அசுவினி

இவை கூட்டமாக இலையின் மேல், குழுக்களின் பூ மொட்டுகளில், மற்றும் காய்களில் காணப்படும். அஸ்வினியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 கிராம் 200 கிராம் மில்லி லிட்டர் தெளிக்க வேண்டும்.

காய்ப்புழு

புரடீனியா மற்றும் பச்சைக் காய்ப் புழுக்கள் இலைகளையும் காய்களையும் தின்று பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும்.

ஆமணக்கு செடி வளர்ப்பு ஓரத்தில் பொறிப் பயிராக விளைவித்து புரடீனியா பூச்சியின் முட்டைக் குவியல்களைக் கவர்ந்து அழித்துவிட முடியும்.

வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் சோப்பு போன்ற ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளித்து விட்டால் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.

இலைப்பேன்

இவை இலையைச் சுருட்டி சாற்றை உறிஞ்சி விடும் என்பதால் இவற்றை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் ஏக்கருக்கு 200 மில்லிலிட்டர் தெளிக்கலாம்.

பச்சை மிளகாய் மொசை நோய் என்றால் என்ன

இதில் குறிப்பாக அஸ்வினியை கட்டுப்படுத்த வேண்டும் மேலும் அசுவினி இலைப்பேன் கட்டுப்படுத்திட மெதில் டெமட்டான் 25 மில்லி லிட்டர், மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து மூன்று முறை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வெள்ளை அரிசியைவிட கருப்பு அரிசி தான் சிறந்தது ஏன்.

அறுவடைக் காலம்

பச்சை மிளகாய் சாகுபடி செய்த 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களில் பழுத்த பழங்களை அறுவடை செய்ய தொடங்கலாம்.

How to reduce belly fat quickly in tamil

3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யமுடியும் முதல் இரண்டு அறுவடைகளில் பச்சை மிளகாயையும் அடுத்து அறுவடைகளில் பழுத்த மிளகாய் அறுவடை செய்ய முடியும்.

மகசூல் அதிகரிக்க

மகசூலைப் பொருத்தவரை குறைந்தது 210 நாட்கள் முதல் 240 நாட்களில் ஏக்கருக்கு 10 முதல் 15 டன் பச்சை காய்களும் 2 முதல் 3 டன் காய்ந்த மிளகாய் வற்றல் மகசூலாகக் கிடைக்கும்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0